வடசென்னை மக்களை அசிங்கப்படுத்திட்டீங்க..; பார்ட் 2 வேண்டாம் ப்ளீஸ்

vada chennaiவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த படம் வடசென்னை.

இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா, அமீர், சமுத்திரகனி, கிஷோர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இது 3 பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகம் மட்டும் வெளியாகிவிட்டது.

இப்படத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்தாலும் ஏகப்பட்ட கெட்ட கெட்ட வார்த்தைகளை படத்தில் வடசென்னை மக்கள் பேசுவதாக காட்டியிருந்தார் டைரக்டர்.

மேலும் வடசென்னை என்றாலே அசிங்கம், கொலை, குற்றம் ஆகியவற்றை பிரதானமாக காட்டியிருந்தார்.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் கூகை இயக்கம் சார்பில் ‘வடசென்னை’ குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதில் அளித்தார்.

அப்போது கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், “வடசென்னை’யைப் பற்றி இவ்வளவு கேவலமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள்.

இரவு நேரத்தில், ’வடசென்னைக்கு ஆட்டோக்காரர்கள் கூட வரமாட்டார்கள். எனவே தயவுசெய்து ’வடசென்னை’ 2 எடுக்கவே எடுக்காதீர்கள்.

போதும். முதல் பாகத்திலேயே ஒட்டுமொத்த வடசென்னை மக்களை இப்படி அசிங்கப்படுத்திவிட்டீர்கள்” என்றார்.

Overall Rating : Not available

Related News

தனுஷ் தயாரித்து நடித்திருந்த வடசென்னை படத்தை…
...Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…
...Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…
...Read More
பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப் படங்களை…
...Read More

Latest Post