அட யாராச்சும் கேஸ் போடுங்கப்பா…; ஆடம்ஸ் அடம்; பிரபு கண்டிப்பு!

prabhu and adamsடிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருப்பவர் ஆடம்ஸ்.

அவ்வப்போது மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வருகிறார்.

இவர் தற்போது உதயா தயாரித்து நடித்துள்ள உத்தரவு மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தை வருகிற நவம்பர் 16ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ஆடம்ஸ் பேசியதாவது…

” உத்தரவு மகாராஜா படத்தில் உதயாவின் நண்பராக நான் நடித்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்துவிட்டு, இந்த படத்தின் மூலம் தான் பெரிய திரைக்கு வந்திருக்கிறேன்.

விஜய்யின் சர்கார் படத்துக்கு விளம்பரமே தேவையில்லை. ஆனால் அந்த படத்தின் மீது கேஸ் போட்டு புரோமோஷன் தருகிறார்கள்.

எங்கள் படத்தின் மீதும் யாராவது கேஸ் (வழக்கு) போட்டால் எங்களுக்கும் புரோமோஷனாக இருக்கும். பாஜக. எச்.ராஜா போன்றோர் எங்கள் படம் பற்றி ஏதாவது பேசினால் ஒரு விளம்பரமாக இருக்கும்.

எங்களைப் போன்ற படங்களுக்கு புரோமோஷன் கிடைப்பதில்லை”, என அவர் கூறினார்.

அதன் பின்னர் பேசிய நடிகர் பிரபு.. “ஆடம்ஸ் சொல்வதை யாரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் தெரியாமல் பேசிவிட்டார் என்பது போல கண்டித்தார்.

Overall Rating : Not available

Related News

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு…
...Read More
தீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய்…
...Read More

Latest Post