தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கர்பச்சான் நடித்து இயக்கியுள்ள படம’கருமேகங்கள் கலைகின்றன’. இந்த படத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன், எஸ் ஏ சந்திரசேகர், யோகி பாபு, அதிதி பாலன், மகானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக சாரல் என்ற சிறுமி நடித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 1ம் தேதிக்கு வருகிறது.
பொதுவாக ஒரு படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி விட்டால் அதை திரையுலக சம்பந்தப்பட்டவர்களுக்கு முதலில் திரையிட்டு காண்பிப்பார்கள்.
ஆனால் முதல் முறையாக பத்திரிக்கையாளர்களுக்கும் திரையிட்டு காட்டாமல் திரையுலக விஐபிகளுக்கும் திரையிட்டு காட்டாமல் முதன் முறையாக மக்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான்.
இது பற்றி அவர் கூறியதாவது..
“நான் மக்களை நம்பி படம் எடுக்கிறேன். மக்களுக்காக படம் எடுக்கிறேன்.
திரையுலகச் சார்ந்தவர்களோ மற்றவர்களோ குறை சொன்னால் எனக்கு கவலை இல்லை. மக்களின் கருத்தை நான் ஏற்கிறேன். எனவே தான் மக்களுக்கு என்னுடைய ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை திரையிட்டு காட்டினேன்.
படத்தை பார்த்த ஒவ்வொருவரும் கண்கலங்கி சென்றார்கள். தந்தையுடன் பேசாமலோ தந்தையை பிரிந்து வாழும் நபர்கள் என்னுடன் மனம் விட்டு பேசி பாராட்டி சென்றனர்.
கமலா தியேட்டர்ல திரையிட்டு காண்பித்த பின்னர் நான் புறப்பட தயாரான போது ஒரு பெரியவர் என் அருகே வந்து 200 ரூபாயை கொடுத்தார். இதை தயாரிப்பாளர்களிடம் கொடுங்கள் என் கண் கலங்கி பேசினார்.
இதுவே எனக்கு கிடைத்த பெரும் பாராட்டாக நினைக்கிறேன். அவரே ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திற்கு கிடைத்த முதல் ரசிகன் ஆவார். என்றார் தங்கர்பச்சான்.
Karumegangal Kalaigindrna got huge response at Public premiere show