‘வாரணம் ஆயிரம் பட வரிசையில் கடுகு இருக்கும்..’ சூர்யா நெகிழ்ச்சி

‘வாரணம் ஆயிரம் பட வரிசையில் கடுகு இருக்கும்..’ சூர்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி தயாரித்துள்ள படம் கடுகு.

இதில் டைரக்டரும் நடிகை தேவயாணியின் கணவருமான ராஜகுமாரன் நாயகனாக நடித்துள்ளார்.

முக்கிய கேரக்டரில் பரத், சுபிக்ஷா மற்றும் ஏ.வெங்கடேஷ் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சூர்யா, இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசும்போது…

நிறைய படங்களில் நாம் பணிபுரிந்தாலும் சில படங்கள் நம் மனசுக்கு பிடித்த படமாக இருக்கும்.

கதாபாத்திரத்தை முன் வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும்.

அப்படி சொன்னால் எனக்கு உடனே ஈர்ப்பு வரும். அப்படித்தான் நந்தா. வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தேன்.

தற்போது இந்த கடுகு படமும் நிச்சயம் அந்த வரிசையில் சேரும்.

படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

சிவகார்த்திகேயன் மனதோடு ஒன்றிய ‘மரகத நாணயம்’

சிவகார்த்திகேயன் மனதோடு ஒன்றிய ‘மரகத நாணயம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanஆதி, நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவர்களுடன் ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் – விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு ‘மரகத புதையல்’ ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு.

இவ்விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது…

“‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா என் மனதோடு எப்போதும் ஒன்றி இருக்கும். ஏனென்றால், நான், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பறையில் படித்தவர்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனும், பாடலாசிரியர் முத்தமிழும் எங்களுக்கு சீனியர்கள். கல்லூரி காலத்திற்கு பிறகு நாங்கள் ஐந்து பேரும் ஒன்றாக சந்திப்பது இந்த மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான்.

இத்தகைய வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். நிச்சயமாக திபு நைனன் தாமஸ், இசை துறையில் பெரிய வளர்ச்சியை காண்பார். அதற்கு இந்த மரகத நாணயம் தான் சிறந்த அடித்தளம்” என்று பேசினார்.

‘பேங்க் வேண்டாம்.. போஸ்ட் ஆபிஸ் போதும்.’. ஆரி ஆர்ப்பாட்டம்

‘பேங்க் வேண்டாம்.. போஸ்ட் ஆபிஸ் போதும்.’. ஆரி ஆர்ப்பாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Aariபணம் எடுப்பதிலும், பணத்தை போடுவதிலும் பல அதிரடி அறிவிப்புகளையும் கட்டணங்களையும் வங்கிகள் வெளியிட்டுள்ளன.

இதனால் நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன

இந்நிலையில் நாடு முழுவதும் நடக்கும் வங்கிகளின் கட்டணக் கொள்கையை எதிர்த்து “அஞ்சல் துறைக்கு மாறுவோம் வங்கிக் கொள்ளையை மாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் நடிகர் ஆரியின் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு அறப்போராட்டம் இன்று அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

‘சூர்யா-விஷால் ரெண்டு பேர்தான் ரியல் ஹீரோஸ்…’ விஜய் மில்டன்

‘சூர்யா-விஷால் ரெண்டு பேர்தான் ரியல் ஹீரோஸ்…’ விஜய் மில்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay miltonகோலி சோடா, 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கியுள்ள படம் கடுகு.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் மில்டன் பேசும்போது…

இப்படத்தை ஆரம்பித்த போது ராஜகுமாரன் ஹீரோ என்றபோது அனைவரும் கிண்டலடித்தார்கள். அவரே ஹீரேவாக முதலில் மறுத்தார்.

ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது படத்தை பார்த்த அனைவரும் அவர்தான் சரியாக பொருத்தமாக இருந்தார் என்றார்கள்.

