தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுந்தர் சி தயாரிப்பில் ராணா இயக்கத்தில் வெளியான படம் நான் சிரித்தால்.
ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், கேஎஸ் ரவிக்குமார், ரவி மரியா, ஷாரா, படவா கோபி, சுஜாதா, பாண்டியராஜன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 14ல் வெளியானது. இன்று பிப்ரவரி 18ல் இந்த படத்தின் வெற்றி (சக்ஸஸ் மீட்டிங்) சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு வெற்றிக்கு காரணமானவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
இப்பட தயாரிப்பாளர் குஷ்பூவும் கலந்து கொண்டு பேசினார்.
சிரிப்பா சிரிக்குது… நான் சிரித்தால் விமர்சனம் 3/5
அவர் பேசியதாவது…
முதலில் ஹிப் ஹாப் ஆதியை எங்களுக்கு தெரியாது. என் மகள் அவரின் மிகப்பெரிய ரசிகை. அவள்தான் அந்த வீடியோக்களை காண்பித்தார்.
என் கணவர் (சுந்தர்) யார் அந்த பையன் என கேட்டார்? இவர் தான் ஹிப் ஹாப் ஆதி என அறிமுகம் செய்தார்.
ரஜினி மீது என் கண்கள்; அவர்தான் இந்திய சூப்பர் ஸ்டார்.. – குஷ்பூ
அதன்பின்னர் அவர் எங்கள் படங்களுக்கு இசையமைத்தார். இப்போது எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டார்.
ஆதி எப்போது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் மணிக்கணக்கில் என் கணவருடன் பேசிக் கொண்டே இருப்பார்.
இரவு வெகு நேரம் ஆனாலும் பேசிக் கொண்டே இருப்பார்கள். எனக்கு வந்த சக்காளத்தி ஆதி.
அவர்கள் இரவு நேரத்தில் தான் அதிகம் உழைக்கிறார்கள். அது அவர்களுடைய பாணி. நமக்கு காலை நேர உழைப்பு தான்.”
என பேசினார் குஷ்பு.
Khushboo Sundar speech at Naan Sirithaal success meet