JUST IN 48 மணி நேரத்தில் ரூ 30.30 லட்சம் கட்ட நடிகர் தனுஷுக்கு நீதிபதி கெடு

JUST IN 48 மணி நேரத்தில் ரூ 30.30 லட்சம் கட்ட நடிகர் தனுஷுக்கு நீதிபதி கெடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு நுழைவு வரி விதிக்கப்படுவது வழக்கம்.

தான் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் விஜய்யை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதனையடுத்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். அத்துடன் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்குமாறு கோரியிருந்தார்.

அதில் தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்திற்கு தடை உத்தரவும் பெற்றார்.

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2016ல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நுழைவு வரியில் 50% செலுத்தும்படி தனுஷுக்கு உத்தரவிட்டது.

தனுஷும் அதன்படி செய்தார்.

50% வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

ஆனால், அதற்கு எந்தவித பதிலும் தனுஷ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனுஷ் தரப்பிலும் அரசு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று ஆகஸ்ட் 5க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

அதன்படி இன்றைய விசாரணையில்…

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷ்க்கு ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியதுதானே என நீதி கேட்டுள்ளார்.

என்ன தொழில் செய்கிறார் என மனுவில் தெரிவிக்காதது ஏன்?

சோப்பு, பெட்ரோல் வாங்கும் சாமான்ய மனிதர்கள் வரி செலுத்துகின்றனர், கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்?

இந்தியாவில் சாமானிய மனிதர்களுக்கு ஒரு சட்டம், நடிகர் தனுஷுக்கு ஒரு சட்டம் என்று இல்லை.

ரூ.50-க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார்கள்.

நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி விவரங்களை இன்று பிற்பகல் வணிகவரித்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு” என நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

நுழைவு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக நடிகர் தனுஷ் தரப்பு கூறியதை ஏற்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மறுப்பு.

இன்று பிற்பகல் விசாரணையில்…

சொகுசு காருக்கான நுழைவு வரி பாக்கி ரூ.30.30 லட்சத்தை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும் என நடிகர் தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

High Court has directed Actor Dhanush to pay the pending tax amount of ₹30 Lakhs within 48 hours.

நாலு மாசம் நாலு படம் ரிலீஸ்.. எல்லாமே ஓடிடி.; சூர்யா முடிவால் தியேட்டர் ஓனர்கள் அதிர்ச்சி

நாலு மாசம் நாலு படம் ரிலீஸ்.. எல்லாமே ஓடிடி.; சூர்யா முடிவால் தியேட்டர் ஓனர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் அமேசான் பிரைம் நிறுவனம் ஒப்பந்தம்

எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகிறது என்பதை அமேசான் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்நிறுவனம் நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெய் பீம்’, ‘உடன்பிறப்பே’, ‘ஓ மை டாக்’ மற்றும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இந்த திரைப்படங்களில் தமிழ் திரை உலகின் திறமையான நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மும்பை இந்தியா 05 ஆகஸ்ட் 2021

அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிறுவனம் இன்று சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடனான முதல் பிரத்யேக ஒப்பந்தத்தை அறிவிக்கிறது.

இதில் ஒரு பகுதியாக அடுத்த 4 மாதங்களில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் நான்கு திரைப்படங்கள் உலகளாவிய அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக திரையிடப்படுகிறது.

இந்திய பார்வையாளர்களின் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களின் தேடல்களுக்கான தேர்வு திட்டங்களில் தங்களுடைய அர்ப்பணிப்பை வழங்கும் இந்த சங்கமம், அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மொழி உள்ளடக்க தொகுப்பை மேலும் வலிமைப்படுத்தி, சிறந்த உள்நாட்டு கதைகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு செல்கிறது.

அமேசான் பிரைம் வீடியோவும், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வகையில் அவர்களின் நேரடி சேவையை வழங்கி வருகிறது.

திரில்லர், சஸ்பென்ஸ், காமெடி, ஃபேமிலி டிராமா என பல்வேறு ஜானர்களில் தயாராகி, பட்டியலிடப்பட்ட படங்களில் இந்தியாவின் மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்த திரைப்படங்களும் இடம் பிடித்திருக்கிறது.

இந்த திரைப்படங்களில் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் மணி கண்டன் ஆகியோருடன் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ போன்ற படங்களும் உள்ளன.

சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடித்த குடும்ப ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான ‘உடன்பிறப்பே’ என்ற படமும் உள்ளது.

அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய ‘ஓ மை டாக்’ என்ற படமும் இடம் பெற்றிருக்கிறது.

ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படமும் இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

‘அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் திரைப்படங்களி மிகப்பெரிய நூலகம் ஒன்று எங்களிடம் உள்ளது’ என அமேசான் பிரைம் வீடியோவின் இயக்குனரும், உள்ளடக்க தலைவருமான விஜய் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்…

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் உடன் நாங்கள் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் திரையுலகில் புதிய மைல்கல் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

அத்துடன் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் நான்கு திரைப்படங்களை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திலிருந்து நேரடியாக உலகளாவிய திரைப்பட பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கிறோம். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘சூரரை போற்று’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்களிடமிருந்து எதிர்பார்க்காத அளவில் அன்பும், ஆதரவும் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து உள்ளூர் மொழியிலான திரைப்படங்கள் கடந்த வருடத்தில் 50 சதவீத பார்வையாளர்களை சென்றடைந்து புதிய சாதனையை படைத்திருக்கிறோம்.

இவர்கள் தமிழக எல்லையை கடந்த பார்வையாளர்கள் என்பது குறிப்பிடதக்கது. உள்ளூர் மொழியில் நேரடியாக படங்களை வெளியிடுவதன் மூலம் 20 சதவீதம் வரை சர்வதேச பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

2டி என்டர்டெய்ன்மென்ட் போன்ற ஆக்கபூர்வமான பட நிறுவனத்துடனான எங்கள் வலுவான உறவு மேலும் தொடர்கிறது.

இதன் காரணமாக உள்நாட்டு, உள்ளூர் மொழியில் தயாராகும் கதைகளை, அதற்கான பார்வையாளர்களை கண்டறிந்து அவர்களிடத்தில் எடுத்துச் சென்றடைய வைப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.’ என்றார்.

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான சூர்யா இதுதொடர்பாக பேசுகையில்….

‘ கடந்த ஆண்டு பெரும் மாற்றமாக அமைந்தது. முன்னோடிகள் இல்லாத சூழ்நிலையில், திரைப்பட வெளியீட்டின் பல்வேறு புதுமைகளை நாங்கள் மேற்கொண்டோம். 2டி நிறுவனத்தின் அண்மைய திரைப்பட வெளியீடுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையாக அமேசான் இருக்கிறது.

‘பொன்மகள் வந்தாள்’ முதல் ‘சூரரைப் போற்று’ வரை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடைந்தது.

இதற்கு காரணமான அமேசான் பிரைம் வீடியோ உடன் தொடர்ந்து தொழில்ரீதியான ஒத்துழைப்பை நீட்டிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார்.

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் விவரங்களின் பட்டியல்கள்

ஜெய் பீம் (நவம்பர் 2021) த,செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’. ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். இது பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது.

அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்து வருகிறார்கள்.

ராஜககண்ணு போலீசாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனை தேடத் தொடங்குகிறாள்.

இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே ஜெய் பீம் கதை. ஒளிப்பதிவு எஸ்ஆர் கதிர், இசை ஷான் ரோல்டன், கலை கே கதிர் ,படத்தொகுப்பு பிலோமின், உடைகள் பூர்ணிமா ராமசாமி.

உடன்பிறப்பே (அக்டோபர் 2021)
இயக்குனர் இரா சரவணன் இயக்கிய திரைப்படம் ‘உடன்பிறப்பே’.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன் மற்றும் மாதங்கி ஆகியோருக்கு இடையேயான நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது.

நீதிக்காக வன்முறை வழியில் போராட வேண்டும் என வைரவனனும், சட்ட விதிகளின் படி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும் என மாதங்கியின் கணவர் சற்குணமும் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்கிடையேயான விரிசலை நீக்கவும், குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவும் மாதங்கி எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிறது.

இறுதியில் இந்த குடும்ப ஒற்றுமைக்காக மாதங்கி எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுதான் ‘உடன்பிறப்பே’. இசை =டி.இமான், ஒளிப்பதிவு =வேல்ராஜ், படத்தொகுப்பு= ரூபன், கலை இயக்கம் =முஜிபூர், உடைகள் =பூர்ணிமா ராமசாமி.

