தேசிய விருது நாயகன் தனுஷின் 33வது பிறந்தநாள் ஸ்பெஷல்

dhanush STARS birthday wish‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி இன்றும் அதே துள்ளும் இளமையோடு இளவட்டங்களின் நாயகனாக வலம் வருபவர் தனுஷ்.

‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய இவரது ஆரம்ப கால படங்களில் இவரது அண்ணன் செல்வராகவன் மூலமாக வெற்றிக்கொடியை நாட்டினார்.

பின்னர் பல்வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார்.

தமிழ் திரையுலகில் மட்டுமே தெரிந்த இவர், ‘ஆடுகளம்’ படத்தில் நடித்தற்காக தேசிய விருதை வென்று இந்தியா முழுவதும் பிரபலமானார்.

எனவே இவரின் மீது பாசமழை பொழிந்தது பாலிவுட். தற்போது தமிழ் திரையுலகம் தாண்டி இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இனி வருடத்திற்கு ஒரு இந்தி படத்தில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

நடிகராக தன் திரைப்பயணத்தை தோன்றிய இவர் இன்று பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

மேலும் இவர் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

தன் தந்தைக்கு வாழ்வளித்த ராஜ்கிரணை நாயகனாக நடிக்க வைத்து அவருக்கு நன்றிக் கடன் என தெரிவித்து, அனைவரையும் நெகிழ வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறார்.

மேலும் இவர் கதை, திரைக்கதை எழுதியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இவரது மனைவி ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

இப்படம் இன்று தனுஷ் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவர் தயாரிப்பில் வந்த படங்கள் அனைத்தும் வெற்றிப் பெற்றுள்ளது. இவரது தயாரிப்பான ‘காக்கா முட்டை’ மற்றும் விசாரணை ஆகிய படங்கள் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

இன்று தேசிய விருது நாயகன் தனுஷின் 33வது பிறந்த நாள். அவரை ப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக வாழ்த்துகிறோம்.

அவரை பற்றி உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்..

 • பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்து இளம் வயதில் திரையுலகில் நுழைந்தார்.
 • இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வாராகவனின் தம்பி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என பல அடையாளங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி இளம்வயதிலேயே தனக்கான அடையாளத்தை வைத்திருப்பவர்.
 • செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் ‘பிறைத் தேடும் இரவிலே’, ‘ஓட ஓட’ மற்றும் ‘காதல் என் காதல்’ போன்ற பாடல்களை எழுதியுள்ளார்.
  பூமி என்னை சுத்துதே’ என்ற பாடலை ‘எதிர்நீச்சல்’ படத்திற்காகவும் ‘கடல் ராசா நான்’ என்ற பாடலை ‘மரியான்’ படத்திற்காகவும் எழுதியுள்ளார்.
 • தற்போது தமன் இசையில் தெலுங்கில் திக்கா என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
 • செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ‘உன் மேல ஆசதான்…’ பாடலை பாடியிருக்கிறார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
 • இவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் தனுஷ் எழுதி பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி…’ பாடல், யுட்யூப்பில் வெளியாக ஓரிரு நாட்களிலேயே உலகளவில் புகழ்பெற்றார்.
 • இந்தப் பாடல் ‘சி.என்.என்-2011ன் டாப் பாடலாகத்’ தேர்வு செய்யப்பட்டது.
 • துருக்கி நாட்டில் இந்த ‘கொலவெறி’ பாடலின் டியூனை ‘கோகோ கோலா’ விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
 • ஆனந்த் எல். ராய் இயக்கிய ‘ரஞ்சனா’ என்ற இந்திப்படத்தில் நடித்தார். இப்படம் வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூலித்தது.
 • ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும் உயர்ந்தார்.
  ‘3’, ‘எதிர் நீச்சல்’, காக்கி சட்டை, வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, விசாரணை, அம்மா கணக்கு உள்ளிட்ட வெற்றிப்படங்களை தன் சொந்த பேனரில் தயாரித்தார்.
 • 2011 ஆம் ஆண்டில் ‘ஆடுகளம்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ ஆகியவற்றை வென்றார்.
 • ‘யாரடி நீ மோகினி’ படத்திற்காக ‘சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது’ வழங்கப்பட்டது.
 • சிறந்த நடிகருக்கான விருது மட்டுமல்லாமல் பாடகருக்கான விருதையும் பெற்றுள்ளார். ‘மயக்கம் என்ன’ படத்தில் சிறந்த பாடகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது மற்றும் ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.
 • சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்தமகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.
 • இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.
 • கடந்த 2016ஆம் ஆண்டில் காளீஸ்வரி என்ற ரத்த புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட 12வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றினார்.
 • தனுஷை சந்திப்பதே அவரது கடைசி ஆசை என அந்த சிறுமி கூறி நெகிழ வைத்தது அனைவரையும் கண் கலங்க வைத்தது.
 • வருடத்திற்கு குறைந்தபட்சம் 3 படங்களையாவது ஒப்புக் கொள்கிறார்.
 • இதில் The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படம் இவரது நடிப்பில் உருவாகியுள்ளது.
 • வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை, கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.
 • மேலும் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி2 படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
 • இவை தவிர எவரும் எதிர்பாராத வகையில் இவரது மாமனாரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தை ரூ 160 கோடியில் தயாரித்து வருகிறார்.
Overall Rating : Not available

Latest Post