மாஸ்டர் – 800… ஈஸ்வரன் – 200..; விஜய் & விஜய்சேதுபதியால் கடுப்பான சிம்பு ரசிகர்கள்

மாஸ்டர் – 800… ஈஸ்வரன் – 200..; விஜய் & விஜய்சேதுபதியால் கடுப்பான சிம்பு ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை 2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் ரீலீஸ் செய்யவுள்ளனர்.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்திருப்பதாலும் கைதி பட இயக்குனர் லோகேஷ் இயக்கியிருப்பதாலும் இதன் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா ஊரடங்கால் 8-9 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் தியேட்டருக்கு கூட்டம் அதிகளவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே 800 தியேட்டர்களில் மாஸ்டர் படத்தை வெளியிட உள்ளதாக தெரிகிறது.

இந்த படத்துடன் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.

ஆனால் ஈஸ்வரன் படத்திற்கு தமிழக அளவில் 200 தியேட்டர்களே ஒதுக்கப்பட உள்ளதாம்.

இதனால் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மீது சிம்பு ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கிறார்களாம்.

இத்துடன் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்த பட ரிலீசும் உறுதியானால் மாஸ்டர் & ஈஸ்வரன் பட ரிலீஸ் எண்ணிக்கையில் வேறுபாடு இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Simbu fans angry with Vijay and Vijay Sethupathi

சர்வதேசத் திரைப்பட விழா : இந்தியன் பனோரமா பிரிவில் ‘அசுரன் & தேன்’

சர்வதேசத் திரைப்பட விழா : இந்தியன் பனோரமா பிரிவில் ‘அசுரன் & தேன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவா மாநிலத்தில் நடைபெறும்.

இதில் அந்நிய மொழி திரைப்படங்களுடன் இந்திய மொழித் திரைப்படங்களும் திரையிடப்படும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டிற்கான இந்த திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி 51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தாண்டு கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தமிழ் சினிமாவிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம், வெகுஜன திரைப்படப் பிரிவில் திரையிடப்படவுள்ளது.

மேலும் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேன்’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.

தேன் திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்படும் படத்துக்குத் தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Asuran and Thaen selected in the Indian Panorama 2020

IMG-20201219-WA0055

லஞ்சம் கொடுத்து அரசாங்க வேலை வாங்கியவனின் கதை..; சீமான் பாராட்டு

லஞ்சம் கொடுத்து அரசாங்க வேலை வாங்கியவனின் கதை..; சீமான் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி. எம். கிரியேட்டர்ஸ் சார்பாக எம். கோவிந்தசாமி தயாரித்து எஸ். ஜி. சிவகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆர்டிகல் 41’.

பாலுசே, சிந்து, சூரியமூர்த்தி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் . ஷாஜகான் இசை.

ஜனவரியில் கட்சி ஆரம்பித்து ஏப்ரலில் முதல்வராக முடியுமா.?..; ரஜினியை சீண்டும் சீமான்

சமூக அவலங்களை எடுத்துரைக்கும் “சர்க்காரு வேலதான்” என்ற பாடலை சீமான் பாராட்டி உள்ளார்.

அரசாங்க வேலைக்கு கடன் வாங்கி பணத்தை கட்டும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் படத்தின் கரு.

பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது..

பதவிக்கு பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்..; ரஜினிகாந்த் எச்சரிக்கை

பதவிக்கு பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்..; ரஜினிகாந்த் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini warns his fans and his political party members விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் ரஜினிகாந்த்.

அவரது கட்சி பெயர் மக்கள் சேவை கட்சி என்றும் அவரது சின்னம் ஆட்டோ என்றும் தகவல்கள் வந்தன.

ஆனால் கட்சி தலைமை உறுதி செய்யும் வரை ரசிகர்கள் காத்திருக்குமாறு ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டது.

எனவே டிசம்பர் 31ஆம் தேதி இதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பூத் கமிட்டி அமைப்பதற்கான வேலைகளை ரஜினி முடுக்கிவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதாவது.. ஒரு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த பூத் கமிட்டி அவசியமானது.

