தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விடுதலை’.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது..
” இப்போது சூரி பேசியது எப்படி உங்களை ஆட்கொண்டுள்ளதோ அதுபோலவே படம் முழுக்க அவரது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களை ஆட்கொள்ளும். வெற்றிமாறனின் ‘வடசென்னை’யில் நடிப்பதை நான் மிஸ் செய்து விட்டேன்.
அதனால் ‘விடுதலை’ படத்தின் வாய்ப்பை தவற விரும்பவில்லை. எட்டு நாள் தான் கால்ஷீட் என சொல்லி வெற்றிமாறன் என அழைத்து சென்றார். ஆனால் போன பின்பு தான் தெரிந்தது அது எனக்கான ஆடிஷன் என்று. வெற்றி சாருடன் வேலை பார்த்தது மிகவும் அறிவு சார்ந்தது.. முக்கியமானதாக பார்க்கிறேன்.
இளையராஜா இசையை போலவே அவருடைய பேச்சும் மிகவும் ஆழமானது அதை கூர்ந்து கவனியுங்கள். நன்றி”.
இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.
I missed Vadachennai movie but got Viduthalai says Vijay Sethupathi