ரஜினி அஜித்துக்கான கதையில் மோகன்.? குஷ்பூவை நாயகியாக்கும் விஜய்ஸ்ரீ

ரஜினி அஜித்துக்கான கதையில் மோகன்.? குஷ்பூவை நாயகியாக்கும் விஜய்ஸ்ரீ

1980களில் ரஜினி கமலுக்கு நிகரான ஹீரோவாக பேசப்பட்டவர் நடிகர் மோகன்.

‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ என பல படங்கள் இவரது பெயரை இன்றவும் சொல்லிக் கொண்டே இருக்கும். இவரது பட பாடல்களும் பிரபலம்.

இவரது பல படங்கள் 175 நாட்கள் தியேட்டர்களில் ஓடி வெள்ளி விழா கண்டது. இதனாலேயே இவரை வெள்ளி விழா நாயகன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியதால் பின்னர் நடிக்கவில்லை. ஆனாலும் ஹீரோ வாய்ப்புக்காக மட்டுமே காத்திருந்தார்.

கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகனாக ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீ மூலம் ரிஎன்ட்ரி கொடுக்கிறார் மோகன்.

‘ஹரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் புத்தாண்டில் வெளியானது. இந்த படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பூ இணைந்திருக்கிறாராம். 1980-90களில் மோகன் மற்றும் குஷ்பூ முன்னணி நட்சத்திரங்களாக இருந்த போதும் இவர்கள் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஹரா’ படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் இந்த படத்தின் கதைக்களம் ரஜினி அஜித் போன்ற டாப் ஹீரோக்கள் நடிக்கவேண்டிய மாஸான கதை எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ரசிகர்களுக்கும் அதானே வேண்டும் விஜய்ஸ்ரீ ப்ரோ.. கலக்குங்க.

Actress Khushboo joins actor Mohan’s new film titled Haraa

நன்றி தலைவா..; ‘மகான்’ இயக்குநரை அழைத்த ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

நன்றி தலைவா..; ‘மகான்’ இயக்குநரை அழைத்த ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் & அவரது மகன் துருவ் நடிப்பில் உருவான ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ல். அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீசானது.

இந்த திரைப்படம் ‘சீயான்’ விக்ரமின் 60வது படம். அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார்.

விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார்.

ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மகான்’ இயக்குனர் & படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

இதனை ட்விட்டரில்..

“Excellent movie … Superb Performances …. Brilliant ”

Yes…. Thalaivar loveeeed #Mahaan ??

Thanks for your call Thalaivaaa….. ????

We are Elated!!

#ThalaivarLovedMahaan
#MahaanOnPrime #MahaanStreamingNow https://t.co/xTBjZCI3Oe

என கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பு நிறுவனமும் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளது.

Yesssss.. We are Elated ??

Thank you so much #SuperStar @rajinikanth sir ??

#SuperStar congratulated @karthiksubbaraj on the massive success of #Mahaan ?

#MahaanOnPrime @PrimeVideoIN

Rajinikanth congratulated Mahaan director Karthik Subbaraj

முதல்வரை சந்திக்க ஒரே விமானத்தில் பறந்த தெலுங்கு நட்சத்திரங்கள்

முதல்வரை சந்திக்க ஒரே விமானத்தில் பறந்த தெலுங்கு நட்சத்திரங்கள்

இந்திய சினிமாவில் ஹிந்தி மற்றும் தமிழ் சினிமாவிற்கு நிகரான மார்கெட் உள்ள மாநிலம் என்றால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை கூறலாம்.

இதனால்தான் தமிழ் சினிமா உருவாகும்போதே தெலுங்கையும் குறி வைத்து அதற்கேற்ப காட்சிகளை வைக்கின்றனர்.

இதனிடையில் ஆந்திராவில் சினிமா டிக்கெட்டுகளை அரசு கண்காணிப்பில் விற்க வேண்டும் என்ற திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டம் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வந்தன.

