கமல் பாணியில் சினிமாவுக்காக அர்ப்பணிக்கும் விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்

கமல் பாணியில் சினிமாவுக்காக அர்ப்பணிக்கும் விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்

தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி வரும் படம் PUBG ‘ ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’.

விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் இந்த பப்ஜி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்துக்காக 4 வருடம் வளர்த்த முடியை, நடிகர் அர்ஜுமன் ஒரு காட்சிக்காக வெட்டி உள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவர் முடியை வெட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

வெட்டப்பட்ட முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக கொடுத்திருக்கிறார் நடிகர் அர்ஜுமன்.

அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

படத்தின் கேரக்டருக்காக தங்களையே அர்ப்பணிக்கும் நடிகர்களில் கமல், விக்ரம் முக்கியமானவர்கள்.

அந்த வரிசையில் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமனும் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

Actor Arjuman’s dedication in his debut film

ரஜினி எம்ஜிஆரை தாண்டி அண்ணா வடிவத்தில் விஜய்..; தளபதி ரசிகர்கள் தடாலடி

ரஜினி எம்ஜிஆரை தாண்டி அண்ணா வடிவத்தில் விஜய்..; தளபதி ரசிகர்கள் தடாலடி

நேற்று செப்டம்பர் 15ல் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில், தளபதி விஜய் ரசிகர்களும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மதுரை விஜய் ரசிகர்கள் அச்சடித்துள்ள வாழ்த்து போஸ்டரில்..

“விஜய்யின் உருவத்தை அண்ணாவோடு பொருத்தி “மீண்டும் அண்ணா, வேண்டும் அண்ணா’ என்ற வாசகத்தோடு போஸ்டர்களை அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

இது மதுரை பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய காலத்தில் தன்னை ரஜினி ரசிகராகவே காட்டிக் கொண்டார். (இப்போதும் அப்படித்தான்). அதற்கேற்ற போல காட்சிகளை சினிமாவில் சின்ன ரஜினியாக வலம் வந்தார்.

வருடங்கள் ஓட ஓட விஜய்யின் வசூல் மார்கெட் உயர ரஜினியை காட்டாமல் மெர்சல் படங்களில் எம்ஜிஆர் ரசிகராக காட்டிக் கொண்டார்.

இப்போது அவரது ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று அண்ணாவுடன் விஜய்யை ஒப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்..

அடுத்தது யாரோ..?? கலைஞர்.??

Madurai Vijay fans stick political posters

Vijay Anna
Vijay Anna
சக்சஸ் பார்ட்டியில் சந்தானம்.; மாற்றுத் திறனாளிகளிடம் மன்னிப்பு கேட்க மனமில்லையா EB மணி?

சக்சஸ் பார்ட்டியில் சந்தானம்.; மாற்றுத் திறனாளிகளிடம் மன்னிப்பு கேட்க மனமில்லையா EB மணி?

முதன்முறையாக சந்தானம் 3 வேடங்களில் நடிக்க கார்த்திக் யோகி இயக்கியிருந்த படம் “டிக்கிலோனா”.

இந்த படத்தில் ஹாக்கி ப்ளேயர், EB மணி ஆகிய கேரக்டர்களில் நடித்திருந்தார் சந்தானம்.

கடந்த வாரம் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

கெஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பாக ராஜேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

இந்த நிலையில், படத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை ஹீரோ சந்தானம் “ஏய் சைட் ஸ்டாண்டு” என்று அழைப்பார்.

இயற்கையில் அப்படி ஒரு பிறப்பு கிடைக்கையில் மாற்றுத் திறனாளிகள் என்ன செய்ய முடியும். நம்மால் அப்படி ஒரு நாள் வாழ முடியுமா? என்பதை நினைத்து பார்க்க கூட முடியாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் மன வலியை யாரால் தீர்க்க முடியும்.?

இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் படத்தின் வெற்றியை சந்தானம் & ராஜேஷ் குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், இதுவரை இந்த செயலுக்கு தயாரிப்பு தரப்பான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமோ ஹீரோவான சந்தானமோ ஒரு வருத்தமும் மன்னிப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Will Santhanam apologize for controversy scene in Dikkiloona film ?

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வினை இயக்கும் ‘கும்கி’ இயக்குனர்

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வினை இயக்கும் ‘கும்கி’ இயக்குனர்

மைனா, கும்கி, கயல், (தொடரி) என தரமான வெற்றி படங்களை இயக்கியவர் பிரபு சாலமன்.

இவரது படங்களில் இயற்கை கொஞ்சி விளையாடும்.

இவரது இயக்கத்தில் கடைசியாக ராணா, விஷ்ணு விஷால் நடித்த ‘காடன்’ படம் வெளியானது.

தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறாராம் பிரபு சாலமன்.

இதில் ஹீரோவாக குக் வித் கோமாளி நடிகர் அஸ்வின் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் மனதை கொள்ளை கொண்டவர் அஸ்வின்.

எனவே பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என சொன்னால் அது மிகையல்ல.

Cooku with Comali fame Ashwin’s next with Kumki director

தமிழகத்தின் முக்கிய பிரச்சனையை கையில் எடுக்கிறார்.; பா. ரஞ்சித்தின் அடுத்த அதிரடி

தமிழகத்தின் முக்கிய பிரச்சனையை கையில் எடுக்கிறார்.; பா. ரஞ்சித்தின் அடுத்த அதிரடி

பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் நகைச்சுவை நிறைந்த வாழ்வியல் திரைப்படம்.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குனராக கபாலி காலா போன்ற படங்களில் பணியாற்றியவர் தினகரன் சிவலிங்கம்.

சமகால தமிழக சூழலில் இருக்கும் முக்கிய பிரச்சினையை மையமாகக்கொண்டு நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தை பா.இரஞ்சித், மற்றும் மெட்ராஸ் படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்ட போஸ்டர் நந்தகுமார் அவர்களின் மகன் ‘பலூன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் பலூன் பிக்சர்ஸ் T.N அருண்பாலாஜி இணைந்து தயாரிக்கிறார்கள்.

விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் படத்தில் முன்ணணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள்.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் , சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுத்தந்தது .

அந்த வகையில் முழுக்க நகைச்சுவையையும், உணர்வுப்பூர்வமான வாழ்வையும் மையப்படுத்தி தயாராகும் இந்த படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு துவங்கியுள்ளது.

Director Pa Ranjith’s next movie update is here

ரஜினி விஜய் அஜித் பட பெயரில் ஹர்பஜன் சிங்கை வாழ்த்திய சுரேஷ் ரெய்னா

ரஜினி விஜய் அஜித் பட பெயரில் ஹர்பஜன் சிங்கை வாழ்த்திய சுரேஷ் ரெய்னா

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

“பிரண்ட்ஷிப்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

ஹர்பஜன் சிங்கிற்கு நடிகர் சிம்பு குரல் கொடுத்திருக்கிறார்.

பிரண்ட்ஷிப் படம் நாளை செப்டம்பர் 17 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலிஸாக உள்ள நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன் சக நண்பருக்கு வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஜினி விஜய் அஜித் நடித்து வரும் படங்களின் பெயரை குறிப்பிட்டு அழகாக வாழ்த்தியுள்ளார். இதோ அவரின் பதிவு

பஜ்ஜி பா @harbhajan_singh என் அண்ணாத்த! #Friendship ட்ரைலர்,டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு
படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது.#FriendshipMovie டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க #FriendShipFromTomorrow https://t.co/du8UmVxhm0

Cricketer Suresh Raina wishes Friendship team

More Articles
Follows