அபிநந்தன், உதயா, உத்தரவு மகாராஜா – ஒப்பிட்ட உதயகுமார்

அபிநந்தன், உதயா, உத்தரவு மகாராஜா – ஒப்பிட்ட உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)பொருளாதார அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளால் சிறுவயதிலே பாதிக்கப்படும் உதயா, குறுக்கு வழியில் பெரும் கோடீஸ்வரனாக ஆகும் கதை தான் உத்தரவு மகாராஜா. அறிமுக இயக்குநர் ஆஷிஃப் குரைசி இயக்கத்தில் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்ட இந்தப்படத்தில், எதிர் நாயகனாக நடித்திருந்தாலும் மிகவும் வித்தியாசமான ஒப்பனைகளில் வந்து அசத்தியிருப்பார் உதயா.

இவரால் பாதிக்கப்படும் பிரபு, ஒரு கட்டத்தில், மிகவும் நுண்ணிய சிப் எனப்படும் தகவல் தொடர்பு சாதனத்தை உதயாவின் காதில் பொருத்தி, பல உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார். எங்கிருந்து..? யாரால் ? இயக்கப்படுகிறோம் என்பது தெரியாத உதயா படும் வேதனைகள் படத்தின் சிறப்பம்சமான காட்சிகள் என்றால் அதுமிகையாகாது.

இந்த நிலையில், இந்தப்படம் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த மூத்த இயக்குநர் ஆர் வி உதயகுமார், “சமீபத்தில் பாகிஸ்தான் போர் விமானத்தை அதைவிட பல மடங்கு வலிமை குறைந்த விமானத்தால் சுட்டு வீழ்த்தி, பாகிஸ்தான் இராணுவத்திடம் மாட்டிக் கொண்ட நமது விங் கமாண்டர் அபிநந்தன் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்தியாவிற்குத் திரும்பிய அவருக்கு முழு உடல்பரிசோதனை செய்து மருத்துவ அறிக்கை வருவதற்குள், பாகிஸ்தான் இராணுவம் அவரையறியமல் அபிநந்தன் உடலில் சிப் பொருத்தியிருக்கக் கூடும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிக்கொண்டார்கள். அபி நந்தன் உடலில், எந்தவிதமான சிப்புகளும் பொருத்தப்படவில்லை என்பதே , மருத்துவப் பரிசோதனையின் பிரதான அறிக்கையாக இருந்தது,,,

உடலுக்குள் சிப் பொருத்தி வேவு பார்க்கவோ அல்லது இன்னொருவரை இயக்கவோ முடியும் என்று உத்தரவு மகாராஜா படத்தில் காண்பித்த சில நாட்களுக்குள், நிஜமாகவே அப்படி இருக்கலாமோ என்று விங் கமாண்டர் அபிநந்தன் விஷயத்தில் பலரும் பேசிக்கொண்டது, ஏதேச்சையாக ஒத்துப் போகிற நிகழ்வாக அமைந்துவிட்டது..” என்று பேசினார்.

சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பூமராங் – அதர்வா

சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பூமராங் – அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

boomerang atharvaaஒரு நடிகரின் ரசிகர் வட்டமானது இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கும். ஒன்று கவர்ந்திழுக்கும் தோற்றம், மற்றொன்று நல்ல கதையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது. அதர்வா முரளியின் முந்தைய படங்களை கவனித்தால் இது தெளிவாக விளங்கும். மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் அவரின் ‘பூமராங்’ படமும் ஏற்கனவே ரசிகர்களை ஒரு புதுவித அனுபவத்துக்கு தயார் செய்துள்ளது.

