தனுஷ்-அனிருத் கூட்டணியை மீண்டும் இணைக்கும் சன் பிக்சர்ஸ்

தனுஷ்-அனிருத் கூட்டணியை மீண்டும் இணைக்கும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush anirudhஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான படம் ‘3’.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத்.

இந்த படத்தில் இடம்பெற்ற கொல வெறி பாடல் இன்றும் யூடிப்பில் தன் சாதனையை தொடர்ந்து வருகிறது.

இந்த படத்தில் ஆரம்பமான கூட்டணி தனுஷ் அனிருத் கூட்டணி பல படங்களில் இணைந்தே இருந்தது.

இந்த கூட்டணிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

ஆனால், சில கருத்து வேறுபாடுகளால் ‘தங்கமகன்’ படத்திற்கு பிறகு பிரிந்தது.

அதன்பின்னர் தனுஷ் படங்களுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் விரும்பிய இந்த கூட்டணியை மீண்டும் இணைக்கிறது சன் பிக்சர்ஸ்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகவுள்ள தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Dhanush and Anirudh to team up for sun pictures next film

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ்..; அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ்..; அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush karthik subbaraj‘புத்தம் புதுக் காலை’ என்கிற ஆந்தாலஜி திரைப்படம் நாளை (அக்டோபர் 16) அமேசானில் ரிலீசாகிறது.

இதில் ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், கெளதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் 5 குறும் படங்களை இயக்கியுள்ளனர்.

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் குறும்படத்திற்கு மிராக்கிள் என்று பெயரிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் பாபி சிம்ஹாவின் அலுவலகத்தில் நிஜமாகவே கொள்ளை போனது. அதை மையப்படுத்தி ‘மிராக்கிள்’ (அற்புதம்) கதையை உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இக்குறும்படத்தில் பாபி சிம்ஹா, முத்துக்குமார், ஷரத் ரவி, எழில் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

“இந்த மாதத்தின் இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் அது திரைத்துறையினருக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும்.

‘ஜகமே தந்திரம்’ ரிலீசைப் பொறுத்தவரை அது தயாரிப்பாளரின் கைகளில் உள்ளது.

நான் ‘பெண் குயின்’ படத்தைத் தயாரித்தேன். திரையரங்குக்காக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அமேசானுக்கு விற்றோம். கையில் இருப்பதை வைத்து பிழைக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Dhanush’s ‘Jagame Thandhiram’ Release Revealed by Director Karthik Subbaraj

டிவி ரேட்டிங்கிலும் தில்லு முல்லு..; TRP-யை நிறுத்தியது BARC

டிவி ரேட்டிங்கிலும் தில்லு முல்லு..; TRP-யை நிறுத்தியது BARC

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BARCஇந்தியாவில் உள்ள அனைத்து தனியார் டிவிக்களின் ரேட்டிங்கை BARC ‘பார்க்’ அமைப்பு நிர்வகித்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் எந்த டிவிக்கு, எந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது என்பதை அந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள முக்கிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் அவர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதாவது… பார்வையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களைக் கவரும் நோக்கில் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ரூ.400 முதல் ரூ.700 தொகை வழங்கப்பட்டு வந்துள்ளதாம்.

இந்த டிஆர்பி மோசடி காரணமாக அடுத்த 12 வாரங்களுக்கு அனைத்து மொழிகளிலும் செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வாரந்தோறும் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” எனத் பார்க் அமைப்பு தெரிவித்துள்ளது.

BARC pauses weekly ratings for TV channels

நான் சிங்கிள் இல்லை..; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லட்சுமி மேனன்

நான் சிங்கிள் இல்லை..; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லட்சுமி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lakshmi menonகும்கி, பாண்டிய நாடு, வேதாளம், உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த மலையாள நடிகை லட்சுமி மேனன்.

தற்போது மீண்டும் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வந்தபோது அதை மறுத்து சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் லட்சுமி.

அப்போது ரசிகர் ஒருவர்… நீங்கள் சிங்கிளா? என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள… இல்லை என பதில் அளித்து இதயம் போட்டோவையும் வெட்கப்படும் போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

Actress Lakshmi Menon reveals that she is in relationship

மனநலம் குன்றிய சர்ச்சை சொல்..; மன்னிப்பு கேட்டார் நடிகை குஷ்பூ

மனநலம் குன்றிய சர்ச்சை சொல்..; மன்னிப்பு கேட்டார் நடிகை குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushbooகடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் நடிகை குஷ்பு.

பாஜக.வில் இணைந்த பின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது.. மனநலம் குன்றிய (காங்கிரஸ்) கட்சியில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்தார்.

இது மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளை அவதூறு செய்யும் சொல் என்றும் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்று திறனாளிகளுக்கான அமைப்புகள் புகார்கள் அளித்தன.

இதை தொடர்ந்து குஷ்பு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…

அவசரம், ஆழ்ந்த வருத்தம், மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடி இருக்கிறேன். மனச்சோர்வு, மன நலம் குன்றிய நண்பர்களோடு வாழ்கிறேன்.

மக்களின் பன்முக தன்மையை உணர்ந்தவள் நான். மாற்றுத் திறனாளிகளை எப்போதும் மதிப்பவள் நான். என அறிக்கையில் தெரிவித்துள்ளார் குஷ்பூ.

Actress / Politician Khushboo issues apology over ‘mentally retarded’ remark

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.?

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prashanth aishwarya raiஹிந்தியில் சூப்பர் டூப்பரான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளார் என்ற தகவலை பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.

சிறந்த ஹிந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் கைப்பற்றியுள்ளார்.

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெட்ரிக் இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை பார்த்தோம்.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யாராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.

இவர் தபு நடித்த கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1998ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Aishwarya Rai in talks for Prashanth’s upcoming film

More Articles
Follows