இந்த கமிட்டி உறுப்பினர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று கட்சியின் செல்வாக்கை உயர்த்த பாடுபடுவர். வாக்காளர்களை தவறாமல் வாக்களிக்க வருகை புரிய வைப்பதில் பூத் கமிட்டியின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாக ஆகும்.

இதுவரை தமிழகம் முழுவதும் 47000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 20000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தி உள்ளதாம்.

வரும் 25ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து, அதற்கான பட்டியலை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலை ஒழிக்கவே நமது அரசியல் கட்சி எனவும் ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

Rajini warns his fans and his political party members

ஒரு நாள் தியானம் செய்ய கோர்ட்டிடம் அனுமதி கேட்கும் இளையராஜா..; ஏன்..?

ஒரு நாள் தியானம் செய்ய கோர்ட்டிடம் அனுமதி கேட்கும் இளையராஜா..; ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer ilayaraja and Prasad Studio court case updatesசென்னை சாலிகிராமத்தில் உள்ள அருணாச்சலம் சாலையில் அமைந்துள்ளது பிரசாத் ஸ்டூடியோ. அதில் கடந்த 35 ஆண்டுகளாக உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் தன் இசை பணிகளை செய்து வந்தார் இளையராஜா.

ஒலிப்பதிவு கூடத்தை, காலி செய்யும்படி, பிரசாத் நிர்வாகம், இளையராஜாவை கேட்ட நிலையில் இளையராஜா மறுக்கவே விவகாரம் கோர்ட் வரை சென்றது.

சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தன்னை வலுக்கட்டாயமாக பிரசாத் நிர்வாகம் வெளியேற்றியதாக புகார் கூறினார் இளையராஜா.

இதனையடுத்து பாரதிராஜா தலைமையில் திரைத்துறையினர் இளையராஜாவுக்கு ஆதரவாக புறப்பட்டு பிரசாத் ஸ்டூடீயோ சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் தன்னை ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இளையராஜா வழக்கு தொடுத்தார்.

இத்துடன் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் கேட்டார்.

இவ்வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இளையாராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் ஆஜராகினார்.

பிரசாத் ஸ்டுடியோ சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர்கள் இளம்பாரதி, அப்துல் சலிம் ஆகியோரும் ஆஜராகினர்.

இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ”இவ்வளவு ஆண்டுகள், இசை அமைத்த இடத்தில், ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர் கைப்பட எழுதியுள்ள குறிப்புகள், இசை கருவிகள், பெற்ற விருதுகள், அங்கு தான் உள்ளன,” என தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி, ‘இளையராஜா அங்கு பல நாட்கள் இருந்துள்ளார். அவர் அங்கு சென்று தியானம் செய்வதால், உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது” என கேட்டார்.

உடனே, வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இதுகுறித்து, நிர்வாகத்தினரிடம் பதில் பெற்று நீதிபதியுடம் தெரிவிப்பதாக கூறினார்.
இதனையடுத்து அடுத்த கட்ட விசாரணையை, வரும், திங்கட்கிழமை 21ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Music Composer ilayaraja and Prasad Studio court case updates

அவள் 2 அப்டேட்.. மீண்டும் படம் தயாரித்து நடிக்கும் சித்தார்த்

அவள் 2 அப்டேட்.. மீண்டும் படம் தயாரித்து நடிக்கும் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Siddharth plans to produce Aval 2நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த படம் அவள். ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த திகில் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியிருந்தார்.

முதலில் தமிழில் வெளியான இப்படம் பின்னர் ஹிந்தி, தெலுங்கிலும் வெளியானது.

தற்போது இதன் 2ம் பாகத்தை உருவாக்கவுள்ளனர்.

கதை, திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் ராவ் எழுத மீண்டும் சித்தார்த்தே தயாரித்து, நடிக்கவுள்ளார். நாயகியாக ஆண்ட்ரியாவே தொடரவுள்ளார்.

தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை இயக்கி வருகிறார் மிலிந்த் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா படத்தை முடித்துவிட்டு தான் சித்தார்த் படத்தை இயக்கவிருக்கிறாராம் மிலிந்த் ராவ்.

Actor Siddharth plans to produce Aval 2

More Articles
Follows