அதுபோல் எந்த ஹீரோவும் ஒத்துக்க மாட்டார். அந்த வேடத்தில் பரத் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தை பார்த்து வாங்கிய சூர்யாவுக்கு ரொம்ப நன்றி.

சினிமாவில் நடிப்பது மட்டும் ஹீரோயிசம் இல்லை. சினிமாவை தாண்டியும் ஹீரோவாக இருக்க வேண்டும்.

விஷால் எதையும் துணிந்து செய்கிறார்.

அதுபோல் சூர்யா அகரம் பவுண்டேசன் அறக்கட்டளை வைத்திருக்கிறார். இவர்கள்தான் ரியல் ஹீரோக்கள்.

அகரம் மூலம் நிறைய கல்வி உதவிகள் மற்றும் சேவைகள் செய்து வருகிறார்.

சினிமா இல்லாவிட்டாலும் அகரம் பவுண்டேசன் போதும். அவர் ஒரு ரியல் ஹீரோதான்.” என்று பேசினார்.

Suriya and Vishal are real heros says Director Vijay Milton

suriya vishal

‘நான் எனக்கு போட்ட மார்க் ரொம்ப கம்மிதான்…’ சூர்யா

‘நான் எனக்கு போட்ட மார்க் ரொம்ப கம்மிதான்…’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriyaவிஜய் மில்டன் இயக்கத்தில் டைரக்டர் ராஜகுமாரன், பரத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடுகு.

இப்படத்தை தன் 2டி நிறுவனத்தின் மூலம் வருகிற மார்ச் 24ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார் சூர்யா.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு அவர் பேசியதாவது…

நான் இப்போது ஒரு புது வீடு கட்டியிருக்கிறேன். நான் அப்பா அம்மா, கார்த்தி அனைவரும் ஒரே இடத்தில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இது அனைத்தும் சினிமா கொடுத்தது. இங்க இருக்கிற அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் சினிமாவுல வாழ்க்கை கிடைச்சிருக்கு.

சினிமாவுக்கு நாங்க திருப்பி என்ன செய்தோம் என்ற கேள்விக்கு பதில் சொல்வது போலதான் 2டி எண்டர்டெயின்மெண்ட்-ஐ நான் பார்க்குறன். நான் அல்லாத படங்களையும் வெளியே கொண்டு வரவேண்டும்.

நல்ல படங்களையும் ஆடியன்ஸ்க்கு ரீச் பண்ண வைக்கனும். ட்ரீம் வாரியர், பொட்டென்சியல், ஸ்டுடியோ க்ரீன் என்று இருந்தாலும் நான் நேரடியாக பண்ணனும் என்று தோனுச்சு அதனால தான் 2டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

முதலில் படம் தயாரிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தேன். பசங்க 2, 36 வயதினிலே என்று படம் தயாரித்தோம். எப்பவுமே சின்ன பட்ஜெட் படத்துல மனசார விஷயம் நடக்கும்.

என்ன தடங்கள் வந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் நடத்தி காட்டணும் என்ற எண்ணம் சின்ன பட்ஜெட் படங்களில் தான் வரும்.

எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. மறுபடியும் ஒரு கருவில் இருந்து வெளியே வந்தால் பிறகு அதுக்குள்ள போக முடியாது என்று சொல்வார்கள் இல்லையா, ஆனால் மீண்டும் அதுபோல ஒரு இடத்துக்கு போகனும் என்று எனக்கு ஆசை வந்தது.
அதனால் அதுபோன்ற எண்ணத்தோடு, வெறியோடு இருப்பவர்களுடன் நான் இணைந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர்களோடு இணைந்தேன்.

இவர் நடிகர், கேமிராமேன் என்று தாண்டி நல்ல நண்பர். எனக்கும் என்னோட நட்பு வட்டாரத்த புதுப்பிச்சக்கணும். நல்ல நண்பர்களாக இருந்தோம், இன்னும் நெருங்க கடுகு ஒரு வாய்ப்பாக இருந்தது. படம் பார்த்தோம் நல்ல படம். ரிலீஸ் பண்ண முடிவு செய்தோம்.

