ரெமோ ட்ரைலர் பார்த்து தனுஷ் என்ன சொன்னார்?

ரெமோ ட்ரைலர் பார்த்து தனுஷ் என்ன சொன்னார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo trailerஇன்று உலகம் முழுவதும் தனுஷ் நடித்த தொடரி படம் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் வெற்றி பெற தனுஷை வாழ்த்தியிருந்தார் சிவகார்த்திகேயன்.

இதற்கு பதிலளித்த தனுஷ், நன்றி தெரிவித்து விட்டு, ரெமோ ட்ரைலர் சூப்பர் என பாராட்டியிருந்தார்.

தனுஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

தனுஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and sivakarthikeyanதிரையுலகை தாண்டியும் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் நட்பு பாராட்டி வருகின்றனர்.

இதனிடையில் இருவருக்கும் மோதல் என்றெல்லாம் கூறப்பட்டது.

இதனைப் பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இன்று உலகம் முழுவதும் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி வெளியாகிறது.

எனவே, தனுஷிற்கும் இப்படக்குழுவினருக்கும் சிவகார்த்திகேயன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜோக்கர்.? கொம்பன்.? குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்

ஜோக்கர்.? கொம்பன்.? குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya fansஹரி இயக்கும் சிங்கம் 3 மற்றும் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள தானா சேர்ந்த கூட்டம் படங்களை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் முடிவாகி விட்டது.

சூர்யா நடிப்பில் 36வது படமாக இது வளரவிருக்கிறது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தை ஜோக்கர் பட இயக்குனர் ராஜீமுருகன் இயக்கலாம் என ஒரு பக்க தகவலும் மறுபக்கம் கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சூர்யாவின் அடுத்த இயக்குனர் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால், இதற்கான அறிவிப்பை ஓரிரு தினங்களில் சூர்யா தரப்பில் இருந்து எதிர்பார்க்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

காஷ்மோரா டிரைலர் & இசை வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காஷ்மோரா டிரைலர் & இசை வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi kaashmoraஜோக்கர் படத்தை தொடர்ந்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் காஷ்மோரா.

கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசையை அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ டைட்டிலை உறுதி செய்த சூர்யா

‘தானா சேர்ந்த கூட்டம்’ டைட்டிலை உறுதி செய்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya 35 movieவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க அனிருத் இசையமைப்பில் புதிய படம் விரைவில் உருவாக உள்ளது.

இதில் சூர்யாவுடன் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு தலைப்பை சற்றுமுன் உறுதி செய்துள்ளனர்.

நாம் முன்பே கூறியது போல ரஜினியின் பாட்ஷா பட பன்ச் டயலாக்கான ‘ தானா சேர்ந்த கூட்டம்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தை ஞானவேல் ராஜா தன் ஸ்டூடியோ கிரீன் சார்பாக தயாரிக்கிறார்.

‘சில சமயங்களில்’ படம் உருவாக என்ன காரணம்? – பிரியதர்ஷன் பேச்சு

‘சில சமயங்களில்’ படம் உருவாக என்ன காரணம்? – பிரியதர்ஷன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

priyadharshanபிரபு தேவா ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ சார்பில் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் விஜய் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கும் படம் ‘சில சமயங்களில்’

இதில் பிரகாஷ்ராஜ், நாசர், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், வருண், சண்முகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை வெறும் 23 நாட்களில் படமாக்கியுள்ளார் பிரியதர்ஷன்.

இளையராஜா பிண்ணனி இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவை சமீர் தாஹிர் செய்ய, கலையை சாபு சிரில் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரியதர்ஷன் பேசியதாவது….

“திரைப்படம் உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருக்கிறது. ஒன்று, நம்முடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக திரைப்படத்தை உருவாக்குவது.

மற்றொன்று, நம் உள்ளத்தில் உதயமான கதையை நமக்காகவே உருவாக்குவது.

‘காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு என் உள்ளத்தில் இருந்து இரண்டாவது முறையாக உருவானதே ‘சில சமயங்களில்’ என்று கூறினார் இயக்குனர் பிரியதர்ஷன்.

More Articles
Follows