கானா பாலா பாடலுக்கு இயக்குனர் சுப்ரமணியம் சிவா கண் தெரியாத கேரக்டரில் நடிக்கிறார்

subramaniam siva (1)மனமே மனமே கலங்காதே மனமே நிழலாய் வருமே நாளை உன் கனவே கவலைகள் இங்கு நிரந்தரமில்லை துன்பங்கள் துயரங்கள் தொடர்வதில்லை…

எனும் பாடலை கானாபாலா பாடியுள்ளார். தொல்காப்பியன் பாடலுக்கு சுலக்ஷாடாடி இசையமைத்துள்ளார்.

திருடா திருடி, யோகி, வெள்ளை யானை போன்ற படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா.

வடசென்னை, அசுரன் படத்தின் மூலம் தன் நடிப்பால் அனைவரையும் அசர வைத்தவர்.இவர் “அம்மா உணவகம் ” படத்திற்கு இந்த தத்துவ பாடல் காட்சிக்கு கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விவேக பாரதி இயக்கத்தில் படிக்கட் பாய் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.பி. இப்ராகீம் தயாரித்து வருகிறார்.

அஸ்வின் கார்த்திக், சசிசரத், கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாக ஸ்ரீநிதி, பாத்திமா நடிக்க “குள்ளபூதம்” இந்திரன், இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், சுப்ரமணியம் சிவா, ஷரவண சக்தி, ஈரமான ரோஜாவே சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதன் நிறைவு கட்ட படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெற்று முடிவந்தது..

Director Subramaniam siva plays blind in Amma Unavagam

Overall Rating : Not available

Related News

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்களில் பிரபலமானவர் சினேகன்.…
...Read More
எத்தனை வருடங்களாக தரமான படங்களை மட்டுமே…
...Read More

Latest Post