‘சூர்யா-விஷால் ரெண்டு பேர்தான் ரியல் ஹீரோஸ்…’ விஜய் மில்டன்

‘சூர்யா-விஷால் ரெண்டு பேர்தான் ரியல் ஹீரோஸ்…’ விஜய் மில்டன்

vijay miltonகோலி சோடா, 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கியுள்ள படம் கடுகு.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் மில்டன் பேசும்போது…

இப்படத்தை ஆரம்பித்த போது ராஜகுமாரன் ஹீரோ என்றபோது அனைவரும் கிண்டலடித்தார்கள். அவரே ஹீரேவாக முதலில் மறுத்தார்.

ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது படத்தை பார்த்த அனைவரும் அவர்தான் சரியாக பொருத்தமாக இருந்தார் என்றார்கள்.

அதுபோல் எந்த ஹீரோவும் ஒத்துக்க மாட்டார். அந்த வேடத்தில் பரத் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தை பார்த்து வாங்கிய சூர்யாவுக்கு ரொம்ப நன்றி.

சினிமாவில் நடிப்பது மட்டும் ஹீரோயிசம் இல்லை. சினிமாவை தாண்டியும் ஹீரோவாக இருக்க வேண்டும்.

விஷால் எதையும் துணிந்து செய்கிறார்.

அதுபோல் சூர்யா அகரம் பவுண்டேசன் அறக்கட்டளை வைத்திருக்கிறார். இவர்கள்தான் ரியல் ஹீரோக்கள்.

அகரம் மூலம் நிறைய கல்வி உதவிகள் மற்றும் சேவைகள் செய்து வருகிறார்.

சினிமா இல்லாவிட்டாலும் அகரம் பவுண்டேசன் போதும். அவர் ஒரு ரியல் ஹீரோதான்.” என்று பேசினார்.

Suriya and Vishal are real heros says Director Vijay Milton

suriya vishal

‘நான் எனக்கு போட்ட மார்க் ரொம்ப கம்மிதான்…’ சூர்யா

‘நான் எனக்கு போட்ட மார்க் ரொம்ப கம்மிதான்…’ சூர்யா

Actor Suriyaவிஜய் மில்டன் இயக்கத்தில் டைரக்டர் ராஜகுமாரன், பரத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடுகு.

இப்படத்தை தன் 2டி நிறுவனத்தின் மூலம் வருகிற மார்ச் 24ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார் சூர்யா.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு அவர் பேசியதாவது…

நான் இப்போது ஒரு புது வீடு கட்டியிருக்கிறேன். நான் அப்பா அம்மா, கார்த்தி அனைவரும் ஒரே இடத்தில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இது அனைத்தும் சினிமா கொடுத்தது. இங்க இருக்கிற அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் சினிமாவுல வாழ்க்கை கிடைச்சிருக்கு.

சினிமாவுக்கு நாங்க திருப்பி என்ன செய்தோம் என்ற கேள்விக்கு பதில் சொல்வது போலதான் 2டி எண்டர்டெயின்மெண்ட்-ஐ நான் பார்க்குறன். நான் அல்லாத படங்களையும் வெளியே கொண்டு வரவேண்டும்.

நல்ல படங்களையும் ஆடியன்ஸ்க்கு ரீச் பண்ண வைக்கனும். ட்ரீம் வாரியர், பொட்டென்சியல், ஸ்டுடியோ க்ரீன் என்று இருந்தாலும் நான் நேரடியாக பண்ணனும் என்று தோனுச்சு அதனால தான் 2டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

முதலில் படம் தயாரிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தேன். பசங்க 2, 36 வயதினிலே என்று படம் தயாரித்தோம். எப்பவுமே சின்ன பட்ஜெட் படத்துல மனசார விஷயம் நடக்கும்.

என்ன தடங்கள் வந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் நடத்தி காட்டணும் என்ற எண்ணம் சின்ன பட்ஜெட் படங்களில் தான் வரும்.

எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. மறுபடியும் ஒரு கருவில் இருந்து வெளியே வந்தால் பிறகு அதுக்குள்ள போக முடியாது என்று சொல்வார்கள் இல்லையா, ஆனால் மீண்டும் அதுபோல ஒரு இடத்துக்கு போகனும் என்று எனக்கு ஆசை வந்தது.
அதனால் அதுபோன்ற எண்ணத்தோடு, வெறியோடு இருப்பவர்களுடன் நான் இணைந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர்களோடு இணைந்தேன்.

இவர் நடிகர், கேமிராமேன் என்று தாண்டி நல்ல நண்பர். எனக்கும் என்னோட நட்பு வட்டாரத்த புதுப்பிச்சக்கணும். நல்ல நண்பர்களாக இருந்தோம், இன்னும் நெருங்க கடுகு ஒரு வாய்ப்பாக இருந்தது. படம் பார்த்தோம் நல்ல படம். ரிலீஸ் பண்ண முடிவு செய்தோம்.

இது ஒரு புது முயற்சி, இதற்கு நான் ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கேன். அழகான கெமிஸ்ட்ரி நடத்திருக்கு, ஒரு இயக்குநர் தயாரிப்பாளர், இங்கு உள்ள நடிகர்கள் அனைவரும் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் தான் தெரிவாங்க.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்திற்குள் போய்விடுவோம். யுனிக் படத்தை யார் எடுத்தாலும் ஆடியன்ஸ் சப்போர்ட் பண்ணுவாங்க, சின்னது பெருசு என்று பார்க்காமல் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பார்கள்.

