தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது-
இதனையடுத்து முருகதாஸ் இயக்கவுள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிக்கவிருந்தார்.
இப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து விலகினார் முருகதாஸ்.
எனவே ‘தளபதி 65’ பட இயக்குநர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து முருகதாசின் அடுத்த பட ஹீரோ என்ற கேள்வி கோலிவிட்டில் எழுந்தது.
தற்போது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து இயக்கவுள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்தப் படம் அனிமேஷன் படமாக உருவாகவுள்ளதாம்.
அதாவது ‘தி லயன் கிங்’ பாணியில் இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.
Director AR Murugadoss in next film details here