நவ. 16ல் *திமிரு புடிச்சவன்* வருவான்.; பாத்திமா விஜய்ஆண்டனி விளக்கம்

Fathima Vijay Antony clarifies Thimiru Pudichavan release issueதீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படமும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

ஆனால் தமிழத்தில் உள்ள 1100 தியேட்டர்களில் 800க்கும் மேற்ப்ட்ட தியேட்டர்களை சர்கார் ஆக்ரமித்தது. எனவே அன்றைய தினத்தில் திமிரு புடிச்சவன் வெளியாகவில்லை.

இதனிடையில் நவம்பர் 16ஆம் தேதி உத்தரவு மகாராஜா, செய், காற்றின்மொழி, சித்திரம் பேசுதடி2 ஆகிய படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கம் கடிதம் படி அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து திமிரு புடிச்சவன் படத்தை நவம்பர் 16ல் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு மற்ற படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்க கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டது.

அப்போது மேற்கண்ட 4 படங்கள் மட்டுமே 16ம் தேதி வெளிவரும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
இந்நிலையில் திமிரு புடிச்சவன் படத்தின் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியின் மனைவியுமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் ‘சர்கார்’ திரைப்படம் திரையிடப்பட்டதால், எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை.

விநியோகஸ்தர்கள் ரிலீஸ் தேதியை தவறவிட்டது அதிர்ச்சியாக இருந்தது. படத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியளித்தாலும், திரையரங்குகள் முறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கும் போது திரையரங்குகளை எப்படிப் பெறுவது?

இந்தக் கடினமான நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் எங்களுக்கு ஆதரவு அளிக்க கேட்டிருக்கிறோம். அவர்கள் எங்களுடன் இருப்பதால், அவர்கள் நிர்வாகிகள் குழு என்பதால், அவர்கள் சொல்வதைக் கேட்கிறோம்.

தற்போது ‘சித்தரம் பேசுதடி 2′ திரைப்படம் திரையிடும் தேதியை வாபஸ் பெற்று இருக்கிறது. ஆதலால், கடந்த கூட்டத்தில் பேசப்பட்டது போல் 16-ம் தேதியைப் பெற எங்களுக்குத் தகுதி உண்டு.” என பாத்திமா விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

Fathima Vijay Antony clarifies Thimiru Pudichavan release issue

Overall Rating : Not available

Related News

பொருளாதார அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளால் சிறுவயதிலே…
...Read More
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு…
...Read More

Latest Post