எப்போதும் போல், அதர்வா படத்துக்காக தான் பட்ட கஷ்டங்களை, கடும் முயற்சிகளை பற்றி பெரிதாக பேசாமல், இயக்குனர் கண்ணனை புகழ்ந்து பேசுகிறார். “கண்ணன் சார் அவருடைய கலைத்திறமையை தாண்டி, அரிதான பல தனிப்பட்ட திறமைகளை கொண்டிருக்கிறார். யாரும் அவ்வளவாக பேசாத சமூக பிரச்சினைகள் பற்றி படங்களில் பேசுவது அதில் ஒன்று. நாம் பல ஆண்டுகளாக சமூக வணிக ரீதியான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட, சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பல படங்களை பார்த்திருக்கிறோம். எனினும், அவர் எனக்கு சொன்ன ‘பூமராங்’ ஸ்கிரிப்ட்டை முற்றிலுமாக புதிதாக உணர்ந்தேன். நாம் ஏற்கனவே சொன்னபடி, இது இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பது என்ற விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பற்றி பேசும் படம். பூமராங் காதல், காமெடி, எமோஷன் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம் என்று தான் சொல்லுவேன். மேலும், கண்ணன் சார், ஸ்கிரிப்ட்டில் சில ஆச்சரியமான விஷயங்களை வைத்திருக்கிறார், அது எனக்கு மிகவும் புதியதாகவும் இருந்தது” என்றார் அதர்வா முரளி.

உடன் நடித்த நடிகர்கள் பற்றி அதர்வா கூறும்போது, “நான் எப்போதும் நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருப்பதை நம்புகிறேன். ஒரு படம் மிகச் சரியானதாக இருக்க ஒவ்வொரு நடிகருக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இந்த விதத்தில், கண்ணன் சார், கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் மிகச்சிறந்த வேலையை செய்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, உபென் படேல், மேகா ஆகாஷ், இந்துஜா உட்பட அனைவரது கதாபாத்திரத்திற்கும் உண்டான நியாயத்தை செய்திருக்கிறார் கண்ணன் சார்.

தொழில்நுட்ப குழுவை பற்றி கூறும்போது, “ரதனின் பாடல்கள் ஒரு தனித்துவமான உணர்வை உருவாக்கியுள்ளன. ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்திற்கு வலுவான மற்றும் சிறந்த பின்னணி இசையை வழங்கி தன்னை மேம்படுத்தி வருகிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமாரின் வண்ணங்கள் மற்றும் கலர் டோன் மிகவும் புதுமையாக இருக்கிறது. அவருடைய கேமரா, பச்சோந்தி போல சூழ்நிலையைப் பொறுத்து அதன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்று நகைச்சுவையாக அவரது வேலையை பற்றி குறிப்பிடுவது உண்டு” என்றார்.

ரஜினியின் பாராட்டு பல கோடி பாராட்டுக்கு சமம்..: ‘பூமராங்’ கண்ணன் நெகிழ்ச்சி

ரஜினியின் பாராட்டு பல கோடி பாராட்டுக்கு சமம்..: ‘பூமராங்’ கண்ணன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது.

இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது.

உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார்.

“ரஜினி சாரிடமிருந்து அழைப்பு வந்ததும் ஆடிப் போனேன். நேரில் அவரைப் பார்த்ததும் நெகிழ்ந்தேன். படத்தில் நதி நீர் இணைப்புக்காக நாங்கள் செய்த ஆய்வைச்சொல்லி இது எப்படி சாத்தியப்படும் என்பதையும் எடுத்துச் சொன்னேன்.

அரைமணிநேரம் பொறுமையாகவும், ஆழமாகவும் கேட்ட ரஜினி படத்தில் இடம்பெறும் நதிநீர் இணைப்பு பாடலையும், டிரைலரையும் பார்த்துவிட்டு “எக்சலண்ட்…” என்றார். பல்லாயிரம் கோடி பாராட்டுகளைப் பெற்ற அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு பாராட்டு கிடைத்ததும் அது பல கோடி பாராட்டுகளுக்கு சமம் என்று நெகிழ்ந்தேன்.

நான் கிளம்பும்போது “கண்டிப்பாக பூமராங் படத்தைப் பார்க்கிறேன்..!” என்றார் அவர் அன்புடன். இதுவே எங்கள் டீமுக்குக் கிடைத்த முதல் வெற்றி..!” உற்சாகமாக சொல்லி முடித்தார் கண்ணன்.

கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ :

கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ :

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிராமாஸ்டரா திரைப்பட குழுவினர் ரன்பீர் கபூர் , அலியா பாட் ,அயன் முகர்ஜி, ஆகியோர் வானத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோவை வெளியிட்டனர்.

கங்கை , யமுனா , சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் இணையும் இடம் திருவேணி சங்கமம் ,ப்ரயாக்ராஜ் . இந்த இடத்தில ஒரு கோடி மக்களின் பார்வையில் ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோ வெளியிடப்பட்டது.

இந்த லோகோவை வெளியிட கும்பமேளாவை விட சிறந்த இடம் வேறு எதுவும் படக்குழுவினருக்கு கிடைத்திருக்க முடியாது.

இந்த நிகழ்வினை பற்றி படக்குழுவினர் கூறியவை :

கரண் ஜோகர் கூறியவை: “கும்பமேளா கலாச்சார வரலாற்றின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும் .இந்நாளில் லோகோவை வெளியிட்டது மிகவும் சிறப்பு .

விஜய் சிங் , (CEO , FOXSTAR STUDIOS ) கூறியவை :” பிராமாஸ்டரா பண்டைய இந்தியாவின் எல்லையற்ற பெருமையை உயிரோடு கொண்டுவரும் வாகனமாகும்.கும்பமேளா இந்தியாவின் மிகச்சிறந்த நிகழ்ச்சியைக் காட்டிலும் சிறந்தது என்னவென்றால், பல்வேறு கலாச்சாரங்களின் பண்டைய மரபுகள் ஒரு அற்புதமான உருகலைப் பாத்திரத்தில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. ”

அபூர்வா ( CEO , DHARMA PRODUCTIONS ) கூறியவை; எங்களுடைய பயணத்தைத் தொடங்குவதற்கு கும்பமேளாவை விட மிகவும் தகுதியான நிகழ்ச்சி இருக்க முடியாது. இந்த அருமையான வாய்ப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அயன் முகர்ஜி கூறியவை :கும்ப மேளாவில் மகா சிவராத்திரி விழாவில் நாங்கள் எங்களது படத்திற்கான பயணத்தை துவங்கியத்தை சிறந்ததாக கருதுகிறேன்.இந்த லோகோவை வெளியிட எங்களுக்கு 6 மாத காலம் தேவைப்பட்டது. ட்ரோன்கள் மூலம் இந்த பிரம்மாண்ட லோகோவை வெளியிட பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தயார்படுத்த பல யுக்திகள் கையாளப்பட்டது.

ஷிக்கா கபூர் ( CMO , FSS ) கூறியவை; இந்த லோகோவை திட்டமிட்டு இயக்குவது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.படக்குழுவினரின் அனைவரின் முயற்சியினால் இது சாத்தியமாகி இருக்கிறது.

பிராமாஸ்டரா திரைப்படம் மூன்று பாகங்களை கொண்டது. அதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் 2019 ல் வெளியாக இருக்கிறது.

இந்த பிரம்மாண்ட படத்தை இயக்குனர் அயன் முகர்ஜி அவர்கள் இயக்குகிறார்.

தயாரிப்பு :ஹிரோ யாஷ் ஜோகர் கரண் ஜோகர், அபூர்வா மேஹ்டா , நமிட் மல்ஹோத்ரா , ரன்பீர் கபூர் , அயன் முகர்ஜி, & பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் .

நடிகர்கள் :அமிதாப் பச்சன் , ரன்பீர் கபூர், அலியா பாட் , மௌனி ராய் , நாகர்ஜுனா அக்கினி .

பழம்பெரும் நடிகர் திரு.டைப்பிஸ்ட் கோபு மற்றும் நடிகை திருமதி.குசல குமாரி மரணம் நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல்!

