தொழில்நுட்ப பணிகளின் வீடியோவை பகிர்ந்த ‘பொன்னியின் செல்வன் 2’ படக்குழு

தொழில்நுட்ப பணிகளின் வீடியோவை பகிர்ந்த ‘பொன்னியின் செல்வன் 2’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மார்ச் 29 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. படத்தின் ட்ரைலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடவுள்ளார்.

இந்தநிலையில், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரெய்லர் எவ்வாறு எடிட் செய்யப்பட்டது என்பது குறித்த BTS வீடியோவைப் பகிர்ந்து கொள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் மார்ச் 28 இன்று சமூக ஊடகங்களில் உள்ளது.

இந்த வீடியோ தொழில்நுட்பம் மற்றும் ஆடியோ வேலைகளின் ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது மற்றும் வீடியோவில் ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் ஆகியோர் தங்கள் காட்சிகளுக்கு டப்பிங் செய்கிறார்கள்.

Here’s how ‘Ponniyin Selvan 2’ trailer was made!

ஆகஸ்ட் 16 1947 பட விழாவில்.. அஜித் பற்றி சிவகார்த்திகேயன்.. விஜய் பற்றி முருகதாஸ்.; ரஜினி பற்றி பேசிய இருவர்

ஆகஸ்ட் 16 1947 பட விழாவில்.. அஜித் பற்றி சிவகார்த்திகேயன்.. விஜய் பற்றி முருகதாஸ்.; ரஜினி பற்றி பேசிய இருவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் பொன்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆகஸ்ட் 16 1947’.

இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் ரேவதி இணைந்து நடித்துள்ளனர்.

‘அருவி’ பட நாயகி அதிதி பாலனின் தங்கைதான் ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மார்ச் 27 மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அவர் முருகதாஸ் பற்றி பேசும்போது..” தன் உதவியாளருக்காக பல நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டவர் முருகதாஸ். இப்போது நான் ரங்கூன் இயக்குனருடன் ஒரு படம் செய்து கொண்டிருக்கிறேன். அவரை எனக்கு சிபாரிசு செய்தவர் முருகதாஸ் தான்.

‘வீரம்’ படத்தில் அஜித் ஒரு டயலாக் சொல்லுவார்.. “நம்ம கூட இருக்கிறவர்களை நாம நல்லா பாத்துக்கிட்டா நம்ம மேல இருக்கிறவன் நம்மள பாத்துப்பான்” என்று அஜித் பட டயலாக்கை பேசினார்.

கௌதம் கார்த்திக் ஒரு சிறந்த மனிதர். இப்போது படத்தில் பணியாற்றிய அனைவரையும் இந்த மேடை ஏற்றி அழகு பார்த்தவர் அவர்.

அவரது தந்தை கார்த்திக்கும் அப்படிதான் எல்லாரையும் டார்லிங் டார்லிங் என்று அழைப்பார். என் நடிப்பில் ரஜினி சார் சாயல் இருக்கும். நான் பாதி சூப்பர் ஸ்டார்.

ஆனால் கௌதம் கார்த்திக் எந்த ஒரு நடிகரின் சாயலும் இல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பை கொடுத்து வருகிறார்.” என்றார் சிவா.

இவரைத் தொடர்ந்து இறுதியாக முருகதாஸ் பேசும்போது..

“என்னுடைய படங்களில் ஆக்சன் காட்சிகள் வைக்கும் போது கண்டிப்பாக அதில் ஏதாவது நிச்சயம் ஒரு ரஜினி சாயல் இருக்கும்.. அதுபோல காதல் காட்சி என்றால் நவரச நாயகன் கார்த்திக்கின் நினைவு தான் வரும்.

துப்பாக்கி படத்தில் விஜய் மற்றும் ஜெயராம் நடிக்கும் காட்சியில் எனக்கு கார்த்தி நினைவு தான் வந்தது. அதை வைத்துதான் விஜய்யை ஒரு டயலாக் சொல்ல வைத்தேன்” என்று பேசினார் முருகதாஸ்.

