அஜித் பட வில்லனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா மேனன்

அஜித் பட வில்லனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெனிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

’தமிழ் படம் 2, ’நான் சிரித்தால்’ படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த, நாயகி ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

UV Creations தயாரிப்பில், தமிழில் “வலிமை” படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

அதைத்தொடர்ந்து இளம் நடிகர் நிகில் நடிக்க, Ed entertainment தயாரிப்பில் இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது முன்ணனி தெலுங்கு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

தமிழில் ரசிகர்களின் இதய நாயகியாக கோலோச்சியவர், தற்போது தெலுங்கு ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொள்ளவுள்ளார். இது தவிர தற்போது சில தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

Aishwarya Menon to pair opposite Valimai villain

ஜெய் – திவ்யா நடித்த ‘குற்றம் குற்றமே’ படம் டிவியில் நேரடியாக ரிலீஸ்

ஜெய் – திவ்யா நடித்த ‘குற்றம் குற்றமே’ படம் டிவியில் நேரடியாக ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்த ‘வீரபாண்டியபுரம்’ படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஜெய்யின் 30வது படமாக உருவான இந்த படத்திற்கு ஜெய்யே இசையமைத்திருந்தார்.

இதே கூட்டணியின் அடுத்த படம் ‘குற்றம் குற்றமே’. சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்திற்கு முன்பே இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் ஜெய்யுடன் திவ்யா துரைசாமி, ஸ்ம்ரிதி வெங்கட் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்கடன் பாரதிராஜா, ஹரீஷ் உத்தமன், காளி வெங்கட், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜீத் இசையமைத்துள்ளார்.

ஆக்சஸ் பிலிம்ஸ் மற்றும் டி கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர்.

நெற்றிக்கண் திறப்பினும் #குற்றம்குற்றமே என் சப் டைட்டிலோடு இந்த படம் போஸ்டரை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கலைஞர் டிவியில் காலை 10.30 மணிக்கு இந்த படத்தை நேரடியாக டிவியில் ரிலீஸ் செய்கின்றனர்.

Kuttram Kuttrame Direct Television Premiere on 14th April at 10:30 AM

செல்லப் பிராணிகளை விரும்பும் குழந்தைகளுக்கான படம்.; ‘ஓ மை டாக்’ பற்றி அருண்விஜய்

செல்லப் பிராணிகளை விரும்பும் குழந்தைகளுக்கான படம்.; ‘ஓ மை டாக்’ பற்றி அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமேசான் பிரைம் வீடியோவின் பிரிமியர் அறிவிப்பிற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தின் ஸ்னீக்பிக் வெளியானது.

2டி நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் இளம் அறிமுக நடிகர் அர்னவ் விஜய், அருண் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தைப் பற்றி நடிகர் அருண் விஜய் பேசுகையில்….

” டீஸரில் பார்த்ததைப் போல் இந்த திரைப்படம் ஒரு சிறு குழந்தைக்கும், அவரது செல்ல நாயான சிம்பாவுக்கும் இடையே தனித்துவமான நட்பு மற்றும் அழகான – வேடிக்கையான தருணங்களை காண்பிக்கிறது.

இந்த படத்தின் திரைக்கதையை முதன்முதலாக கேட்டபோது, இது வித்தியாசமான திரைக்கதை என்பதை நான் உணர்ந்தேன்.

ரிலீசுக்கு வரிசை கட்டிய 5 படங்கள்..; அண்ணாமலையாரிடம் ஆசி பெற்ற அருண்விஜய்

இந்தத் திரைக்கதையில் ஏராளமான உணர்வுகள் இடம்பெற்றிருந்தன. பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், செல்லப்பிராணிக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தை மையப்படுத்தி இருந்தது.

தந்தையும், மகனும் திரைக்கதையில் அழகாக பிணைக்கப்பட்டு இருந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரு முழுநீள குழந்தைகள் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.

இந்தப்படத்தில் என்னுடைய மகன் அர்னவ் நடித்தது மிகவும் அதிர்ஷ்டம் என்றே நான் நம்புகிறேன்.” என்றார்.

ஒவ்வொரு குழந்தைகளும், செல்ல பிராணி மீது அன்பு கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பாக ‘ஓ மை டாக்’ உருவாகி இருக்கிறது.

அர்ஜுன் மற்றும் அவரது நாய்க்குட்டி சிம்பாவை பற்றிய இதயத்தை வருடும் கதை. ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் விரும்பி பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படம் இது. குழந்தைகள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகளின் உலகத்தில்.. அவர்களின் ஆசைகள், முன்னுரிமை, அக்கறை, துணிச்சல், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற அன்பு, விஸ்வாசம் ஆகியவை குறித்து இந்த திரைப்படம் ஆராய்கிறது.

OH MY DOG..; நாய்க்கு நாலாவது பொறந்தநாள் கொண்டாடிய ‘யானை’ நட்சத்திரம்

‘ஓ மை டாக்’ படத்தை ஜோதிகாவும் சூர்யாவும் தயாரித்துள்ளனர்.

ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் எஸ் ஆர் ரமேஷ் பாபு ஆகியோர் ஆர். பி டாக்கிஸ் சார்பாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார்.

கோடை விடுமுறையை ‘ஓ மை டாக்’ உடன் கொண்டாடுங்கள்.

ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்தியா மற்றும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரத்யேகமாக உலகளாவிய பிரிமியரில் ஃபேமிலி என்டர்டெய்னராக வெளியாகிறது.

