தாதா பட இயக்குனர் விஜய்ஸ்ரீயுடன் இணையும் பிக்பாஸ் ஆரவ்

தாதா பட இயக்குனர் விஜய்ஸ்ரீயுடன் இணையும் பிக்பாஸ் ஆரவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DhaDha fame director Vijay Sri going to direct Aarav in his nextகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1-ல் வின்னர் பட்டம் வென்றவர் ஆரவ்.

இவர் இதற்கு முன்பே மாடலிங் செய்து வந்தாலும், பிக்பாஸ் மூலம் தமிழகமெங்கும் பிரபலமானார்.

தற்போது சினிமாவிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வருகின்றன.

சாருஹாசன் நடித்துள்ள தாதா 87 படத்தை இயக்கி உள்ள விஜய் ஸ்ரீ, அடுத்தப்படியாக ஆரவ்வை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறாராம்.

இதன் தலைப்பு, மற்ற நடிகர்கள் விபரம் அனைத்தும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

தாதா 87 படத்தின் இசை வெளியீட்டை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார் விஜய்ஸ்ரீ.

DhaDha fame director Vijay Sri going to direct Aarav in his next

அந்த போட்டியில் ஜெய்க்கட்டும் சான்ஸ் தரேன்; ஸ்ரீரெட்டிக்கு லாரன்ஸ் சவால்

அந்த போட்டியில் ஜெய்க்கட்டும் சான்ஸ் தரேன்; ஸ்ரீரெட்டிக்கு லாரன்ஸ் சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence Challenge statement to Actress SriReddyதிரையுலகில் பலரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக பல குற்றச்சாட்டுக்களை அடிக்கினார் நடிகை ஸ்ரீரெட்டி.

இதற்கு பலரும் எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்தனர்.

ஆனால் முதன்முறையாக நடிகர் ராகவா லாரன்ஸ் சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் லாரன்ஸ் கூறியிருப்பதாவது…

என்னைப் பொறுத்தவரை ஸ்ரீரெட்டி விவகாரம் ஒரு பெரிய விஷயம் அல்ல. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், இந்த சர்ச்சை குறித்து பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டார்கள்.

அவர்களுக்கு பதிலளிக்க, இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். நான் தெலுங்கில் போராளி குறித்த கதையை இயக்கும் சமயத்தில், ஒரு ஹோட்டலில் என்னை சந்தித்ததாக ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார்.

அப்படி பார்த்தால் நான் அந்த படத்தை இயக்கி 7 வருடங்கள் ஆகிறது. இந்த 7 வருடங்கள் என்மீது புகார் கூறாத ஸ்ரீரெட்டி, தற்போது கூறுவது ஏன்?

நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அவர் வந்ததாகவும், அங்குவைத்து நான் அவரை தவறாக பயன் படுத்தியதாகவும் கூறினார். மேலும் அந்த ஓட்டல் அறையில் கடவுளின் புகைப்படம் மற்றும் ருத்ராட்ச மாலையை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.

ஓட்டல்களில் பூஜை செய்ய, ருத்ராட்ச மாலையை எடுத்துச் செல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நான் அவருக்கு எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை என்பது எனக்கும், கடவுளுக்கும் தெரியும் என்பதை ஸ்ரீரெட்டியிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இதற்கு பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை. உங்களது அனைத்து பேட்டிகளையும் பார்த்து உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். உங்கள் பிரச்சனை தான் என்ன? வாய்ப்பு தருவதாக கூறி அனைவரும் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது தானே? தான் ஒரு சிறந்த நடிகை என்று கூறிகிறீர்கள்.

நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறேன்.

மேலும் சில எளிமையான நடனமும் நீங்கள் ஆட வேண்டும். உங்களிடம் திறமை இருப்பதை அவர்கள் முன்பு நீங்கள் நிரூபித்து, இயக்குநராக உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்திபடுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன்.

நான் எந்த தவறும் செய்யவில்லை, எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு பயமில்லை. எனது படத்தில் நீங்கள் நடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை அனைவர் முன்பும் நடித்துக் காட்ட விருப்பமில்லை எனில், எனது மேனேஜரை தொடர்வு கொண்டு, உங்களது வழக்கறிஞர்கள் மற்றும் உங்களது நலம் விரும்பிகள் முன்பு நடித்துக் காட்டுங்கள். நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன்.

உங்களுக்கு பயந்து இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை. நான் பெண்களை மதிப்பவன், அதனாலேயே எனது தாய்க்கு கோவில் கட்டியுள்ளேன். அதை அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பித்துள்ளேன்.

நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் லாரன்ஸ்.

Raghava Lawrence Challenge statement to Actress SriReddy

எலக்ட்ரானிக்கை விடுங்க; இசைக் கருவிகளை பயன்படுத்த இளையராஜா அட்வைஸ்

எலக்ட்ரானிக்கை விடுங்க; இசைக் கருவிகளை பயன்படுத்த இளையராஜா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayaraja and yuvanகே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள படம் படம் ‘பியார் பிரேமா காதல்’.

இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

பிக்பாஸில் புகழ்பெற்ற ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.

அதன்பின் இளையராஜா பேசும்போது,

‘பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன்.

இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்’ என்றார்

கஜினிகாந்த்-மணியார் குடும்பத்துடன் மோதும் 10 படங்கள்

கஜினிகாந்த்-மணியார் குடும்பத்துடன் மோதும் 10 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On 3rd August nearly 12 Tamil movies going to releaseகடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் என இரண்டு மாதங்கள் திரையுலக வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.

அதன்பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமாக இனி வாரத்திற்கு 3 அல்லது 4 படங்களே வெளியாகும்.

அவை முறையான அனுமதி கடிதம் பெற்று வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

கடந்த வாரம் கூட விஜய் சேதுபதியின் ஜுங்கா, த்ரிஷாவின் மோகினி ஆகிய 2 தமிழ் படங்களே ரிலீஸ் ஆனது.

ஆனால் வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி கிட்டதட்ட 12 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது.

அந்த படங்கள் இவைதான்…

கஜினிகாந்த், மணியார் குடும்பம், காட்டுப்பய சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, அழகுமகன், போயா, அரளி, கடிகார மனிதர்கள், உப்பு புளி காரம், நாடோடி கனவு, கடல் குதிரைகள் என ரிலீஸ் தேதியை அறிவித்து விளம்பரங்களும் வெளியாகிவிட்டது.

அடுத்த வாரம் அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி கமலின் விஸ்வரூபம் 2 வெளியாக இருப்பதால் இந்த வாரம் பலத்த போட்டி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

On 3rd August nearly 12 Tamil movies going to release

tamil movie release on 3rd august

தன் முதல் காதல் பற்றி *பியார் பிரேமா காதல்* இசை விழாவில் சிம்பு பேச்சு

தன் முதல் காதல் பற்றி *பியார் பிரேமா காதல்* இசை விழாவில் சிம்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu aka STR talks about his first love at Pyaar Prema Kaadhalபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படுபிரபலமான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா முதன்முறையாக இணைந்துள்ள படம் பியார் பிரேமா காதல்.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைத்து தயாரித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஆனால் ஒரு சில பிரபலமான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இளையராஜா, சீனுராமசாமி, நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஜய்சேதுபதி, ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சிம்புவிடம் உங்கள் முதல் காதல் பற்றி சொல்லுங்கள் என தொகுப்பாளர்கள் கேட்டனர்.

அதற்கு சிம்பு பதிலளிக்கும்போது.. “என் முதல் காதல் என் ரசிகன்தான்” என்றார்.

மேலும் மேடையில் லூசுப்பெண்ணே பாடலை யுவன் இசையில் சிம்பு பாடினார்.

Simbu aka STR talks about his first love at Pyaar Prema Kaadhal

விஜய்சேதுபதி-சீனுராமசாமி இணையும் படத்தை தயாரிக்கும் யுவன்

விஜய்சேதுபதி-சீனுராமசாமி இணையும் படத்தை தயாரிக்கும் யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvan shankar raja will produce Vijay Sethupathi and Seenuramasamy movieவிஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை இயக்கியவர் சீனுராமசாமி.

நடிகர் ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார்.

தற்போது இந்த நடிகர், இசையமைப்பாளர், டைரக்டர் கூட்டணி மீண்டும் இணைகிறது.

விஜய்சேதுபதி நடிக்கவுள்ள படத்தை சீனுராமசாமி இயக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பியார் பிரேமா காதல் பட இசை வெளியீட்டு விழாவில் இந்த தகவலை அறிவித்தார் சீனுராமசாமி.

தற்போது உதயநிதி நடித்துள்ள கண்ணே கலைமானே படத்தை இயக்கி முடித்துள்ளார் சீனுராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

Yuvan shankar raja will produce Vijay Sethupathi and Seenuramasamy movie

More Articles
Follows