‘தாதா 87’ பட காட்சிகளை ஆட்டைய போட்ட சாய்குமார்..; சாட்டைய சுழற்றும் விஜய் ஸ்ரீ

‘தாதா 87’ பட காட்சிகளை ஆட்டைய போட்ட சாய்குமார்..; சாட்டைய சுழற்றும் விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வணக்கம்…

கமலஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாஸ்வுடன் இணைந்து தயாரித்த தாதா 87 படத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி

தற்சமயம் பவுடர் , பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன்.

நேற்று காலை YouTube நடிகர் சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் ‘தாதா 87’ படத்தின் ரீமேக் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் .

ரஜினியின் காலா டீசருடன் தாதா 87 படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள் அதே டீசரில் சாருஹாசன் காட்சிக்கு பதில் சாய்குமார் சில காட்சிகள் மட்டும் படமெடுத்து இன்று டீஸராக வெளியிட்டுள்ளார்கள்.

இதனை பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன்

1/2 படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் திருடும் செயலில் இந்த சம்பவம் இருக்கிறது என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செய்திருப்பது சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது

முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியல் ஐ மாற்றுவதற்கு சமமானது.என பெரியவர்கள் கூறுவார்கள்

தற்போது இதுபோல் பல படங்களுக்கு தொடர்ந்து கதை திருட்டு நடைபெற்று வருகிறது .

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக தாதா87 படத்தின் கருவை சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜு மீடியா கம்பெனி வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின் படி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் இதை பற்றி விரிவான செய்திகளை விரைவில்
அறிவிப்பேன்.

– விஜய் ஸ்ரீ ஜி
தயாரிப்பாளர்/ இயக்குனர்
போன்: 8778649797

Dhadha 87 fame director Vijay Sri G complains againt Youtuber Sai Kumar

‘மாறன்’ பர்ஸ்ட் லுக் ரிலீசானது.; ஆக்‌ஷனில் மிரட்டும் தனுஷ்

‘மாறன்’ பர்ஸ்ட் லுக் ரிலீசானது.; ஆக்‌ஷனில் மிரட்டும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் தியேட்டரில் ரிலீசானது. அதன் பிறகு ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் ரிலீசானது.

இவை இரண்டின் ரிலீசின் போதும் அமெரிக்காவில் இருந்தார்.

அங்கு ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு இந்தியா வந்த தனுஷ் ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43ஆவது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் இன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூலை 28) காலை 11 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

இந்த படத்திற்கு ‘மாறன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஆக்சன் காட்சியில் தனுஷ் மிரட்டலாக உள்ளார்.

IMG-20210728-WA0024

Actor Dhanush next film is titled Maaran

ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இணைந்த அனிருத் & விஜய் யேசுதாஸ்

ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இணைந்த அனிருத் & விஜய் யேசுதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர்.

இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் கீரவாணி (தமிழில் இவரது பெயர் மரகதமணி) இசையமைத்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

எனவே படத்தின் பிரமோஷனுக்காக ஒவ்வொரு மொழியிலும் ஒரு சிறப்புப் பாடலை உருவாக்கியுள்ளது படக்குழு.

இந்த பாடல்களை 5 மொழிகளிலும் பிரபலமான பாடகர்களைப் பாட வைத்துள்ளனர்.

தமிழ் பாடல் – அனிருத் (தமிழ்ப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்)

தெலுங்குப் பாடல் – வேடால ஹேமச்சந்திரா

மலையாளப் பாடல் – விஜய் யேசுதாஸ்

ஹிந்தி பாடல் – அமித் திரிவேதி

கன்னட பாடல் – யாசின் நிசார்

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் கீரவானியுடன் 5 மொழிப் பாடகர்களும் உள்ளனர்

நட்பு என தமிழில் பெயர் வைத்துள்ளனர்.

இப்பாடலை ஆகஸ்ட் 1ம் தேதியன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளனர்.

ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளது

Anirudh and Vijay yesudas joins for RRR movie

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு D43 பட ட்ரீட் வைக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு D43 பட ட்ரீட் வைக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் தியேட்டரில் ரிலீசானது. அதன் பிறகு ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் ரிலீசானது.

இவை இரண்டின் ரிலீசின் போதும் அமெரிக்காவில் இருந்தார்.

அங்கு ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு இந்தியா வந்த தனுஷ் ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43ஆவது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இதில் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் நாளை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூலை 28) காலை 11 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

இந்த தகவலை இந்த படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

D 43 first look will be out on Dhanush birthday

ப்ரெண்ட் இறந்தது கூட தெரியாது..; யாஷிகா எப்படி இருக்கிறார்.?; தாயார் கண்ணீர் மல்க பேட்டி

ப்ரெண்ட் இறந்தது கூட தெரியாது..; யாஷிகா எப்படி இருக்கிறார்.?; தாயார் கண்ணீர் மல்க பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் தன் நண்பர்களுடன் கார் ஓட்டி வந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

அப்போது நிலை தடுமாறி அவரது கார் விபத்துக்குள்ளானது.

யாஷிகா ஆனந்த் மற்றும் சில இரு நண்பர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து யாஷிகா மிக வேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாலும் ஒரு மரணத்துக்கு இவரே காரணமானதாலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இத்துடன் யாஷிகா டிரைவிங் லைசென்சையும் ரத்து செய்தனர்.

இந்த நிலையில் யாஷிகாவின் தாயார் சோனல் ஆனந்த் இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில்..

“யாஷிகாவின் தோழி இறந்த செய்தி அவருக்கு இதுவரை தெரியாது. மரணம் குறித்து தெரிவிக்க வேண்டாம் என் மருத்துவர்கள் கூறி விட்டனர்.

யாஷிகா ஆனந்தின் கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம். எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

அவருக்கு நடக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 மாதங்களுக்கு பிறகுதான் நடக்க முடியும்.” என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்தார்.

Yashika Anand’s Mother Speaks About her Health Condition

தளபதி 66 படத்திற்காக விஜய்யை இயக்கும் பிரபல டைரக்டர்.; கன்பார்ம் செய்த செலிபிரிட்டீஸ்

தளபதி 66 படத்திற்காக விஜய்யை இயக்கும் பிரபல டைரக்டர்.; கன்பார்ம் செய்த செலிபிரிட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி, தமன்னா & நாகார்ஜுனா நடித்த ‘தோழா’ படத்தை இயக்கியவர் வம்சி.

இவர் தெலுங்கில் பிரபலமானவர். தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களை இயக்கியுள்ளார்.

2007 இல் முன்னா என்ற தெலுங்கு படத்தினை முதன்முதலாக இயக்கினார்.

2010ல் பிருந்தாவனம் என்ற படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் புகழை பெற்றுத் தந்தது.

2013 இல் யுவடு, 2016 இல் தோழா போன்ற படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் இவர் இன்று தன் 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

அப்போது விஜய்யின் 66வது படத்தை இயக்கவுள்ளதற்கு வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Vamsi

This hit director to direct Vijay’s next movie

More Articles
Follows