இது ஒரு புது முயற்சி, இதற்கு நான் ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கேன். அழகான கெமிஸ்ட்ரி நடத்திருக்கு, ஒரு இயக்குநர் தயாரிப்பாளர், இங்கு உள்ள நடிகர்கள் அனைவரும் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் தான் தெரிவாங்க.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்திற்குள் போய்விடுவோம். யுனிக் படத்தை யார் எடுத்தாலும் ஆடியன்ஸ் சப்போர்ட் பண்ணுவாங்க, சின்னது பெருசு என்று பார்க்காமல் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பார்கள்.

நாங்க மட்டும் சொல்வது இல்லாம, மீடியாவாகிய நீங்கள் சொல்வதையும் நம்பி வரவேற்பார்கள். அந்த வகையில் கடுகு படத்தையும் நிச்சயம் கைதட்டி வரவேற்ப்பார்கள். பாடல்கள், பைட், காமெடி என்று அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கும்.

பரத் நடிக்க எப்படி ஒத்துக்கிட்டாறு என்று எனக்கு சர்பிரைசாக இருந்தது. அந்த அளவுக்கு இதில் ஒரு வேடமாக அவர் உழைத்திருக்காங்க.இந்த படத்துக்கு நாங்க ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கோம், மற்றபடி படத்துல பங்குபெற்றவர்கள் தான் காரணம்.

இந்த நிகழ்ச்சி வித்தியாசமான முறையில் நடக்கிறது. இதில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டுக்கள், அவரது சேவைகளுக்கு பாராட்டுக்கள். நான் ஒருவரை சந்தித்தேன், அப்போது அவர் உங்களுக்கு நீங்களே மார்க் போடுங்க என்றார்.

அப்போது எனக்கு மற்றவர்கள் மார்க் போட்டதை காட்டிலும் நான் குறைவாக மார்க் போட்டேன், அதைப் பார்த்த அவர், மத்தவங்க உங்களுக்கு அதிகமாக மார்க் போட்டிருக்க நீங்க ஏன் குறைவாக போட்றீங்க, என்று கேட்டார்.

உங்கள உங்களுக்கு பிடித்தால் தான் மற்றவர்களுக்கு பிடிக்கும், என்பது போல மாற்றினார்கள். அதுதான் இந்த படமும். பண்ணுவதற்கு. அதுமட்டும் அல்ல, இன்னும் பல விஷயங்கள் இருக்கு.

கடுகு நல்ல படம், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும். நன்றி.” என்று பேசினார் சூர்யா.

Actor Suriya given low marks to him self

kadugu team

‘கண்ணா… கலக்கீட்டீங்க…’ மாநகரம் படத்திற்கு ரஜினி பாராட்டு

‘கண்ணா… கலக்கீட்டீங்க…’ மாநகரம் படத்திற்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth congratulated Maanagaram movie teamஎதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகும் படங்கள் பல சமயங்களில் எவரும் எதிர்பாராத வகையில் பெரியளவில் வரவேற்பை பெற்று விடுகின்றன.

சமீபத்தில் வெளியான குற்றம் 23, நிசப்தம் மற்றும் மாநகரம் ஆகிய படங்களை இந்த வரிசையில் சேர்க்கலாம்.

சமீபத்தில் குற்றம் 23 மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா படங்களை பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி, எஸ்.ஆர். பிரபு தயாரித்த மாநகரம் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினி.

இயக்குநர் லோகேஷ் கனகராஜை தொலைபேசியில் தொடர்புகொண்டு “கண்ணா ஹா ஹா” படம் பார்த்தேன் கலக்கிட்டிங்க , சூப்பர்.. நல்ல படம் சீட் நுனியில் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன்.. கலக்குங்க , கலக்குங்க என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு இதே எஸ். ஆர். பிரபு தயாரித்த “ஜோக்கர்” படத்தையும் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth congratulated Maanagaram movie team

More Articles
Follows