புரட்சி தலைவி தெரியும்.. புரட்சி செல்வி தெரியுமா.?.. PUBG பட பாடலில் விஜய் ஸ்ரீ செய்த வி(ந)ல்லத்தனம்

aishwarya dutta‘தாதா 87′ படத்தில் 87 வயது சாருஹாசனை ஹீரோவாக்கிய போதே திரையுலக கவனத்தை ஈர்த்தவர் டைரக்டர் விஜய் ஸ்ரீ ஜி.

இவரின் அடுத்த படத்திற்கு ‘பொல்லாத உலகின் பயங்கர கேம்’ – PUBG எனப் பெயரிட்டுள்ளார்.

ரிலீசுக்கு தயாராகவுள்ள இந்த படத்தை கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைத்து தற்போது 2021 பொங்கலுக்கு வெளியிடவுள்ளனர்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா, நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், அனித்ரா, ஆராத்யா, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், சதீஷ் முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு லியாண்டர் மார்ட்டி இசையமைத்துள்ளார்.

இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி, பாடிய ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடல் நேற்று விஜயதசமி நேற்று ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இப்படத்தின் பாடல்களை
“டிரெண்ட் நிறுவனம்” வெளியிடுகிறது.

இப்படத்தின் மற்ற பாடல்கள் இசை தீபாவளியன்று வெளியாகிறது.

மேலும் பாடல் வீடியோவில் டெக்னீஷ்யன்ஸ் & பிஆர்ஓ உள்பட அவர்களின் பெயரும் போட்டோவும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நல்ல விஷயத்தை செய்திருந்தாலும் கூடவே ஒரு வில்லத்தனத்தையும் செய்துள்ளார்.

‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ இந்த பாடலின் புரோமோ வீடியோவில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு ‘புரட்சி செல்வி’ என்று பட்டமளித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என மக்கள் அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘புரட்சி செல்வி’ என்ன என்ன பிரச்சினைகளை கிளப்பப் போகிறதோ.? பார்ப்போம்.

இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Aishwarya Dutta is now called Puratchi Selvi

Overall Rating : Not available

Latest Post