ஓ மை டாக் (டிசம்பர் 2021)
அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கிய இந்த திரைப்படம். குழந்தைகளின் உலகம், அவர்களின் ஆசை, துணிச்சல், தைரியம், நட்பு, நிபந்தனையற்ற அன்பு மற்றும் விஸ்வாசம் குறித்து பேசும் ஒரு அற்புதமான திரைப்படம். பிறவி குறைபாடு காரணமாக ஒரு நாய்க்குட்டியை அதன் எஜமானர்களால் கொல்ல உத்தரவிடப்படுகிறது.

ஆனால் அது இறுதியில் கொலையாளிகளிடமிருந்து தப்பிக்கிறது. ஒரு பையன் =அனைவராலும் வெறுக்கப்படுகிறான்.

நல்ல மாணவன் அல்ல, பக்கத்து வீட்டு அழகான பையனும் அல்ல. ஆனால் மிகவும் மகிழ்ச்சியான =அதிர்ஷ்ட குழந்தை. நாய்க்குட்டியும், அந்த பையனும் சந்திக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் இதயங்களை வென்று தங்களை தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கிறார்களா? என்பதே இப்படத்தின் கதை. ஒளிப்பதிவு கோபிநாத், இசை நிவாஸ் கே பிரசன்னா, எடிட்டர் மெகா, கலை மைக்கேல் ,உடைகள் வினோதினி பாண்டியன்

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் (செப்டம்பர் 2021)

இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கிய இந்த நகைச்சுவைத் திரைப்படம், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒரு கிராமத்தைப் பற்றிய செய்தி வெளியாகிறது.

ஆனால் அந்த கிராம மக்களுக்கு டிவி பார்க்க மின்சாரம் இல்லை. குனிமுத்து 35 வயதான அப்பாவி. விவசாயி. கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற தனது காளைகளை இழக்கிறார்.

அவருக்கும் அவரது மனைவி வீராயிக்கும் குழந்தைகளைப் போல் அந்த காளைகள் இருந்தது. அவர் தனது நண்பர் மாந்தினியுடன் தனது காளைகளை தேட தொடங்குகையில், அவர் தற்செயலாக நர்மதா என்ற நிருபரை சந்திக்கிறார். அவர் அவர்களுக்கு உதவுகிறார்.

பெரும் போராட்டத்தின் மத்தியில் காளைகளை கண்டுபிடிக்க வேண்டும். கிராமத்தையும் மேம்படுத்த வேண்டும். இது நடந்ததா? என்பதே இத்திரைப்படத்தின் கதை. ஒளிப்பதிவு சுகுமார், இசை கிரீஷ், படத்தொகுப்பு சரவணன், கலை முஜிபூர், உடைகள் வினோதினி பாண்டியன்.

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில்…

“அமேசான் பிரைம் வீடியோவுடன் மீண்டும் எங்களின் பயணம், மிகப்பெரிய ஒப்பந்தத்துடன் தொடர்கிறது. அமேசானுடன் இணைந்து பணியாற்றவதால் மகிழ்ச்சி அடைகிறோம்.

கொரோனா காலகட்டத்தில் மக்களை மகிழ்விக்க 2டி நிறுவனம் புதிய வழிகளை ஆராய்ந்து டிஜிட்டல் தளத்தை கண்டறிந்தோம்.

எப்போதும் புதிய வழிகளில் பயணிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். அமேசான் பிரைம் இவ்விஷயத்தில் எங்களுக்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது.’

Rajsekar Pandian, CEO of 2D Entertainment said…

“It is indeed immense pleasure associating with Amazon Prime Video once again with this path breaking deal.

At 2D we have always been adventurous in exploring new avenues to entertain people during the pandemic and Amazon Prime Video has been of great support to us.”

Amazon prime video’s path breaking deal with actor Suriya

JUST IN சாமானியர்களுக்கு ஒரு சட்டம் தனுஷுக்கு ஒரு சட்டமா?..; வரி விலக்கு கேட்ட தனுஷுக்கு நீதிபதி கண்டனம்

JUST IN சாமானியர்களுக்கு ஒரு சட்டம் தனுஷுக்கு ஒரு சட்டமா?..; வரி விலக்கு கேட்ட தனுஷுக்கு நீதிபதி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு நுழைவு வரி விதிக்கப்படுவது வழக்கம்.

