வடசென்னை படத்தில் ரஜினி-அஜித்தை பின்பற்றும் தனுஷ்

வடசென்னை படத்தில் ரஜினி-அஜித்தை பின்பற்றும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush beard whiteகனடாவை சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற படத்தை நடித்துள்ளார் தனுஷ்.

இதில் இவருடன் பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்த ஹாலிவுட் படத்தை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் 3 பாகங்களாக உருவாகி வருகிறது என்பது தங்கள் நினைவிருக்கலாம்.

இப்படத்தில் தனுஷ் சில முடிகள் நரைத்த தாடியுடன் நடித்து வருகிறாராம்.

தனுஷின் நரைத்த தாடி படத்தை #glitteringbearddhanush என்ற பெயரில் ஹேஷ்டேக் கிரியேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் இவரது ரசிகர்கள்.

கபாலி, காலா படங்களில் ரஜினியும் வீரம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் அஜித்தும் நரைத்த தாடியுடன் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush fans make trending Glittering Beard

நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை; என்ன நடந்தது…?

நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை; என்ன நடந்தது…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan consulting with fans about his political entryகேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவால் ஆகியோருடன் சந்திப்பு என தன் அரசியல் பயணத்தை படுவேகமாக நகர்த்தி வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 4) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது அலுவலகத்தில் நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் கமல்.

இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நற்பணி மன்றத்திலிருந்தும் 2 பேர் கமலுடன் ஆலோசனை செய்ய உள்ளே அனுப்பப்பட்டு இருந்தனர்.

இதுகுறித்து அவரது ரசிகர்கள் கூறியதாவது…

எங்கள் ஆண்டவர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அவருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

அவரை முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம்.’ என்றனர்.

மேலும் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொது இடங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளை தொடர கமல் வலியுறுத்தினாராம்.

அரசியல் குறித்து தங்களிடம் கமல் எதுவும் பேசவில்லை என்றும் அடுத்த மாதம் 7-ஆம் தேதி கமல் பிறந்தநாளையொட்டி முக்கிய அறிவிப்பு வர வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Kamalhassan consulting with fans about his political entry

லீடர் படத்திற்கு முன்பே இரு படங்களை முடிக்கும் கமல்

லீடர் படத்திற்கு முன்பே இரு படங்களை முடிக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassan stillsகமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளார் என்பது தமிழகம் அறிந்த ஒன்று.

எனவே தன் கைவசம் உள்ள படங்களை விரைவாக முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

ஜனவரி முதல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்

இதன் தலைப்பை லீடர் என மாற்றியுள்ளனர்.

இதற்கு முன்பே, பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட `சபாஷ் நாயுடு’ படத்தை தொடங்கவிருக்கிறாராம்.

இதனையடுத்து `விஸ்வரூபம்-2′ பட மீதமுள்ள காட்சிகளையும் எடுத்து முடிக்கவிருக்கிறாராம்.

இதனிடையில் தலைவன் இருக்கிறான் என்ற படத்தலைப்பை அறிவித்தார் கமல். அது என்னாகும்? என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்.

Kamalhassan plans to complete 2 movies before Leader Shooting

கையெடுத்து கும்பிடுறேன்; நான் சொல்றத கேளுங்க ப்ளீஸ்… சூர்யா

கையெடுத்து கும்பிடுறேன்; நான் சொல்றத கேளுங்க ப்ளீஸ்… சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya glassவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் டூயட் பாடி வருகிறார் சூர்யா.

இந்நிலையில் சென்னையில் தன் சூட்டிங்கை முடிந்துவிட்டு, காரில் வீடு திரும்பியிருக்கிறார் சூர்யா.

காரில் சூர்யா இருப்பதை உறுதிக் செய்துக் கொண்ட சில ரசிகர்கள் காருக்கு இணையாக வேகமாக தங்களை பைக்கை ஓட்டி அவரை படம் பிடித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவர்களின் வேகத்தை பாரத்த சூர்யா தன் காரை நிறுத்தி, அவர்களோடு பேசியுள்ளார்.

அப்போது…

உங்களுடைய அன்புக்கு நன்றி. இப்படி வேகமாக நீங்கள் பைக் வண்டி ஓட்டுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.

தயவு செய்து வேகத்தோடு விளையாடாதீர்கள். உங்களை கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்.

அன்புக்கு நன்றி. என் மீது அன்பிருந்தால் நான் சொல்வதை கேளுங்கள். என்று சொல்லியிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Suriya request his fans not to ride bike in over speed

 

கபாலி-பாகுபலிக்கு பிறகு மெர்சலுக்கு கிடைத்த உலக கௌரவம்

கபாலி-பாகுபலிக்கு பிறகு மெர்சலுக்கு கிடைத்த உலக கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay smileஅட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெர்சல்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படம், அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ள நிலையில் பாரீஸ் நகரில் உள்ள ‘லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)’ திரையரங்கில் திரையிடப்படவுள்ளதாம்.

இத்தியேட்டரில் சுமார் 2,200 பேர் அமர்ந்து இப்படத்தை பார்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகளிலேயே ‘லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டர்தான் மிகப்பெரியது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

தென்னிந்திய படங்களில் இதற்கு முன்பு இங்கு ‘கபாலி’ மற்றும் ‘பாகுபலி’ ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை ‘லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்க நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

After Kabali and Baahubali movies Mersal to be screened at Le Grand Rex Paris

mersal at paris

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்தலைப்பு மாற்றம்

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்தலைப்பு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal shankarஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தை ஏஎம். ரத்னம் தயாரித்திருந்தார்.

தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை தில் ராஜு என்ற பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கிறார் என்பதை பார்த்தோம்.

‘இந்தியன் 2’ என்ற பெயரில் உருவாகும் இப்படம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதன் தலைப்பை ‘லீடர்’ என்று மாற்றம் செய்துள்ளனர்.

தெலுங்கில் பாரதியூடு 2 என பெயர் வைக்கவுள்ளதாக தெரிகிறது.

விரைவில் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவுள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழக அரசியல் நிகழ்வுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இதன் சூட்டிங் 2018 ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Kamal Shankar movie Indian2 title will be changed as Leader

bigg boss indian 2

More Articles
Follows