அங்கிள் ஆண்ட்டி வராதீங்க..; ‘நான் சிரித்தால்’ விழாவில் ஆதியின் ஆணவ பேச்சு

Hip Hop Aadhi Controversial speech at Naan Sirithaal eventமீசையை முறுக்கு, நட்பே துணை ஆகிய இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நான் சிரித்தால்’.

இந்த படத்தையும் அவ்னி மூவிஸ் சார்பாக சுந்தர் சி தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியே இசையமைத்துள்ளார்.

நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இவருடன் வழக்கம்போல ஹிப் ஹாப் ஆதியின் நண்பர்கள் படை இணைந்துள்ளது.

மேலும் கே.எஸ். ரவிக்குமார், ரவிமரியா, படவா கோபி, சுஜாதா, ஷா ரா, எருமை சாணி விஜய், முனிஷ்காந்த், உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் அடுத்த வாரம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ல் ரிலீசாகவுள்ளது.

காந்தி பெயரில் தல-தளபதியை கலாய்த்த ஹிப் ஹாப் ஆதி

இந்த நிலையில் இதன் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் மிக பிரம்மாண்டமாக நடத்தினர்.
வழக்கம்போல விழாவாக இல்லாமல் யூத்களை கவர்கிற அளவுக்கு வித்தியாசமான முறையில் விழாவை நடத்தினர்.

படத்தில் நடித்துள்ள கேரக்டர்கள் பெயர்களில் கலைஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

மேலும் ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஐஸ்வர்யாவின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில் ஒவ்வொரு பாடலையும் பாடிக் கொண்டிருந்தார் ஹிப் ஹாப் ஆதி. பார்வையாளர்களை எழுந்து ஆட சொன்னார். ஆனால் இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருந்தும் யாரும் எழுந்து ஆடவில்லை.

இறுதியாக நான் சிரிச்சா வேற லெவல் பாடல் வெளியிடப்பட்டது. அப்போதும் எழுந்து ஆட சொன்னார் ஆனால் யாரும் எழுந்து ஆடவில்லை. ஓரிரு இளைஞர்கள் அவர் கெஞ்சி கேட்டதற்காக ஆடினர்.

இதனிடையில் சிரித்துக் கொண்டே இது யூத் பங்ஷன். இங்கே நிறைய அங்கிள் ஆண்ட்டிகள் வந்துள்ளனர். அதனால்தான் யாரும் ஆடவில்லை. இனிமே வராதீங்க என்றார்.

ஆண்ட்டி.. ப்ளீஸ்.. உங்க அங்கிளை ஆட விடுங்க. அனுமதி கொடுங்க என்றார்.

திடீரென அதற்குள் சுதாரித்துக் கொண்டு இது குடும்ப படம். எல்லாரும் காண வேண்டிய படம் என்றார்.

ஆனால் இவரின் படத்தை இளைஞர்கள் மட்டும் பார்த்தால் படம் ஓடி விடுமா? படிக்கும் மாணவர்களுக்கு / இளைஞர்களுக்கு பணம் கொடுப்பதே அவர்களை பெற்றவர்கள் தான்.

அவர்கள் இல்லாமல் ஹிப் ஹாப் ஆதி எதிர்பார்க்கும் யூத் கூட்டம் வந்துவிடுமா? என பார்வையாளர்கள் பேசிக் கொண்டனர். இது அங்கு சின்ன சலசலப்பை ஏற்படுத்தியது.

Hip Hop Aadhi Controversial speech at Naan Sirithaal event

Overall Rating : Not available

Latest Post