ஆல்ரெடி சூப்பர் ஸ்டார் சர்ச்சை.; இதுல Ageing Superstar வேற.? சாருஹாசனுக்கு பால்தாக்கரே வேடமிட்ட விஜய் ஶ்ரீஜி

ஆல்ரெடி சூப்பர் ஸ்டார் சர்ச்சை.; இதுல Ageing Superstar வேற.? சாருஹாசனுக்கு பால்தாக்கரே வேடமிட்ட விஜய் ஶ்ரீஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்து பேசி இருந்தார்.

அப்போது தன்னை ஒரு கழுகு போலவும் மற்ற ஒருவரை காக்கா போலவும் சித்தரித்து அவர் பேசியிருந்தார். இது தற்போது சர்ச்சை பொருளாக மாறி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏஜிங் சூப்பர் ஸ்டார் Ageing Superstar சாருஹாசன் என இயக்குனர் விஜய்ஸ்ரீ பட்டமளித்து பால்தாக்கரே கெட்அப்பில் சாருஹாசன் படத்தை வெளியிட்டுள்ளார்.

அதன் பற்றிய விவரங்கள் வருமாறு…

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார்.

93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சாருஹாசன் நாயகனாக நடித்த ‘தாதா 87’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது.

‘ஹரா’ படத்தில் சாருஹாசனின் பங்களிப்பு குறித்து பேசிய இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, “93 வயதில் இந்தளவு உற்சாகத்துடன் நடிக்கும் நடிகர் வேறெங்காவது இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் ‘ஹரா’ படத்தில் சாருஹாசன் அவர்கள் சிறப்பாக நடித்துள்ளார்,” என்று தெரிவித்தார்.

சாருஹாசன்

தொடர்ந்து பேசிய அவர், “டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் டான் பாத்திரத்தில் சாருஹாசன் நடித்துள்ளார்.

அவரது காட்சிகளை எந்த வித சோர்வோ தாமதமோ இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் நடித்து கொடுத்தார். அவருக்கும், அவரது மகள் திருமதி சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி,” என்று கூறினார்.

மேலும், எதிர்மறை கதாப்பாத்திரத்தில் சுரேஷ் மேனனும், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் இதுவரை ஏற்றிராத வித்தியாச வேடத்தில் வனிதா விஜயகுமாரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

‘ஹரா’ திரைப்படத்தில் சுரேஷ் மேனன் மற்றும் வனிதா விஜயகுமாரின் கதாபாத்திரங்களும் நடிப்பும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

‘ஹரா’ திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

எத்தனையோ இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மோகன், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி ‘ஹரா’ திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என இயக்குநர் தெரிவித்தார்.

‘ஹரா’ திரைப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ‘ஹரா’ படத்தின் முக்கிய கருத்தாகும்.

இப்படத்தில் முதல் பார்வை, டைட்டில் டீசர் மற்றும் ‘கயா முயா…’ என்ற பாடல் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாருஹாசன்

93 year old Ageing Superstar Charuhaasan in Haraa movie

எங்கும் ‘ஜெயிலர்’.; ரஜினி மூலமாக சன் பிக்சர்ஸ்க்கு கோரிக்கை வைத்த தியேட்டர் அதிபர்கள்

எங்கும் ‘ஜெயிலர்’.; ரஜினி மூலமாக சன் பிக்சர்ஸ்க்கு கோரிக்கை வைத்த தியேட்டர் அதிபர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்று அளித்துள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், “ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள் என்று பேசினார். அது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tamilnadu Theater Owners Association Has Requested Actor Rajini

பேச்சுலர் லைஃபுக்கு ‘டாட்டா’ சொல்லும் ‘டாடா’ ஹீரோ.; கல்யாண பொண்ணு யாரு?

பேச்சுலர் லைஃபுக்கு ‘டாட்டா’ சொல்லும் ‘டாடா’ ஹீரோ.; கல்யாண பொண்ணு யாரு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, தாயுமானவன் உள்ளிட்ட டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் கவின்.

ஒரு கட்டத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தபோது ரசிகர்களின் ஆதரவை பெரும் அளவில் பெற்றார். அங்கு இவருக்கும் ஒரு பிரபல நடிகைக்கும் கொஞ்சம் நெருக்கமானது.

