தனுஷ்தான் அடுத்த உலகநாயகன்…; கஸ்தூரி கண்டுபிடிப்பு

kasturinewsநடிகர் தனுஷ், டைரக்டர் வெற்றிமாறன் கூட்டணி என்றாலே பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும்.

இவர்கள் இணைந்த பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது வடசென்னை படம் உருவாகியுள்ளது.

‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் முதல் பாகத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு டிரெண்டிங்கானது.

இதைப் பார்த்த நடிகை கஸ்தூரி, ‘வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான்!’ என்று கூறியிருக்கிறார்.

இந்த படத்தை தயாரித்துள்ள தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருடன் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாகிறது.

லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

Dhanush is next Kamalhassan says Actress Kasthuri

Kasturi Shankar  @KasthuriShankar

வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் ! #VadaChennaiTeaser @VetriMaaran @dhanushkraja @LycaProductions @aditi1231

Overall Rating : Not available

Related News

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த…
...Read More
தனுஷ் தயாரித்து நடித்திருந்த வடசென்னை படத்தை…
...Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…
...Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…
...Read More

Latest Post