BREAKING: சிவா தயாரிப்பில் விஜய் ஆண்டனி; டைரக்டர் யார் தெரியுமா?

BREAKING: சிவா தயாரிப்பில் விஜய் ஆண்டனி; டைரக்டர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antony and Naveen team up with Amma Creations T Sivaகடவுள் இருக்கான் குமாரு, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தை தயாரித்து வருகிறார் டி.சிவா.

தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இப்படத்தை மூடர் கூடம் இயக்குனர் நவீன் இயக்கவுள்ளதாகவும் அப்படம் ஆக்சன் த்ரில்லர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது சிவா தயாரிப்பில் உருவாகும் 23வது படமாகும். இதன் சூட்டிங்கை ஜீலையில் தொடங்கவுள்ளனர்.

Vijay Antony and Naveen team up with Amma Creations T Siva

T Siva AmmaCreations‏ @TSivaAmma 10m10 minutes ago
Super glad to announce that Amma Creations has joined hands with @vijayantony on a new Project, that will be Directed by Moodar koodam movie fame M.Naveen. It will be an Action Thriller and it’s our Production No:23. Shooting will be starting from July 2018 with all your wishes.

t siva vijay antony

வந்துட்டார்ன்னு நினைச்சா.. வடிவேலுக்கு தடை போட போறாங்களே..??

வந்துட்டார்ன்னு நினைச்சா.. வடிவேலுக்கு தடை போட போறாங்களே..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vadiveluஷங்கர் தயாரிப்பில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு மறுத்ததால் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் இனிமேல் அந்த படத்தில் நடிக்க என்னால் முடியாது என வடிவேலு விளக்க கடிதம் கொடுத்ததை நாம் பார்த்தோம்.

இதைத் தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே இனி படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தடை விதித்தால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வது குறித்து வக்கீல்களுடன் வடிவேல் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான கத்தி சண்டை, மெர்சல் படங்களில் வடிவேல் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அஜித் பிறந்த நாளில் ஆர்.கே.சுரேஷ்-யுவன் இணைந்து வைக்கும் விருந்து

அஜித் பிறந்த நாளில் ஆர்.கே.சுரேஷ்-யுவன் இணைந்து வைக்கும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Billa pandi single track release on 1st May Ajith Birthdayதயாரிப்பாளர் K.C.பிரபாத் தயாரித்திருக்கும் ‘பில்லா பாண்டி’ திரைப்படம் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

இத்திரைப்படத்தை J.K.Film Productions மற்றும் May -1 Global Media ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில், R.K.சுரேஷ், சாந்தினி, இந்துஜா, தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி, மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.

படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் K.C. பிரபாத் நடித்திருக்கிறார்.

படத் தொகுப்பு – ராஜா முகமது, ஒளிப்பதிவு – ஜீவன், இசை – இளையவன், எழுத்து – எம் .எம்.எஸ். மூர்த்தி, இயக்கம் – ராஜ் சேதுபதி.

இத்திரைப்படம் ‘தல’ அஜீத் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ‘தல’ அஜீத்தின் ரசிகனாக நடித்திருக்கிறார்.

அஜித் பிறந்த நாளான வரும் மே -1-ம் தேதியன்று அஜித் புகழ் பாடும்விதமாக இத்திரைப்படத்தில் இடம் பெறும் ‘எங்க குல தங்கம், எங்க தல சிங்கம்’ என்ற பாடலின் சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிடவிருக்கிறார்.

Billa pandi single track release on 1st May Ajith Birthday

billa pandi yuvan

Exclusive: கோலிவுட் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது; எப்படி சாதித்தார் விஷால்.?

Exclusive: கோலிவுட் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது; எப்படி சாதித்தார் விஷால்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

qube theatre48 நாட்கள் விரதமிருந்து அருள் கிடைத்தது போல, தமிழ் சினிமா ஸ்டிரைக் 48 நாட்கள் நடைபெற்று இன்று முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்து இதுவரை இப்படியொரு ஸ்டிரைக் நடந்ததே இல்லை.

தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிகளவில் பணம் வசூலிப்பதை கண்டித்து கடந்த மார்ச் 1 முதல் புதுப்படங்கள் ரிலீஸ் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

மேலும் புதுப்பட டீசர், டிரைலர், முதற்கொண்டு திரைப்பட தொடர்பாக எதுவும் நிகழக்கூடாது என அறிவித்தார்.

விஷால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த போது இது ஒரு வாரம் கூட நீடிக்காது என்ற பலரும் வாய் திறந்த கமெண்ட் அடித்தனர்.

பின்னர் நாளாக நாளாக அவர்களே விஷாலின் விடா முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து தற்போது வெற்றிக்கனியை தயாரிப்பாளர்கள் சங்கம் பற்றியுள்ளது எனலாம்.