தொடர்ந்து இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் கவின். இவர் நடித்த லிப்ட் மற்றும் டாடா ஆகிய இரு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இவருக்கு வீட்டில் பெண் பார்த்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது.  

இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

Actor Kavin marriage news updates

நடிக்கும்போதே தெரிஞ்சுது.; விஜய்யின் தோல்வி படம் குறித்து பேசிய ரஜினி பட நடிகை

நடிக்கும்போதே தெரிஞ்சுது.; விஜய்யின் தோல்வி படம் குறித்து பேசிய ரஜினி பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை தமன்னா.

இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்./இந்த படத்தில் இடம் பெற்ற ‘காவலா….’ என்ற பாடலுக்கு தமன்னா போட்ட ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் தமன்னாவின் சமீபத்தில் பேட்டியில்..

“விஜய்யின் 50 வது படமான ‘சுறா’ குறித்து பேசி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சுறா படத்தில் தன்னுடைய கேரக்டர் பெரிதாக அமையவில்லை எனவும் அந்தப் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே இந்த படம் தோல்வி அடையும் என தான் கருதியதாகவும் கூறியிருக்கிறார்.

தான் மிகவும் மோசமாக நடித்ததால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் வேறு வழி இல்லாமல் அந்த படத்தில் நடித்து முடித்து கொடுத்ததாகவும் தமன்னா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னா

Jailer heroine speaks about Vijay flop movie

‘ஸ்பார்க் லைஃப்’ பான் இந்தியா படத்தில் விக்ராந்த் – மெஹ்ரீன் ஜோடி

‘ஸ்பார்க் லைஃப்’ பான் இந்தியா படத்தில் விக்ராந்த் – மெஹ்ரீன் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து பார்வையாளர்களிடத்தில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இப்படத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்ஸாதா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை பற்றிய ஒரு அற்புதமான அப்டேட்டை சுவராசியமான போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 6:45 மணிக்கு வெளியாகிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் கையில் முகமுடியுடன் விக்ராந்த் காணப்படுகிறார்.

தற்போது இதன் டீசருக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இதில் மெஹ்ரீன் பிர்ஸாதா நாயகியாக நடிக்கிறார்.

இவர் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற F3 எனும் படத்தில் தனது வசீகரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் படமான இந்த படத்தின் மூலம் விக்ராந்த் நாயகனாக அறிமுகமாகிறார்.

டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை இயக்கி, தயாரித்து வருகிறது. ‘ஹிருதயம்’ புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இந்த தனித்துவம் மிக்க த்ரில்லர் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் படைப்புகள், உயர்தரத்துடன் சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக தயாரிக்கிறது.

இந்த படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் நாசர், சுகாசினி மணிரத்னம், வெண்ணலா கிஷோர், சத்யா, ஸ்ரீகாந்த், கிரண் ஐயங்கார், அன்னபூர்ணமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஸ்பார்க் லைஃப்

Vikranth Mehreen starring Spark L.I.F.E teaser on 2nd August

விஷால் அரங்கில் ‘ஜெயிலர்’ பாடல்களை திரையிட்டு கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

விஷால் அரங்கில் ‘ஜெயிலர்’ பாடல்களை திரையிட்டு கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன் ஜூலை 28ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு இன்று வரை சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி இருக்கிறது.

தன்னை கழுகு என்பது போல சொல்லிக் கொண்ட ரஜினிகாந்த் யாரை காக்கா என்று குறிப்பிட்டார் என்பது தான் தற்போது கோலிவுட் ஹாட் டாபிக்.

இதனால் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களுக்கும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் முக்கியமாக விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகி வருகின்றது.

இது ஒரு புறமிருக்க மற்றொருபுறம் பொள்ளாச்சி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் மற்றும் கிளை மன்றங்கள் இணைந்து அங்குள்ள விஷால் சினிமாஸ் என்ற திரையரங்கில் ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்களை வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

மேலும் அந்த திரையரங்கில் ஜெயிலர் படத்தின் பாடல்கள் மற்றும் ஜெயிலர் இன்ட்ரோ ஆகிய காட்சிகளை திரையிட்டு ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜெயிலர்

Rajini fans celebrated Jailer songs at Vishal Cinemas

More Articles
Follows