Sivakarthikeyan & Armurugadoss Speech at august 16 1947 audio launch

பத்து தல & PS 2.; ஒரே நேரத்தில் ஏஆர். ரஹ்மான் படைத்த டபுள் ரெக்கார்ட்

பத்து தல & PS 2.; ஒரே நேரத்தில் ஏஆர். ரஹ்மான் படைத்த டபுள் ரெக்கார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கு முந்தைய நாள் அதாவது நாளை மார்ச் 29ஆம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த இரு படங்களுக்கும் இசையமைத்துள்ளவர் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

இந்த நிலையில் ஒரே சமயத்தில் இந்த இரு படங்களில் இடம்பெற்ற பாடல்கள் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இணையதளத்தில் சாதனை செய்துள்ளது.

பத்து தல படத்தில் இடம்பெற்ற நம்ம சத்தம் என்ற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

தற்போது இந்த பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அதுபோல ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற அகநக என்ற பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே பத்து மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்த இரு சாதனைகளை படக்குழுவினரும் ஏஆர் ரகுமான் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Keep the love coming!
#AgaNaga crosses 10 Million+ Views on YouTube!

Get ready!
#PS2 trailer from 29th March 🔥

Don’t forget to send in your entries for #AgaNagaCoversContest!

#PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @IMAX @primevideoIN… https://t.co/XyP7YcJHGb https://t.co/CclHmueAUs

We can’t get enough of #NammaSatham from #PathuThala 🔥

Time to celebrate 10M+ views for this banger! 💥

🌀: https://t.co/GOea7JKl10

An @arrahman Musical
✍️ @Lyricist_Vivek
🕺 @iamSandy_Off
🎬 @nameis_krishna https://t.co/FGIMZp6WNa

AR Rahman creates double record at the same time

‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் இணையும் பிரபலம் யார்!?

‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் இணையும் பிரபலம் யார்!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் ஆர்.ஜே.பாலாஜி.

ஆர்.ஜே.பாலாஜி தற்போது கோகுல் இயக்கத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்து வருகிறது.

ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிகர் ஜீவா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் கேமியோ ரோலில் தோன்றுகிறார்.

ஜீவா மற்றும் லோகேஷ் கனகராஜ் தவிர, மேலும் ஒரு தமிழ் நடிகர் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பே ஜீவா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் இணைந்து ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்து குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சிங்கப்பூர் சலூன்’ படம் இந்த கோடையில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

feames stars play cameo roles in RJ Balaji’s ‘Singapore Saloon’

‘AK 62’ அதிகார பூர்வ அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

‘AK 62’ அதிகார பூர்வ அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தமிழக தலைவர் தமிழ் குமரன் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் தந்தையை இழந்த அஜித்தை நேரில் சந்தித்து

ஆறுதல் கூறினர்.

பின்னர் சென்னையில் உள்ள அஜித்குமார் இல்லம் முன்பு தமிழ் குமரனிடம் செய்தியாளர்கள் ஏகே 62 குறித்து கேட்டனர்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) படம் பற்றிய நல்ல செய்தி வரும் என்றும், மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அவர் வலுவான குறிப்பைக் கொடுத்தார்.

இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அருள்நிதி மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Official update on Ajith Kumar’s ‘AK 62’ is here

விஜய்யின் ‘லியோ’ பட சென்னை ஷெட்யூல் சூட்டிங் அப்டேட்

விஜய்யின் ‘லியோ’ பட சென்னை ஷெட்யூல் சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை கடந்த வாரம் முடித்த பிறகு, ‘லியோ’ படக்குழு ஒரு சிறிய இடைவெளியில் உள்ளது.

இந்நிலையில், அடுத்த ஷெட்யூல் நாளை மார்ச் 29-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது படக்குழு.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் இதற்கான செட் போடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை ஷெட்யூலை முடிந்தவுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ஹைதராபாத் செல்ல உள்ளது.

Vijay’s ‘Leo’ Chennai schedule to start on March 29

More Articles
Follows