நாங்க மட்டும் சொல்வது இல்லாம, மீடியாவாகிய நீங்கள் சொல்வதையும் நம்பி வரவேற்பார்கள். அந்த வகையில் கடுகு படத்தையும் நிச்சயம் கைதட்டி வரவேற்ப்பார்கள். பாடல்கள், பைட், காமெடி என்று அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கும்.

பரத் நடிக்க எப்படி ஒத்துக்கிட்டாறு என்று எனக்கு சர்பிரைசாக இருந்தது. அந்த அளவுக்கு இதில் ஒரு வேடமாக அவர் உழைத்திருக்காங்க.இந்த படத்துக்கு நாங்க ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கோம், மற்றபடி படத்துல பங்குபெற்றவர்கள் தான் காரணம்.

இந்த நிகழ்ச்சி வித்தியாசமான முறையில் நடக்கிறது. இதில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டுக்கள், அவரது சேவைகளுக்கு பாராட்டுக்கள். நான் ஒருவரை சந்தித்தேன், அப்போது அவர் உங்களுக்கு நீங்களே மார்க் போடுங்க என்றார்.

அப்போது எனக்கு மற்றவர்கள் மார்க் போட்டதை காட்டிலும் நான் குறைவாக மார்க் போட்டேன், அதைப் பார்த்த அவர், மத்தவங்க உங்களுக்கு அதிகமாக மார்க் போட்டிருக்க நீங்க ஏன் குறைவாக போட்றீங்க, என்று கேட்டார்.

உங்கள உங்களுக்கு பிடித்தால் தான் மற்றவர்களுக்கு பிடிக்கும், என்பது போல மாற்றினார்கள். அதுதான் இந்த படமும். பண்ணுவதற்கு. அதுமட்டும் அல்ல, இன்னும் பல விஷயங்கள் இருக்கு.

கடுகு நல்ல படம், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும். நன்றி.” என்று பேசினார் சூர்யா.

Actor Suriya given low marks to him self

kadugu team

‘கண்ணா… கலக்கீட்டீங்க…’ மாநகரம் படத்திற்கு ரஜினி பாராட்டு

‘கண்ணா… கலக்கீட்டீங்க…’ மாநகரம் படத்திற்கு ரஜினி பாராட்டு

Rajinikanth congratulated Maanagaram movie teamஎதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகும் படங்கள் பல சமயங்களில் எவரும் எதிர்பாராத வகையில் பெரியளவில் வரவேற்பை பெற்று விடுகின்றன.

சமீபத்தில் வெளியான குற்றம் 23, நிசப்தம் மற்றும் மாநகரம் ஆகிய படங்களை இந்த வரிசையில் சேர்க்கலாம்.

சமீபத்தில் குற்றம் 23 மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா படங்களை பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி, எஸ்.ஆர். பிரபு தயாரித்த மாநகரம் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினி.

இயக்குநர் லோகேஷ் கனகராஜை தொலைபேசியில் தொடர்புகொண்டு “கண்ணா ஹா ஹா” படம் பார்த்தேன் கலக்கிட்டிங்க , சூப்பர்.. நல்ல படம் சீட் நுனியில் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன்.. கலக்குங்க , கலக்குங்க என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு இதே எஸ். ஆர். பிரபு தயாரித்த “ஜோக்கர்” படத்தையும் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth congratulated Maanagaram movie team

விவேகம் விலகியதால் தப்பித்த வேலைக்காரன்

விவேகம் விலகியதால் தப்பித்த வேலைக்காரன்

Ajith sivakarthikeyanஅஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படமும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

இதில் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 25 விநாயகர் சதுர்த்தி என்று படத்தின் பூஜை அன்றே அறிவிக்கப்பட்டு விட்டது.

ஒருவேளை இதே நாளில் விவேகம் படம் வெளியானால் இரண்டுக்கும் மோதல் வலுக்கும் எனவும், இல்லையென்றால் ஒரு படம் விலகும் சூழ்நிலை உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் விவேகம் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10ல் வெளியாக அதிகபட்ச வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே விவேகம் விலகியதால் வேலைக்காரன் தப்பித்தார் என்றே சொல்லலாம்.

Vivegam and velaikaran movies release date updates

டீசர் ரிலீசுக்கு முன்பே தன் விவேகத்தை காட்டும் அஜித்

டீசர் ரிலீசுக்கு முன்பே தன் விவேகத்தை காட்டும் அஜித்

Ajithசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது வரை படம் தொடர்பாக பர்ஸ்ட் லுக்கை தவிர எதுவும் வெளியாகவில்லை.

படத்தின் டீசர் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகலாம் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வியாபாரம் தற்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதன் தமிழ்நாட்டு உரிமையை பெற பிரபல நிறுவனம் ஒன்று ரூ. 52 கோடி வரை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

பிறந்த நாளுக்கே 100வது நாள் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

பிறந்த நாளுக்கே 100வது நாள் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

Actor Vijayஒரு படம் வெளியாகி 25, 50 மற்றும் 100 நாட்களை கடந்து விட்டால் அதற்கான விழா மற்றும் வெற்றி விழா கொண்டாடுவதை பார்த்து இருப்போம்.

அதுபோல் நடிகர்களிள் பிறந்த நாளுக்கு விழா எடுத்து ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்து இருப்போம்.

ஆனால் முதன்முறையாக பிறந்தநாளுக்கு 100வது நாள் விழா எடுத்து இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

என்ன பாஸ்.. புரியலையா..?

வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருகிறது.

அந்த நாளுக்கு இன்றிலிருந்து 100 நாட்கள் வரை இடைவெளி உள்ளது.

ஆனால் தற்போதே 100DAYS FOR VIJAY BIRTHDAY என ட்ரண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.

More Articles
Follows