ஆர்.கே.சுரேஷ் உடன் இணையும் ‘கடுகு’ நாயகி சுபிக்ஷா

ஆர்.கே.சுரேஷ் உடன் இணையும் ‘கடுகு’ நாயகி சுபிக்ஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadugu fame Subiksha teams up with RK Suresh for Vettai Naaiதாரை தப்பட்டை மற்றும் மருது படங்களில் வில்லனாக மிரட்டிய ஆர்.கே.சுரேஷ் தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சில படங்களை தன் ஸ்டூடியோ 9 என்ற பேனரில் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், ‘மன்னாரு’ பட இயக்குனர் ஜெய்சங்கர் இயக்கவுள்ள ஒரு படத்தில் நாயகனாக ஆர் கே சுரேஷ் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு ‘வேட்டை நாய்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இதில் நாயகியாக கடுகு பட புகழ் சுபிக்ஷா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இவர் கடுகு படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kadugu fame Subiksha teams up with RK Suresh for Vettai Naai

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivaji Productions to Produce Hollywood Movie titled Commissionedகோலிவுட் சினிமாவில் உள்ள முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனமும் ஒன்று.

கோலிவுட்டில் பல படங்களை தயாரித்த இந்நிறுவனம் தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதிக்கவிருக்கிறது.

அமெரிக்காவின் தர்லின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

‘கமிஷண்ட்’ (Commissioned) என்ற இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கிபி 52ஆம் ஆண்டில் வாழ்ந்த புனித தாமஸ் என்பவர் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட சம்பவங்களே இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.

விரைவில் இதற்கான பணிகளை தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் நடிக்கவுள்ள இந்திய மற்றும் ஹாலிவுட் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Sivaji Productions to Produce Hollywood Movie titled Commissioned

இயக்குநர் தனுஷை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்

இயக்குநர் தனுஷை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shankar Dhanushதனுஷ் முதன்முறையாக இயக்கிய பவர் பாண்டி படம் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது.

இதனால் இயக்குனர் தனுஷுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தை இந்தியிலும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஓரிரு படங்களை இயக்க, தனுஷுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் தன் பாராட்டுகளை தனுஷுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில் ஷங்கர் பதிவிட்டுள்ளதாவது…

Shankar Shanmugham‏Verified account @shankarshanmugh
Power Pandy-A simple film with cute touchng and movng moments Congrts 2 Dhanush n team. Nice performnce by Rajkiran Revathy Prasanna n othrs

இதற்கு தனுஷ் நன்றி தெரிவித்து இருந்தார்.

Shankar praises Dhanush and Power Paandi team

ரஜினி-விஜய்-சிவகார்த்திகேயன் போல் அஜித் மாற்றுவாரா?

ரஜினி-விஜய்-சிவகார்த்திகேயன் போல் அஜித் மாற்றுவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajithரஜினிகாந்த் நடித்து வரும் 2.ஓ படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிடயிருந்தனர்.

ஆனால் அண்மையில் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து, 2018ஆம் ஆண்டு ஜனவரி 25இல் ரிலீஸ் என்று அறிவித்தனர்.

அதுபோல் அட்லி இயக்கத்தில் உருவாகும் விஜய் 61 படத்தின் தேதியை அறவிக்காமல் இருந்தனர்.

ஆனால் ரஜினி படம் தீபாவளி ரேஸில் இருந்து, விலகியதை அடுத்து, விஜய் பட ரிலீஸ் தேதியை அறிவித்தனர்.

இவர்களைத் அடுத்து சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட ரிலீஸ் தேதியை ஆகஸ்ட்டில் இருந்து செப்டம்பருக்கு ஒத்தி வைத்தனர்.

இவர்களைப் போல் அஜித்தின் விவேகம் படமும் ஆகஸ்ட்டில் 10ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Will Ajith change his Vivegam release date

கமல்-விக்ரம் வரிசையில் ஜெயம் ரவி எடுக்கும் ரிஸ்க்

கமல்-விக்ரம் வரிசையில் ஜெயம் ரவி எடுக்கும் ரிஸ்க்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal vikram jayanm raviஇயக்குனர் விஜய் வரிசையில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் வனமகன்.

இது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள 50வது படமாகும்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட மதன் கார்க்கி பேசும்போது…

வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு வசனங்களே கிடையாது. என்றார்.

இதற்கு முன்பு பேசும் படத்தில் கமல், பிதாமகன் படத்தில் விக்ரம் ஆகியோர் இதுபோன்ற கேரக்டர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடித்த இளைய தளபதி

சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடித்த இளைய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and rajiniரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

இப்படத்தை இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

இதனால் பல படங்கள் தங்களது ரிலீஸை தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில் 2.0 பட ரிலீஸை தள்ளி வைத்து அடுத்த ஆண்டு 25-01-2018 அன்று ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்தனர்.

எனவே அட்லி இயக்கி வரும் விஜய் 61 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

More Articles
Follows