எப்படி இது வெற்றி சாத்தியமானது..? என்ன நடந்தது..? இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கிடைத்துள்ள பலன்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், க்யூப் நிறுவனங்கள் ஆகியோருடன் தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காலையில் இது தொடங்கினாலும் மதியம் வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதன்பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.

ஒருவழியாக அனைத்து தரப்பினரும் இறங்கி வந்து பேசி கடைசியில் எல்லாவற்றையும் சுமூகமாக பேசி முடிவுக்கு கொண்டுஷ வந்துள்ளனர்.

அவை…
1. க்யூப் நிறுவனம் ஏற்கெனவே தயாரிப்பாளர்களுடன் தனித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஒப்புக் கொண்ட அதே அளவுக்கான VPF கட்டணக் குறைப்பை இப்போது தமிழக அரசின் முன்னிலையிலும் ஒத்துக் கொண்டுள்ளது.

இதுவரையிலும் வாரத்திற்கு 28 காட்சிகளுக்கு ஒரு தியேட்டருக்கு 9,000 ரூபாயை ஒளிபரப்பும் கட்டணமாக வசூலித்துக் கொண்டிருந்த க்யூப் நிறுவனம், இனிமேல் 5,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கும்.

இதேபோல் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்கிற பிரிவில் ஒரு திரைப்படத்திற்கு 20,000 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த க்யூப் நிறுவனம் இப்போது 10,000 ரூபாயை வாங்கிக் கொள்ள சம்மதித்திருக்கிறது.

அதுவும் க்யூப் நிறுவனத்தின் அக்ரிமெண்ட் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது இந்தாண்டு அக்டோபருக்குள் அந்த ஒப்பந்தங்கள் ரத்தாகும் என கூறப்படுகிறது.

அதன்பின்ன்ர் ஏரொக்ஸ் உள்ளிட்ட வேறு டிஜிட்டல் நிறுவனங்களின் மூலமாக தியேட்டர்களுக்கு தங்களது தயாரிப்புகளை கொடுப்பது குறித்து தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் பேசி முடித்துக் கொள்ளலாம் என்று முடிவாகியுள்ளதாம்.

எனவே இந்த 6 மாத காலம் மட்டுமே க்யூப் தனது ஆதிக்கத்தை தமிழக தியேட்டர்களில் செலுத்த முடியும்.

2. தியேட்டர் கட்டணத்தை அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியாக வைத்துக் கொள்ளாமல் பட்ஜெட்டை மனதில் கொண்டு சில படங்களுக்குக் கட்டணத்தைக் குறைத்து வாங்க தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

இதனால் மீடியம் பட்ஜெட் மற்றும் பட்ஜெட் படங்களை திரையிடும்போது அவற்றுக்கான தியேட்டர் கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்படும்.

இதனால் இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

3. தியேட்டர்களில் செய்யப்படும் ஆன்லைன் ரிசர்வேசன் கட்டணம் இதுவரையிலும் 30 ரூபாய் வரையிலும் இருந்து வந்தது. இனிமேல் அது வெறும் 4 ரூபாய் மட்டுமே என்பதற்கு தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்களாம்.

அதிலும் முன் பதிவுக்கான இணையத்தளத்தை தயாரிப்பாளர் சங்கமே அரசின் மேற்பார்வையில் செயல்படுத்தித் தரப் போகிறதாம்.

இதனால் தியேட்டருக்கு வரவிருக்கும் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்திற்கான செலவு பெருமளவு குறையும்.

4. தியேட்டர் டிக்கெட் விற்பனை முழுவதையும் கணிணி மயமாக்கவும் தியேட்டர் அதிபர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்திட்டம் வரும் ஜூன் 2018 முதல் தேதி முதல் அமலாகும்.

இதனால் ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூல் நிலவரம் அன்றன்றைக்கே தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்துவிடும்.

ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலும் தெரிந்துவிடுவதால் பெரிய நடிகர்களுக்குத் தரப்படும் சம்பளம் அடுத்தப் படங்களில் நிலை நிறுத்தப்படும். இதனால் சீரான சம்பளம் நடிகர்களுக்கு தரப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமை குறையும் என எதிர்பார்க்கலாம்.

5. இதேபோல் தியேட்டர் அதிபர்களுக்கு உதவும்வகையில் மற்ற மாநிலங்களில் இருக்கும் தியேட்டர் பராமரிப்பு கட்டணத்தை தியேட்டர் கட்டணத்தில் சேர்ப்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிடும்.

6. இது தியேட்டர் அதிபர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இக்கோரிக்கை நிறைவேறியதில் தியேட்டர் அதிபர்களுக்கு பெரும் மகிழ்ச்சிதானாம்.

இன்றைக்கு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைகள் பற்றி நாளைக்குக் கூடவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அதன் பின்பு புதிய திரைப்படங்களை எப்போது திரைக்குக் கொண்டு வருவது, படப்பிடிப்புகளை துவக்குவது எப்போது என்பது பற்றியெல்லாம் முடிவெடுத்து அறிவிப்பார்கள்.

