லாரன்ஸை தொடர்ந்து மீண்டும் ஜீவாவுடன் இணையும் சாய்ரமணி

லாரன்ஸை தொடர்ந்து மீண்டும் ஜீவாவுடன் இணையும் சாய்ரமணி

jiiva sai ramaniநடிகர் ஜீவா இரு வேடங்களில் நடித்த சிங்கம் புலி படத்தை இயக்கியவர் சாய்ரமணி.

இப்படம் கடந்த 2011ஆம் ஆண்டில் வெளியானது.

இதனையடுத்து 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா என்ற படத்தை இயக்கினார்.

இந்நிலையில் மீண்டும் தன் முதல் பட நாயகன் ஜீவா உடன் இணையவிருக்கிறாராம் சாய்ரமணி.

இதை சம்பந்தபட்ட கலைஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர் ரஜினிக்காக ஒரு கதையை தயார் செய்து காத்திருப்பதாக கடந்தாண்டு கூறியிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Director Sai Ramani again teams up with Jiiva for new project

என்னிடம் அஜித் எதுவுமே கேட்கமாட்டார்..: கே.எஸ்.ரவிக்குமார்

என்னிடம் அஜித் எதுவுமே கேட்கமாட்டார்..: கே.எஸ்.ரவிக்குமார்

Rajini Kamal Ajithரஜினி, கமல், அஜித் ஆகியோருக்கு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.

இவர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ஜெய் சிம்ஹா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இதன் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார் படம் குறித்து பேசினார்.

நான் இதுவரை 47 படங்களை இயக்கியுள்ளேன். விரைவில் 50வது படத்தை நெருங்கவுள்ளேன்.

என் கதை, படம், சூட்டிங் என எல்லாவற்றையும் பற்றி என் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நிறைய கேட்டு தெரிந்துக் கொள்வார்கள்.

ஆனால் இதுவரை இரண்டு நடிகர்கள் மட்டும் என்னிடம் எதையும் கேட்பதில்லை.

என் விஷயத்தில் அவர்கள் தலையிட்டதே இல்லை. ஒருவர் இந்த பட நாயகன் பாலகிருஷ்ணா, மற்றொருவர் அஜித்.” என்றார்.

சிவகார்த்திகேயன் பட வில்லனுடன் டூயட் பாடும் ஓவியா

சிவகார்த்திகேயன் பட வில்லனுடன் டூயட் பாடும் ஓவியா

Actress Oviyaபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமான ஓவியா தற்போது படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்சுடன் டூயட் பாடி வருகிறார்.

இதனையடுத்து ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கவிருக்கிறாராம்.

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் வில்லனாக நடித்த அன்சன் பால் என்பவர்தான் அந்த படத்தின் ஹீரோவாம்.

ஓவியா கேரளத்தை சேர்ந்தவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். அதுபோல் அன்சன் பாலும் கேரளாகாரர்தானாம்.

சுந்தரி நீயும் சுந்தரனும் சேர்ந்திருந்தால் திரு ஓணம்…..

ஆதிராஜனின் அருவா சண்ட பட டீசரை அமீர் வெளியிட்டார்

ஆதிராஜனின் அருவா சண்ட பட டீசரை அமீர் வெளியிட்டார்

Director Ameer launch Adhirajans Aruva Sanda movie teaserசிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்தப்படம் காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.

கௌரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைக்க, வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார்.

பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீஸரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். ’டீஸர் நன்றாக இருக்கிறது,

படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று அமீர் பாராட்டினார். ஒயிட் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை வி.ராஜா தயாரித்திருக்கிறார்.

Director Ameer launch Adhirajans Aruva Sanda movie teaser

aruva sanda teaser

மக்கள் மன்றத்தை பலப்படுத்த அரசியல் கதையில் ரஜினி.?

மக்கள் மன்றத்தை பலப்படுத்த அரசியல் கதையில் ரஜினி.?

Superstar Rajini going to act in Political story soonகடந்த 25 வருடங்களாக சினிமாவில் அரசியல் வசனம் பேசினார் ரஜினிகாந்த்.

எனவே அவரின் அரசியல் பிரவேசம் இந்த ஆண்டுகளில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போதுதான் அதற்கான நேரம் அமைந்துள்ளதாக கூறி, காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தார் ரஜினிகாந்த்.

அதன்படி இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனது ரசிகர் மன்றங்களை அதிரடியாக ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்படுவதாக அறிவித்தார்.

இவரின் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 மற்றும் காலா படங்கள் இந்தாண்டுக்குள் வெளியாகவுள்ளன.

எனவே தனது மன்றத்தை பலப்படுத்தும் விதமாகவும் இன்றைய அரசியலுக்கு ஏற்ப ஒரு கதையை தயார் செய்ய சொல்லியிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அது சங்கர் இயக்கும் முதல்வன்2 படமாக கூட இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Superstar Rajini going to act in Political story soon

பொங்கல் தினத்தில் கபாலி-மெர்சல் படங்களின் மெகா விருந்து

பொங்கல் தினத்தில் கபாலி-மெர்சல் படங்களின் மெகா விருந்து

On 2018 Pongal days Kabali and Mersal movies will be telecasted in Channels

கடந்த 2016ல் ரஜினி நடித்த கபாலி படம் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைத்தது.

அதுபோல் 2017ல் வெளியான விஜய்யின் மெர்சல் படம் வசூல் சாதனை படைத்தது.

தற்போது 2018 பொங்கல் தினத்தில் இந்த இரு நடிகர்களும் தங்கள் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து தரவுள்ளனர்.

மெர்சல் படம் ஜனவரி 14ல் ஜீ டிவியில் மாலை 4 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

அதுபோல் ஜனவரி 15ல் கபாலி படம் சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

On 2018 Pongal days Kabali and Mersal movies will be telecasted in Channels

More Articles
Follows