பழம்பெரும் நடிகர் திரு.டைப்பிஸ்ட் கோபு மற்றும் நடிகை திருமதி.குசல குமாரி மரணம் நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

typist gopu and kusala kumariபழம்பெரும் நடிகர் திரு.’டைப்பிஸ்ட்’ கோபு (வயது 85) மற்றும் நடிகை திருமதி.குசல குமாரி (வயது 80) நேற்று சென்னையில் காலமானார்கள். அவர்களது மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின்” மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர்களும் பழம்பெரும் கலைஞர்களுமான நடிகர் ‘டைப்பிஸ்ட்’ கோபு , நடிகை குசலகுமாரி ஆகியோர் மரணமடைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

லால்குடியை சேர்ந்த திரு.கோபலரத்தினம் அவர்கள் 1959-ம் ஆண்டு ‘நெஞ்சே நீ வாழ்க’ என்ற மேடை நாடகத்தில் ‘டைப்பிஸ்ட் கோபு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது கதாபாத்திரத்தின் பெயரிலேயே பிரபலமானவர். 500க்கும் அதிகமான நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்களால் ‘நாணல்’ என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் அவர் திரு.எம்.ஜி.ஆர், திரு.சிவாஜி கணேசன், திரு.ரஜினி, திரு.கமல், திரு.விஜய், திரு.அஜித், திரு.கார்த்தி, திரு.விஷால் என மூன்று தலைமுறையினருடன் நடித்த பெருமைக்குரிய சாதனையாளர்.

திருமதி.குசல குமாரி அவர்கள், 1955-ல் ‘கூண்டுகிளி’ படத்தில் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து பிரபலமானார். ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இவரது நடிப்பும் நடனமும் மிகவும் பாராட்டு பெற்றது. திரு.எம்ஜிஆர், திரு.சிவாஜி, திரு.பிரேம் நசீர், திரு.என்.டி.ராம்ராவ் ஆகியோர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

அவர்களது மரணம் ஈடு கட்ட இயலாத மாபெரும் இழப்பாகும். அவர்களது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.”

# தென்னிந்திய நடிகர் சங்கம்

பிரியாணிக்கு ரூ 3.5 லட்சம் கணக்கு எழுதியவர்கள் என் மீது புகார் சொல்வதா? – ஜாக்குவார் தங்கம்

பிரியாணிக்கு ரூ 3.5 லட்சம் கணக்கு எழுதியவர்கள் என் மீது புகார் சொல்வதா? – ஜாக்குவார் தங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)நமது தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் guild சங்க உண்மையான உறுப்பினர்களுக்கு ஜாகுவார் தங்கத்தின் வணக்கம். நான் ஏன் உண்மையான உறுப்பினர்கள் என்று சொல்கிறேன் என்றால்,
சில நபர்கள் நம்ம சங்கத்தில் கடந்த மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னாள் உறுப்பினராக இருந்து, தங்களுடைய சந்தா தொகையை கட்ட தவறியதால், நமது சங்கத்தில் இருந்து சங்க விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் அடிப்படை உறுப்பினர் என்கிற தகுதியை இழந்து இருக்கிறார்கள்.
இப்படி நமது சங்கத்தில் உறுப்பினரே இல்லாத நிலையில் இவர்கள் வாட்ஸ் ஆப்பிள் நமது உறுப்பினர்களை இணைத்து, ஒரு குரூப்பை ஆரம்பித்து, வாட்ஸ்அப் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் மூலமாக நமது சங்கத்தைப் பற்றி நமது உறுப்பினர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சில தவறான பதிவுகளை போட்டு வருகிறார்கள்.
அது என்னவென்றால் நம்முடைய சங்க பதிவு ரத்து ஆகிவிட்டது, அதனால நமது சங்கத்தில் இனி யாரும் பேனர் பதிவு செய்ய வேண்டாம். சென்சார் பண்ண வேண்டாம், டைட்டில் பதிவு செய்ய வேண்டாம், நமது தலைப்புகளை மற்ற சங்கங்கள் எடுத்துக்கொள்வார்கள், இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். மேலும் பதிவு அலுவலகத்துக்கு இவர்களே நேரடியாக சென்று நமது சங்கத்தை பதிவிலிருந்து நீக்கி விடுமாறு கூறி வருகின்றனர்.