மேலும் அரசு இணையத்தளங்களில் சினிமா டிக்கெட்டுகள் விற்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இது சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

அரசின் இந்த புதிய திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளிட்ட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சிலர் இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பில், ரிலீசாகி சில தினங்களுக்கு 5 காட்சிகள் திரையிடுப்படுவது, Pan India திரைப்படங்களுக்கு சிறப்பு டிக்கெட் கட்டணங்கள், விசாக பட்டிணத்தில் திரைத்துறை இயங்குவதற்கான சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் முதல்வரை சந்தித்துப் பேச ஐதராபாத்திலிருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இன்று மகேஷ் பாபுவின் திருமண நாள் என்பதால் அவருக்கு விமானத்திலேயே வாழ்த்து சொல்லி அந்த படங்களையும் பிரபலங்கள் பகிர்ந்துள்ளனர்.

Telugu super stars met Andhra CM for this purpose

ரஜினியின் உயர்ந்த பண்பு… அஜித்தை அரசியலுக்கு அழைத்தது தவறு..; சுசீந்திரன் ஓபன் டாக்

ரஜினியின் உயர்ந்த பண்பு… அஜித்தை அரசியலுக்கு அழைத்தது தவறு..; சுசீந்திரன் ஓபன் டாக்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘வீரபாண்டியபுரம்’. (இந்த படத்திற்கு முதலில் சிவ சிவா என தலைப்பு வைத்திருந்தனர்.

நடிகர் ஜெய் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்த படம் பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது சுசீந்திரன் பேசும்போது ரஜினி மற்றும் அஜித் குறித்து பேசினார்.

அதில்…

எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது கை ப்ராக்சர் ஆனது. இதனையறிந்த ரஜினி எனக்கு போன் செய்து பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய முந்தைய படங்களை ரஜினி சார் பாராட்டியுள்ளார்.

நான் ட்விட்டரில் இருந்து விலகிவிட்டேன். அதற்கு முக்கிய காரணம். ஒரு முறை நான் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என ஒரு பதிவு போட்டேன்.

ஆனால் இப்போது அது தவறு என உணர்கிறேன். அவர் இப்போது நிம்மதியாக இருக்கிறார். அவர் இதுபோலவே எப்போதும் இருக்கட்டும். அவருக்கு அரசியல் செட் ஆகாது.”

இவ்வாறு பேசினார் சுசீந்திரன்.

Suseenthiran talks about Rajinikanth and Ajith

சென்னையில் ‘ராக் வித் ராஜா’..; அதே தவறை மீண்டும் செய்யமாட்டார்ல…!!?

சென்னையில் ‘ராக் வித் ராஜா’..; அதே தவறை மீண்டும் செய்யமாட்டார்ல…!!?

இளையராஜாவின் இசையை கேட்டு மயங்காதவர்களே இருக்க முடியாது என்று அது மிகையல்ல.

இன்று 2K கிட்ஸ்க்கு அவரின் இசை அந்தளவு பிடிக்காது என்றுகூட சிலர் சொல்ல கேட்கிறோம். இளையராஜா ட்ரெண்டிங்கில் இல்லை. அதனால் தான் பல புதிய இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புகள் வருகின்றன.

ஆனால் இன்றளவில் பள்ளி மற்றும் காலேஜ் விழாக்களில் கூட தங்கள் இசை திறமையை நிரூபிக்க பல மாணவர்கள் இளையராஜா பாடல்களையே பாடுகின்றனர்.

மேலும் டிவியில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் கூட இளையராஜாவின் பாடல்களே பெரும்பாலும் பாடப்படுகின்றன.

தன் இசை மழையால் இந்திய மக்களை கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக மகிழ்வித்து வருகிறார் இசைஞானி.

ஆனால் இளையராஜாவிடம் பிடிக்காத குணம் எது? என பலரிடம் கேட்டால் அது அவரின் திமிர் பேச்சு.. ஆணவ பேச்சுதான் என்பார்கள்.