இப்போது, இதுவரையிலான இந்த வெற்றிக்கு முதற்காரணம் விஷால்தான்.

விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆன போது, எவரிடம் கருத்துக் கேட்காமல் அவரே தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பார் என கூறப்பட்டது. இதனால் சங்கத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது.

இதற்கு முன் சில ஸ்டிரைக்குகளை விஷால் அறிவித்தாலும் அவரை ஒரு வாரம் கூட நடைபெறவில்லை. இது விஷாலின் மீது மதிப்பை குறைத்துக் கொண்டே இருந்தது.

ஆனால் இந்த முறை பக்காவாக ப்ளான் செய்து, அரசே இதில் தலையிட வலியுறுத்தி காய்களை நகர்த்தியுள்ளார்.

தியேட்டர் அதிபர்களையும், கியூப் நிறுவனத்தாரையும் அரசின் முன் உட்கார வைத்து அவர்களை சமரசத்துக்கு கொண்டு வரச் செய்திருக்கிறார்.

என்வே தலைவர் விஷால் அவர்களையும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவரையும் ஃபிலிம் ஸ்ட்ரீட் சார்பாக பாராட்டி மகிழ்கிறோம்..!

Kollywood Cinema strike come to an end after 48 days How Vishal executed

ரஜினி பாடலை பாடி ராகுல் காந்தியை பாட்ஷா என்றழைத்த நக்மா

ரஜினி பாடலை பாடி ராகுல் காந்தியை பாட்ஷா என்றழைத்த நக்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nagma dedicated Baasha song to Rahul Gandhiநடிகை நக்மாவை தமிழ்நாட்டுக்கு தெரியும் என்றால் அதற்கு முக்கிய காரணம் ரஜினியின் பாட்ஷா படம்தான்.

ரஜினி நடித்த படங்களிலேயே அவருக்கு பிடித்த படம் கூட இதுதான்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார்.

நக்மா இப்போது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளராக உள்ளார்.

தற்போது அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நக்மா, பாண்டிச்சேரியில் சோரப்பட்டு என்ற கிராமத்தில் பெண்களை சந்தித்து பேசினார்.

அப்போது பாட்ஷா படத்தில் இடம்பெற்ற, நீ நடந்தால் நடையழகு, ஸ்டைலு ஸ்டைலு தான் ஆகிய பாடல்களை பாடி அசத்தினார்.

மேலும் இந்தப்பாடல் ரஜினிக்காக அல்ல. ராகுலுக்காக என்றார்.

மேலும் நம்முடைய பாட்ஷா ராகுல்காந்தி தான் என்றார் நக்மா.

ஓர் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான படம் தொரட்டி

ஓர் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான படம் தொரட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thorati movie still (17)1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி.

ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி.

இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ.

இவருக்கு இணையாக செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம் சத்யகலா மற்றும் நல்லையாவாக அழகு மேலும் சோத்துமுட்டி.ஈப்புலி செந்தட்டி எனும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

சினேகனின் அற்புதமான கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர் மெட்டமைக்க பின்னணி இசையை ஜித்தின் ரோஷன் சிறப்பாக செய்ய படத்தொகுப்பை ராஜா முகமது திறம்பட செய்ய குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு பேசும்படி அமைந்து இருக்கிறது. ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசனம் எழுதி இயக்கிருக்கிறார் பி. மாரிமுத்து.

நடிகர்கள்

மாயன் : ஷமன் மித்ரூ. ( நாயகன் )
செம்பொன்னு : சத்ய கலா ( நாயகி )
செந்தட்டி : சுந்தர் ராஜ்
ஈபுலி : ஜெயசீலன்
சோத்து முட்டி : முத்து ராமன்
நல்லய்யா : அழகு
மறுத்தப்பன் : குமணன்
பேச்சி : வெண்ணிலா கபடி குழு ஜானகி
வேலாயி : ஆடுகளம் ஸ்டெல்லா.

தொழில் நுட்ப கலைஞர்கள்

நிறுவனம் : ஷமன் பிக்சர்ஸ்
தயாரிப்பு : ஷமன் மித்ரூ
வசனம், இயக்கம் : பி.மாரி முத்து
ஒளிப்பதிவு : குமார் ஸ்ரீதர்
இசை (பாடல்கள்) : வேத்சங்கர்
பின்னணி இசை : ஜித்தின் ரோஷன்
ஒலி வடிவமைப்பு : பரணிதரன்
பாடல்கள் : சினேகன்
படத்தொகுப்பு : A. M.ராஜாமுகமது
மக்கள் தொடர்பு : மணவை புவன்

Based on Real incident Thorati movie updates

Thorati movie still (15)

More Articles
Follows