தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து உதயா-RK. சுரேஷ் விலக இதான் காரணம்?

Vishals friends RK Suresh and Udhaya quit Producer Councilதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து உதயா, ஆர்.கே.சுரேஷ் இருவரும் விலகியுள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் நெருங்கிய நண்பர்களாக இவர்கள் இருந்தனர்.

விஷாலின் நண்பர்கள் இருவரும் திடீரென பதவி விலகியது திரையுலக வட்டாரங்களில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ படம் வெளியானது.

16ஆம் தேதி உதயா தயாரித்து நடித்த ‘உத்தரவு மகாராஜா’ படம் வெளியானது.

இந்த 2 படங்களுக்கும் சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை எனவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உதவவில்லை எனவும் கூறப்பட்டது.

மேலும் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இது குறித்து விசாரிக்கையில்…

மேலும் தியேட்டர்களைப் பெற்றுத் தருவது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை கிடையாது.

இருந்தபோதிலும் சங்கத்தின் சார்பாக தியேட்டர்காரர்களிடம் பேசி நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களை இருவருக்கும் பெற்று கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஆர்.கே. சுரேஷ் கூறியுள்ளதாவது…

விஷால் தேர்தலில் நிற்கும் போதே சிறு படங்களுக்கு நன்மை செய்யவே தேர்தலில் போட்டியிடுவதாக வாக்குறுதி கொடுத்தார்.

இப்போது தமிழ் சினிமாவில் ரிலீஸ் சிக்கல் நிலவுகிறது. படங்கள் வெளியிடுவதில் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை.

அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

விஷாலின் செயல்பாடுகள் சரியில்லை. எனக்கும் விஷாலுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. இன்னும் நண்பர்கள் தான்.” என ஆர்கே சுரேஷ் கூறியுள்ளார்.

இது குறித்து உதயா பேசுகையில்,

“விஷாலின் நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை.

மைக்கை பிடித்துக் கொண்டு நன்றாகப் பேசுகிறார். ஆனால் செயலில் எதுவுமில்லை.

பட வெளியீட்டை கண்காணிக்க என்று ஒரு குழு இருக்கிறது. அதில் சிறு, மத்திய, பெரிய பட்ஜெட் படங்களுக்கென தனித்தனி வெளியீடு தேதிகள் தரப்பட்டன.

16-ஆம் தேதி உத்தரவு மஹாராஜா, காற்றின் மொழி, செய், சித்திரம் பேசுதடி 2 ஆகிய படங்களுக்கு ஒதுக்கப்பட்டது. நாங்கள் விளம்பரங்கள் செய்த பின் திடீரென திமிரு புடிச்சவன் வெளியீட்டை அறிவிக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

விஷாலிடம் தனிப்பட்ட முறையில் கேட்டபோது அந்தப் படம் வராது வராது என்றே கடைசி நிமிடம் வரை சொல்லி வந்தார். ஆனால் அந்தப் படம் வெளியானது.

ஏற்கெனவே சர்கார் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து திமிரு புடிச்சவன், அடுத்து காற்றின் மொழி, இதற்கு பிறகு தான் உத்தரவு மஹாராஜாவுக்கு ரசிகர்களின் கவனம் திரும்பும்.

படத்துக்கான விமர்சனங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் படத்தைப் பார்க்க நினைத்தால் படம் அரங்கில் இல்லை” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் உதயா.

Vishals friends RK Suresh and Udhaya quit Producer Council

Overall Rating : Not available

Related News

பொருளாதார அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளால் சிறுவயதிலே…
...Read More
தீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய்…
...Read More
முருகதாஸ் வசனம் எழுதி இயக்கியுள்ள விஜய்யின்…
...Read More
பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய தள நண்பர்களுக்கு…
...Read More

Latest Post