தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2022-ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘ஆர் ஆர் ஆர்’.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை எம்.எம் கீரவாணி வென்றார்.
ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் போட்டி போட்டு ஆடும் இந்த பாடல் உலக மக்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடிய பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச்.
ராகுல் சிப்லிகஞ்ச் தற்போது தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்ப்பில் போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கோஷமஹால் தொகுதியில் அவர் களமிறக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
nattu nattu sang singer Rahul Sipligunj MLA candidacy Filing