கன்னடத்தில் ‘கடுகு’ ரீமேக்..; விஜய்மில்டன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ஜோடியாக அஞ்சலி.!

கன்னடத்தில் ‘கடுகு’ ரீமேக்..; விஜய்மில்டன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ஜோடியாக அஞ்சலி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadugu remake in kannada‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.

அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார்.

‘கடுகு’ ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தைத் தமிழில் ‘கோலிசோடா’, ‘கடுகு’ போன்ற படங்களைத் தயாரித்த ரஃப்நோட் நிறுவனம் , கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார்.

பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். Pro ஜான்சன்.

இப்படத்தின் பூஜை பெங்களூரில் இன்று நடந்தது. வரும் 23ஆம் தேதி முதல் படப்பிடிப்பு பெங்களூரில் சான்ஸ்க்ரிட் ( Sanskrit collage ) கல்லூரியில் ஆரம்பமாகிறது.

படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

Director Vijay Milton’s next with Shiva Rajkumar starts with pooja today

நவம்பர் 27ல் ரிலீசாகவுள்ள கன்னி ராசி & காவல்துறை உங்கள் நண்பன் & அல்டி… ஒரு பார்வை

நவம்பர் 27ல் ரிலீசாகவுள்ள கன்னி ராசி & காவல்துறை உங்கள் நண்பன் & அல்டி… ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

altiநவம்பர் 27ல் ரிலீசாகவுள்ள கன்னி ராசி & காவல்துறை உங்கள் நண்பன் & அல்டி ஆகிய படங்கள் பற்றிய ஒரு பார்வை…

1. கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கன்னி ராசி’.

இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இதில் விமல், வரலட்சுமி, பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

2. ஆர்.டி.எம் இயக்கியுள்ள ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட வெளியீட்டு உரிமையை தனஞ்ஜெயன் கைப்பற்றியுள்ளார்.

மேலும், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெற்றிமாறனும் வெளியீட்டு பணியில் இணைந்துள்ளார்.

3. எம்ஜே.உசைன் இயக்கத்தில் நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி நாயகனாக அறிமுகமாகும் மர்ம திரில்லர் திரைப்படம் ‘அல்டி’.

இதில் கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் செண்ட்ராயன், மாரிமுத்து, ராபர்ட், ‘பசங்க’ சிவகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இதற்கு ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக வில்சி பணியாற்றியுள்ளார்.

Kanni Rasi, KUN and Alti to release on 27 th november

என்னுடன் இருப்பவர்களை இருக்காதே என கூறலாம்… ஆனால் என்னுடன் பயணிக்க பலர் ரெடி.. ; விஜய் மீது எஸ்ஏசி தாக்கு

என்னுடன் இருப்பவர்களை இருக்காதே என கூறலாம்… ஆனால் என்னுடன் பயணிக்க பலர் ரெடி.. ; விஜய் மீது எஸ்ஏசி தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAC Vijayசில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இந்த கட்சியின் மாநிலத் தலைவராக R.K.ராஜா என்னும் பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஓர் அறிக்கை வெளியானது.

அதில் தன்னுடைய ரசிகர் யாரும் அதில் சேர வேண்டாம் என தெரிவித்தார் விஜய்.

இந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார் பத்மநாபன்.

இந்த நிலையில் சென்னையில் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்திய 101-வது நாள் கொரோனா உதவி நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அவர் பேசியதாவது..

“அரசியல்வாதிகள் மக்கள் சேவகர்கள். ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் மறந்து விடுகிறார்கள்.

மக்கள் வரிப்பணத்தை சுரண்டும் அவர்களுக்கு ஏன் தண்டனைகள் வழங்கப்படவில்லை.

நல்ல எண்ணத்தில் தான் ஒரு பாதையை உருவாக்கி உள்ளேன். சமூக உணர்வுள்ளவர்கள் வாருங்கள்.

உங்களுக்கு நான் அடித்தளமாக இருப்பேனே தவிர தலைவனாக இருக்க மாட்டேன்.

எப்போதும் நான் ஆளும் கட்சியுடன் இருக்க மாட்டேன். எதிர்க் கட்சியுடன் தான் இருப்பேன். அப்போது தான் எதிர்நீச்சல் போட முடியும்.

என்னுடன் இருப்பவர்களை இருக்காதே என (விஜய்) கூறலாம். ஆனால் என்னுடன் பயணிக்க பலர் தயாராக இருக்கிறார்கள்.

எல்லோரும் சுயநலமாக மாறிவிட்டனர்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நான் தற்போது தனி மரமாக நிற்கிறேன். இது வேரூன்றி நின்ற மரம்.

இன்றைய தொண்டன் நாளைய தலைவன்.. இப்போது தொண்டு செய்தால் நாளை தலைவன் ஆவார்கள்.”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

SAC recent speech at Kalappai Makkal Iyakkam event

2021ல் 10-11-12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து..? அமைச்சர் கருத்து

2021ல் 10-11-12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து..? அமைச்சர் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sengottaiyanகொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து எனவும் அனைத்து மாணவர்களும் பாஸ் எனவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ஆன்லைனில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

இதனையடுத்து பள்ளிகள் திறப்பு எப்போது.? என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது…

பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்த 2021 ஆம் ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

10th 11th 12th public exam to cancel in 2021 ?

புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு நீக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு நீக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pondicherry collectorஉலகையே கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளில் இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தியாவில் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 35,152 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர்.

இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 608 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 705 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை கொரோனா தகவல்களை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் இரவு நேரங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் ஹோட்டல், தொழிற்சாலைகள், பார்கள், கடைகள் ஆகியவை வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி கடற்கரை சாலையில் விதிக்கப்பட்டிருந்த தடையும் திரும்ப பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார்.

COVID-19 lockdown at night time from 10 pm to 6 am lifted in Puducherry

வேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பூ கார் மீது லாரி மோதி விபத்து..; முருக கடவுள் காப்பாற்றியதாக குஷ்பூ தகவல்

வேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பூ கார் மீது லாரி மோதி விபத்து..; முருக கடவுள் காப்பாற்றியதாக குஷ்பூ தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushboo car accidentஇன்று நவம்பர் 18 கடலூர் அருகே பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக குஷ்பு காரில் பயணித்தார்.

அப்போது மேல்மருவத்தூர் அருகே அவருடைய கார் மீது லாரி மோதி கார் விபத்தில் சிக்கியது.

குஷ்பு கார் விபத்து என்ற தகவல் பரவியதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

கார் விபத்து தொடர்பாக குஷ்பு கூறியதாவது…

“மேல்மருவத்தூர் அருகே ஒரு கன்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் நான் பத்திரமாக உள்ளேன்.

கடலூர் வேல் யாத்திரைக்காக செல்கிறேன்.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார்.

என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்.

எங்கள் யாருக்கும் காயம் இல்லை. டிரைவரின் புத்திசாலிதனத்தால் அனைவரும் பிழைத்தோம்.

இந்த விபத்தில் ஏதேனும் சதி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவர் கூறியதாவது… இடது கை தோள்பட்டை பகுதியில் வலி உள்ளது. நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தேன்.

உங்கள் அன்பும் ஆதரவும் என்னை இன்னும் வலிமையடைய செய்கிறது”.

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்புவை பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.

Actress / Politician Khushboo meets with the accident

More Articles
Follows