கொரோனா காலத்திற்கு முன்பு இளையராஜா 75 என்ற இசை விழா சென்னை (EVP) பூந்தமல்லி அருகே நடைபெற்றது. அந்த பகுதியே போக்குவரத்து நெரிசலால் பிரச்சினை ஆனது. ரஜினி கமல் எஸ்பிபி உள்ளிட்ட பல பிரபலங்கள் அங்கு வந்து சேர 2 மணி நேரம் தாமதம் ஆனது.

அந்த விழாவில் ஒரு லிட்டர் தண்ணீர் கூட ரூ 150க்கு விற்கப்பட்டது. 50 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானங்கள் 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

விழா ஏற்பாட்டாளர்கள் இதை கண்டுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் தண்ணீருக்காக மக்கள் அங்கும் இங்கும் மக்கள் அலைய ஆரம்பித்தனர்.

பத்திரிகையாளர்களுக்கும் தண்ணீர் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மேடை அருகே சென்ற ஒரு நபரை கவனித்த இளையராஜா அவரை திட்டினார்.

அந்த நபர் இளையராஜா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது வேறுகதை.

அப்போது பேசிய இளையராஜா… என் இசையால்தானே நீங்கள் வாழ்கிறீர்கள்… சில மணி நேரங்கள் என் பாட்டை கேட்டுக் கொண்டே இருக்க முடியாதா.? (தண்ணீர் இப்போது அவ்வளவு முக்கியமா? என்ற தோரணையில்..).

உங்களுக்காக நான் 5 மணி நேரம் நின்று கொண்டே இசை கச்சேரி செய்கிறேன் என பேசினார்.

இந்த பேச்சு அப்போது சர்ச்சையானது. மேலும் இது தொடர்பாக பல மீம்ஸ்கள் வெளியானது. இளையராஜாவை ட்ரோல் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது நீண்ண்…… ண்ட இடைவேளைக்கு பின் சென்னையில் மீண்டும் இளையராஜா இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

2022 மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு, ராக் வித் ராஜா என தலைப்பு வைத்துள்ளனர்.

இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

கடந்த முறை போல… தண்ணீர் பிரச்சினை மற்றும் இளையராஜாவின் இந்த கண்டித்தக்க பேச்சுகள் நடைபெறாது என நம்புவோம்.

Will Ilayaraja correct his mistakes this time?

FILMISTREET செய்தி எதிரொலி…; ‘THALAIVAR 169’ பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

FILMISTREET செய்தி எதிரொலி…; ‘THALAIVAR 169’ பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் கடந்தாண்டு 2021 நவம்பர் 4ல் தீபாவளியன்று வெளியானது.

இந்த படம் 3 வாரங்களுக்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியானாலும் படம் 50 நாட்களை தாண்டியும் தியேட்டர்களில் ஓடியது.

அண்ணாத்த படத்திற்கு ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது.

பிரபல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார் ரஜினி. இதனால் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், பாண்டியராஜ், வெற்றிமாறன், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.

அதன்பின்னர் கடந்த (பிப்ரவரி) 7ஆம் தேதி நம் FILMISTREET தளத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்ற தகவலை பதிவு செய்திருந்தோம்.

தற்போது அது உறுதியாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

ரஜினியின் 169வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். தற்காலிகமாக தலைவர் 169 என படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் பட பூஜையுடன் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியவர் நெல்சன். தற்போது இதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஏப்ரல் 2022ல் வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீசுக்கு முன்பே விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் நெல்சன். தற்போது விஜய் படம் ரிலீசாவதற்கு முன்பே ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ரஜினிகாந்துடன் இணையும் விஜய் – சிவகார்த்திகேயன் பட டைரக்டர். https://www.filmistreet.com/cinema-news/beast-director-joins-next-with-rajinikanth/

#Thalaivar169 directed by Nelson Dilpkumar & music by Anirudh

More Articles
Follows