சூர்யா-தனுஷ்-விஜய்சேதுபதி ரூட்டில் சிவகார்த்திகேயன்

சூர்யா-தனுஷ்-விஜய்சேதுபதி ரூட்டில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan plans to produce low budget movies to support Talented Youngstersசினிமாவில் நடிகர்கள் படம் தயாரிப்பது ஒன்றும் புதிதல்ல.

ஒரு சிலர் அவர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பார்கள். மற்ற சிலர் மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிப்பார்கள்.

இதில் சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்டோர்கள் தாங்கள் நடிக்காத படமென்றாலும் தரமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லோ பட்ஜெட்டில் நல்ல படங்களை கொடுக்கின்றனர்.

36 வயதினிலே, பசங்க2, மகளிர் மட்டும், கடுகு (ரிலீஸ் மட்டும்) ஆகிய படங்களை சூர்யா தயாரித்திருந்தார்.

அதுபோல் காக்கா முட்டை, விசாரணை, அம்மா கணக்கு ஆகிய நல்ல படக்களை தயாரித்திருந்தார் தனுஷ்.

இவர்களைத் தொடர்ந்து ஆரஞ்ச் மிட்டாய் படத்தை தயாரித்திருந்தார் விஜய்சேதுபதி.

இந்நிலையில் புதிய திறமையான கலைஞர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தவும், தரமான படங்களை கொடுக்கவும் முடிவு செய்த சிவகார்த்திகேயன் ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கவிருக்கிறாராம்.

இதன் மூலம் குறைந்த செலவில் புதிய படங்களை கொடுக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Sivakarthikeyan plans to produce low budget movies to support Talented Youngsters

ரஜினிகாந்த் காட்டுவது பாபா முத்திரையே இல்லை… : சரத்குமார்

ரஜினிகாந்த் காட்டுவது பாபா முத்திரையே இல்லை… : சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini showing Goat head Its not Baba symbol says Sarathkumarதமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டது.

இதனை கண்டிக்கும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ச.ம.க தலைவரும் நடிகருமான சரத்குமார் கலந்துக் கொண்டு பேசினார்.

முன்னதாக, கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு சரத்குமார் சைக்கிளில் பயணம் செய்து மேடைக்கு வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றவர்வர் ரஜினிகாந்த்.

அவர் காட்டுவது பாபா முத்திரை அல்ல; அது ஆட்டுத்தலை. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன?” என கடுமையாக விமர்சித்துப் பேசினார் சரத்குமார்.

Rajini showing Goat head Its not Baba symbol says Sarathkumar

sarathkumar today

போன வருசம் மிஸ் ஆச்சு; இந்த வருசம் தனுஷ் பிறந்தநாளில் டபுள் ட்ரீட்

போன வருசம் மிஸ் ஆச்சு; இந்த வருசம் தனுஷ் பிறந்தநாளில் டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maari 2 stillsதனுஷ் நடிப்பில் ஒரு ஹாலிவுட் படம், எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் மாரி 2 படம் படத்தை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜுலை 28ஆம் தேதி (ஒரு நாள் முன்னதாக 27) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் சௌந்தர்யா ரஜினி இயக்கிய விஐபி2 படத்தையும் தனுஷ் பிறந்தநாளில் வெளியிடவிருந்தனர்.

ஆனால் சில காரணங்களால் இந்த படம் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போனது.

எனவே போன வருடம் போல இந்த வருடம் மிஸ் ஆகாது என நம்பலாம்.

பாலாஜிமோகன் இயக்கவுள்ள மாரி 2 படத்தில் தனுஷ் உடன் சாய்பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பர்ஸ்ட் லுக் ட்ரீட்

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பர்ஸ்ட் லுக் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanவேலைக்காரன் படத்தை தொடர்ந்து மீண்டும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது ஒரு படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார்.

இமான் இசையமைக்கும் இப்படத்தில் சமந்தா, சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் பொன்ராம் இயக்கிவரும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

தன் கேரியருக்கு உதவிய தயாரிப்பாளரின் 100வது படத்தில் விஜய்

தன் கேரியருக்கு உதவிய தயாரிப்பாளரின் 100வது படத்தில் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay rb choudaryபல திறமையான கலைஞர்களை தன் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக சினிமாவுலகில் அறிமுகப்படுத்தியவர் ஆர்பி. சௌத்ரி.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 95க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார் இவர்.

ஆரம்ப கால படங்களில் ஆக்சன் நாயகனாக வலம் வந்த விஜய்யை காதல் நாயகனாகவே மாற்றியதே இந்த நிறுவனம்தான்.

விஜய் நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் உள்ளிட்ட பல படங்களின் மூலம் இது சாத்தியமானது.

அண்மையில் கூட மோகன்லால், விஜய் இணைந்து நடித்த ஜில்லா படத்தை தயாரித்திருந்தனர்.

இந்நிலையில் தன் 100வது படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

இதில் விஜய் நடிக்க வேண்டும் என விரும்பி, அவரை நாட, அவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இது குறித்த அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

கடந்த வருடம் வெளியான விஜய்யின் மெர்சல் படம் கூட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay may act in Super Good films in 100th movie

முதன்முறையாக கமல்-ஷங்கர் கூட்டணியில் நயன்தாரா

முதன்முறையாக கமல்-ஷங்கர் கூட்டணியில் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara to pair with Kamal for Indian 2 Shankar directorialரஜினி, விஜய், அஜித் முதல் இன்றைய இளம் ஹீரோக்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி வரை ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா.

ஆனால் இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனுடன் இதுவரை நடிக்கவில்லை.

இவர் சினிமாவுக்கு வந்து 15 வருடங்களை கடந்து விட்ட போதிலும் இந்த ஜோடி இணையாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் முதன்முறையாக கமலுடன் நயன்தாரா இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் ஒரு புரட்சிக்கரமான வேடத்திற்கு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாம்.

நயன்தாராவும் இந்த கூட்டணிக்கு சம்மதிப்பார் என்றே நம்பலாம்.

Nayanthara to pair with Kamal for Indian 2 Shankar directorial

More Articles
Follows