தான் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் விஜய்யை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதனையடுத்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். அத்துடன் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்குமாறு கோரியிருந்தார்.

அதில் தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்திற்கு தடை உத்தரவும் பெற்றார்.

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2016ல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நுழைவு வரியில் 50% செலுத்தும்படி தனுஷுக்கு உத்தரவிட்டது.

50% வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

ஆனால், அதற்கு எந்தவித பதிலும் தனுஷ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனுஷ் தரப்பிலும் அரசு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று ஆகஸ்ட் 5க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

அதன்படி இன்றைய விசாரணையில்…

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷ்க்கு ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியதுதானே என நீதி கேட்டுள்ளார்.

என்ன தொழில் செய்கிறார் என மனுவில் தெரிவிக்காதது ஏன்?

சோப்பு, பெட்ரோல் வாங்கும் சாமான்ய மனிதர்கள் வரி செலுத்துகின்றனர், கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்?

இந்தியாவில் சாமானிய மனிதர்களுக்கு ஒரு சட்டம், நடிகர் தனுஷுக்கு ஒரு சட்டம் என்று இல்லை.

ரூ.50-க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார்கள்.

நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி விவரங்களை இன்று பிற்பகல் வணிகவரித்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு” என நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

நுழைவு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக நடிகர் தனுஷ் தரப்பு கூறியதை ஏற்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மறுப்பு.

Madras High Court ordered Dhanush to pay the entry tax in luxury car case.

கண்ணா இன்னும் ஒரே வாரம் தான்… பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..; ‘அண்ணாத்த’ கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ்

கண்ணா இன்னும் ஒரே வாரம் தான்… பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..; ‘அண்ணாத்த’ கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’.

இமான் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தா லக்னோவில் நடக்க உள்ளதாம்.

அங்கு சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் படமாக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவேதான் அதற்குள் டப்பிங் பணிகளை படக்குழு செய்து வருகிறதாம்.

இதனிடையில் ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் விரைவில் என படக்குழு அறிவித்தனர்.

எனவே அண்ணாத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் எப்போது வெளியாகும் என்று ரஜினி ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தனர். மேலும் இது தொடர்பாக டிரெண்டும் செய்தனர்.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும் ரஜினியின் 46 வருட திரையுலக வாழ்வை முன்னிட்டும் ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளதாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவையில்லாமல் ஆகஸ்ட்12-ந் தேதி டைரக்டர் சிவாவின் பிறந்த நாள் என்பதால் அதனையும் படக்குழு குறிப்பிட்டு வெளியிட உள்ளதாம்.

அண்ணாத்த தீபாவளி விருந்தாக 07-11-2021 அன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Annatthe first look release count down starts

D44 TITLE TREAT TOMORROW : தனுஷுடன் இணையும் 3 ரோஜாக்கள் 2 ராஜாக்கள்

D44 TITLE TREAT TOMORROW : தனுஷுடன் இணையும் 3 ரோஜாக்கள் 2 ராஜாக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர்.

இவர்தான் தனுஷின் D44 படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். தங்கமகன் படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் அனிருத் இணையும் படமிது.

தனுஷின் இந்த புதிய படத்தில் நித்யா மேனன் & ராஷி கண்ணா & பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்க உள்ளனர்.

மேலும் தனுஷுடன் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்பட டைட்டில் லுக் நாளை வெளியாக உள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் இவர்கள் இயக்குனர் யார் என்பதை அதில் குறிப்பிடவில்லை.

Dhanush D44 movie Title look tomorrow

ஒற்றைக்கால் பிரபுதேவாவை இயக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குனர்..; டைட்டில் என்ன தெரியுமா.?

ஒற்றைக்கால் பிரபுதேவாவை இயக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குனர்..; டைட்டில் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’.

இந்தப் படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக, ஒற்றைக்காலுடன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ‘பிக்பாஸ்’ பிரபலம் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, டி. இமான் இசையமைக்கிறார்.

ஆக்சன் எண்டர்டெய்ன்மெண்ட் ஜானரில் தயாராகும் இந்த படத்தை மினி ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார், டார்க் ரூம் பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

The first look poster of Prabhu Deva’s next film is out now

More Articles
Follows