சிவகார்த்திகேயன் – அனிருத் போடும் ‘சீனா சீனா..; ‘மாவீரன்’ போச்சே வீணா வீணா

சிவகார்த்திகேயன் – அனிருத் போடும் ‘சீனா சீனா..; ‘மாவீரன்’ போச்சே வீணா வீணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் வரும் ‘மாவீரன்’ என்ற படத்தை மடோன் அஸ்வின் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நாயகியாக ‘விருமன்’ நாயகி அதிதி சங்கர் நடித்து வருகிறார்.

பரத் சங்கர் என்பவர் இசையமைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி ‘சீனா… சீனா..’ என்ற சிங்கிள் மட்டும் வெளியானது.

சிவாவின் நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான அனிருத் இந்த பாடலை பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் சிஎம். லோகேஷ் இணைந்து எழுத நடன இயக்குநர் ஷோபி கொரியாகிராஃப் செய்துள்ளார்.

பொதுவாக சிவகார்த்திகேயன் & அனிருத் கூட்டணி பாடல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

இவர்கள் இளமை துள்ளலான பாடல்களை கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த ‘சீனா சீனா…’ பாடல் ரசிகர்களை கவரவில்லை என தெரிய வந்துள்ளது.

Here is the first single from #Maaveeran

#SceneAhSceneAh – https://t.co/8nmbtPGvJ7

Sung by Rockstar @anirudhofficial ?
A @bharathsankar12 Musical!?
?by @shobimaster
✍? #Kabilan & @CMLOKESH

@madonneashwin @AditiShankarofl @vidhu_ayyanna @philoedit @iamarunviswa

Fans disappointed with Sivakarthikeyan’s scene ah scene ah single from Maaveeran

‘லியோ’-வை மிஞ்சும் டெரர் டைட்டில் வைக்க ‘அஜித் 62’ படக்குழு திட்டம்

‘லியோ’-வை மிஞ்சும் டெரர் டைட்டில் வைக்க ‘அஜித் 62’ படக்குழு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் ‘லியோ’ படத்தில் விஜய், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தலைப்பை மிஞ்சும் வகையில் அஜித் 62 படத்திற்கு வைக்க படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி முடிவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக அஜித் படங்களுக்கு தமிழில் தான் தலைப்பு வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது லியோவை மிஞ்சும் வகையில் ஆங்கிலத்தில் ஒரு டெரர் தலைப்பை படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

அதாவது… ‘டெவில்’ உள்ளிட்ட 3 ஆங்கில டைட்டில்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், அதில் ஒன்று முடிவு செய்யப்பட்டு டைட்டில் உடன் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது

மார்ச் மாதம் முதல் / 2வது வாரத்தில் டைட்டில் வெளியிடப்படும் என சொல்லப்படுகின்றது.

AK 62 team plans for strong title than leo movie

நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படத்தின் புதிய அப்டேட்

நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படத்தின் புதிய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்துள்ள படம் ‘கஸ்டடி’.

இப்படத்தில் அரவிந்த் சாமி, பிரியாமணி, ராம்கி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்ஜி, வெண்ணெலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை தற்போது நிறைவடைந்துள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததை அறிவித்த படக்குழு, இயக்குனர் வெங்கட் பிரபு கடைசியாக ‘கட்’ என்று அழைக்கும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும், ‘கஸ்டடி’ படத்தை மே 12, 2023 அன்று திரைக்கு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

கஸ்டடி

Naga Chaitanya’s ‘Custody’ shooting has been completed

‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த லட்சுமி மேனன்

‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த லட்சுமி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஆதியும், இயக்குனர் அறிவழகனும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சப்தம்’ என்ற திகில் படத்துக்காக இணைந்துள்ளனர்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் ஷெட்யூல் சில வாரங்களுக்கு முன்பு மூணாறில் முடிவடைந்தது.அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில், நடிகை லட்சுமி மேனன் திகில் படத்தின் செட்டில் இணைந்துள்ளார்.

லட்சுமி மேனன் ‘சப்தம்’ படத்தில் இணைந்ததை இயக்குனர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சப்தம் படத்தொகுப்பில் இணைந்த திறமையான & அழகான லட்சுமிமேனனை வரவேற்கிறோம்” என்று எழுதினார்.

Lakshmi Menon joins the sets of Sabdham

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘சந்திரமுகி’.

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படம் 500 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்க நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, டி.எம்.கார்த்திக் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் மற்றும் சென்னையில் நடந்தது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தின் நடிகர்கள் படத் தொகுப்புகளில் இருந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

மேலும், தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

‘Chandramukhi 2’ shooting has been completed

துளசி வாசமிக்க ஆணுறை வேணும்.; ‘சிக்லெட்ஸ்’ ட்ரைலரில் 2K KIDS சீக்ரெட்ஸ்

துளசி வாசமிக்க ஆணுறை வேணும்.; ‘சிக்லெட்ஸ்’ ட்ரைலரில் 2K KIDS சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘திறந்திடு சிசேம்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’.

எஸ். எஸ். பி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா மற்றும் ‘வலிமை’ ஜாக் ராபின்சன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

மேலும் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிக்லெட்ஸ்

கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார்.

‘துணிவு’ விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார்.

டீன்ஸ் டிராமா ஜானரில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்தில் காமமும், இளமை குறும்பும் ததும்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

அதிலும் ஒரு இளம் பெண், ‘துளசி வாசமிக்க ஆணுறை கிடைக்குமா?’ என கேட்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், இன்றைய இளம் தலைமுறையின் மனநிலையைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது. அத்துடன் பெற்றோர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் இடையே காதலிப்பது தொடர்பான கருத்து மோதல்களும் இடம் பிடித்திருக்கிறது.

மேலும் இப்படத்தின் டைட்டிலுடன் ‘2k கிட்ஸ்’ என்ற டேக்லைன் இணைக்கப்பட்டு இருப்பதால், இதற்கு இணையவாசிகளிடத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

https://youtu.be/-kRrofblYco

சிக்லெட்ஸ்

Chiclets 2K Kids Movie Trailer released

More Articles
Follows