உண்மை நிலை என்னவென்றால் நமது சங்க பதிவு, கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்காததனால் ரத்து ஆக போகிறது என பதிவுத் துறையில் இருந்து நமக்கு கடிதம் வந்தது. ஏன் இப்படி ஒரு கடிதம் நமக்கு வந்தது என்றால், நாம் கடந்த சில வருடங்களாக நம்முடைய சங்க வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை என்பதுதான். சில உறுப்பினர்கள் சொல்வதுபோல் ஒரு வருடம், இரண்டு வருடம், ஆடிட்டிங் செய்த வரவு செலவை காட்டியிருந்தால் பதிவு ரத்து செய்திருக்க மாட்டார்கள் என்று தவறாக புரிந்துகொண்டு சொல்கிறார்கள். வரவு செலவு கணக்கை நமது சங்க பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் வாங்கிய பிறகுதான் அதை பதிவு துறை ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் கடந்த ஏழு எட்டு வருடங்களுக்கு முன் இருந்த நிர்வாகிகள், நமது சங்க பணம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதை நான் கண்டுபிடித்து கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறேன். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால பொதுக்குழு கூட்ட இயலவில்லை.

அதேபோல தற்போது தேர்தல் முடிந்து நிர்வாகத்துக்கு வந்தவர்களில் சிலர் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறு படத்திற்கான மானிய தொகையை பெற்றுத் தருவதாக கூறி நமது உறுப்பினர்களை ஏமாற்றி பணம் வாங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் சில நிர்வாகிகள் கடந்த நான்கு வருடங்கள் சந்தா கட்டாததனால் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் 06.08.2018 அன்று நமது சங்க பொதுக்குழு நடத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி, பிரசாத் லேபில் பொதுக்குழு நடத்த எல்லா ஏற்பாடும் செய்திருந்த சூழ்நிலையில், எதிர் தரப்பினர் கோர்ட்டுக்கு சென்று ஸ்டே ஆர்டர் வாங்கி, பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுத்துவிட்டனர்.
இப்படியான ஒரு சூழலில் தற்சமயம் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் மூலமாக நீதியரசர் திரு.ராஜசூர்யா அவர்களை நியமித்து அவர் மூலமாக mediation நடைபெற்று வருகிறது. விரைவில் பொதுக்குழு கூடி வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பதிவு துறைக்கு அனுப்பி வைத்து விடுவோம், என நானும் மற்ற சில நிர்வாகிகளும் நேரடியாக பதிவு அலுவலர் சந்தித்து, அவரிடம் விளக்கம் சொல்லி, அந்த விளக்க கடிதத்தில் சீல் (பதிவுத் துறையின் அலுவலக முத்திரை) போட்டு வாங்கி வந்திருக்கிறோம். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு விரைவில் general body முடித்து வரவு செலவை தாக்கல் செய்யுங்கள், அது வரைக்கும் உங்கள் சங்க பதிவு ரத்தாகாது, நாங்க வெயிட் பண்ணுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதுதான் நடந்த உண்மை இதைதான். நம்ம சங்கத்து உள்ளே வரமுடியாத சில கறுப்பு ஆடுகள், ஆதங்கத்தில் இப்படி தவறான செய்திகளை பரப்பி நமது உறுப்பினர்களை திசை திருப்பி, பயமுறுத்தி வருகிறார்கள். இவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம். இவர்களை சட்டப்படி நாம் சந்திக்க இருக்கிறோம்.

எனவே நமது சங்க உண்மையான உறுப்பினர்களிடம் வரும் பொதுக்குழு வரை காத்திருக்க வேண்டுகிறேன். விரைவில் பொதுக்குழு கூடி, வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நமது சங்க பதிவு சரி செய்யப்படும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். நம து சங்கத்தின் மேல் அதிக அக்கறை எனக்கு உள்ளது என்பதை இதன் மூலம் மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

More Articles
Follows