Oh My Dog – A magical tale about a kid and his pet

‘வெங்காயம்’ நடிகர் லிட்டில் ஜான் மரணம்.; குடும்பத்திற்கு நடிகர் அலெக்சாண்டர் உதவி

‘வெங்காயம்’ நடிகர் லிட்டில் ஜான் மரணம்.; குடும்பத்திற்கு நடிகர் அலெக்சாண்டர் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ் நடித்த வெங்காயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த காமெடி நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தற்போது வரை மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் படைவீடு அல்லி நாயக்கன்பாளையம் என்ற ஊரில் வசித்து வந்த தனசேகரன் என்ற லிட்டில் ஜான் வயது 43 இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இதை அறிந்த ஊடக நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று செய்தி சேகரித்து தொலைக்காட்சிகளில் வெளியிட்டிருந்தார்கள்.

‘வெங்காயம்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் சௌந்தரராஜன் ஊடகங்கள் வாயிலாக லிட்டில் ஜான் இறந்த செய்தியை பார்த்திருக்கிறார்.

பணிச்சுமை காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை இருப்பினும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் சக கலைஞனின் குடும்பத்திற்கு உதவ நினைத்து செய்தி வெளியிட்டிருந்த செய்தியாளர்களை தொடர்புகொண்டு தான் லிட்டில் ஜான் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று என கேட்டுள்ளார்.

அதன்படி தனது அலுவலக பணியாளர்களை அனுப்பி ரூபாய் 50 ஆயிரத்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொடுக்க வைத்துள்ளார்.

லிட்டில் ஜான் மிகப் பெரிய நடிகனாக இல்லாதபோதும் ஒரு கலைஞனை மதிக்கும் விதமாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் இதுபோல் நற்செயல் நடந்துள்ளது.

சக கலைஞனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அலெக்சாண்டர் சௌந்தரராஜன் அவரது செயல் பாராட்டுதலுக்குரியது.

Actor Alexander helps late actor little john family

முதல்வர் ரங்கசாமி- நடிகர் விஜய் பேனர்கள்.; வேற மாரி தளபதி ரசிகர்கள்

முதல்வர் ரங்கசாமி- நடிகர் விஜய் பேனர்கள்.; வேற மாரி தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் 13ஆம் தேதியே வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் மிகப்பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பேனர்களில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி & விஜய் சந்தித்த புகைப்படம் இடம்பிடித்துள்ளது. இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி-விஜய்-அஜித்தான் ஹீரோ; நான் இல்ல… சிவகார்த்திகேயன் ஃபீலீங்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சென்னை வந்தபோது நடிகர் விஜய்யை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு அப்போதே புதுச்சேரி அரசியல் கட்சியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்க தலைவருமான புஸ்சி ஆனந்த் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் பலமுறை சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றார்.

இந்நிலையில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதால் இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரமாண்ட கட்அவுட் – பேனர்கள் வைத்துள்ளனர்.

ரசிகர்கள் வைத்துள்ள பெரும்பாலான பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி படமும், சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி விஜயை சந்தித்த படமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay with CM Rangasamy in the Banners of Beast in Pondy

‘பீஸ்ட்’ படத்திற்கு ரூ 1500 வரை டிக்கெட்.; தியேட்டரிலேயே நான்கு நாட்களுக்கு கட்டணம் உயர்த்த முடிவு.?

‘பீஸ்ட்’ படத்திற்கு ரூ 1500 வரை டிக்கெட்.; தியேட்டரிலேயே நான்கு நாட்களுக்கு கட்டணம் உயர்த்த முடிவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் 13ஆம் தேதியே வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் மிகப்பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.

பீஸ்ட் படத்திற்கான முன்பதிவு தமிழகத்தில் அமோகமாக உள்ளது.

சென்னையில் ரூ 1000 முதல் 1500 வரை டிக்கெட்டுக்கள் விற்கப்படுகிறது.

நானும் விஜய் ரசிகர்தான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலருக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பாராட்டு

தமிழகத்தில் பல ஊர்களில் டிக்கெட் கட்டணம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இதை தடுக்கத்தான் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், புதுச்சேரி திரையரங்குகளில் வரும் 13 முதல் 17ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக போர்டுகள் தயாரித்துள்ளனர். இது இணையத்தளங்களில் வைரலானது.

அதில் 3 ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 50ல் இருந்து ரூ.150ம், இரண்டாம் வகுப்பு ரூ. 75ல் இருந்து ரூ. 175 ம், முதல்வகுப்பு கட்டணம் ரூ. 100ல் இருந்து ரூ.200ம், பால்கனி ரூ. 150ல் இருந்து ரூ. 250ம், பாக்ஸ் ரூ. 160ல் இருந்து ரூ. 260ம் என்று உயர்த்தப்படுவதாக எழுதப்பட்டிருந்தது.

இதனால் சமூக ஆர்வலர்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இதுகுறித்த தரப்பில் விசாரித்தபோது…

“புதுச்சேரியில் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி தரவில்லை” என தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் புதுச்சேரியில் ‘பீஸ்ட்’ திரைப்படத்துக்கு டிக்கெட் கட்டணம் நான்கு நாட்களுக்கு மட்டும் அனைத்து வகுப்புகளிலும் ரூ. 100 உயர்த்தப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

High ticket price for Beast movie in pondicherry

More Articles
Follows