சங்கீத மேடைகளில் சதமடித்த ‘மைக்’ மோகனுக்கு என்ன வச்சிருக்காரோ விஜய்ஸ்ரீ.? நாளை தெரியும்!

சங்கீத மேடைகளில் சதமடித்த ‘மைக்’ மோகனுக்கு என்ன வச்சிருக்காரோ விஜய்ஸ்ரீ.? நாளை தெரியும்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 – 90களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களில் ஒருவர் மோகன்.

இவர் நடித்த இதயக் கோயில், உதயகீதம், குங்குமச்சிமிழ், பயணங்கள் முடிவதில்லை, மெல்ல திறந்தது கதவு, மௌனராகம் என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இவரது படங்களில் பெரும்பாலும் மேடை கச்சேரி இடம் பெறும். அதுபோல இவரது படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும்.

எனவே இவருக்கு மைக் மோகன் என்ற செல்ல பெயரும் உண்டு. இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய பாடல்களுக்கு இவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து பெண்கள் மத்தியிலும் இவருக்கு அமோக ஆதரவு கிடைத்தது.

இவரது படங்கள் குறைந்தபட்சமாக 100 நாட்களை தாண்டி தான் ஓடும். பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழா கண்டதால் வெள்ளிவிழா நாயகன் (சில்வர் ஜூப்ளி ஸ்டார்) என்ற பெயரும் இவருக்கு உண்டு.

இவரது படங்கள் வெளியாகி 30 – 35 வருடங்களை கடந்து விட்டாலும் தற்போதும் இரவு நேரங்களில் இவரது பாடல்களை கேட்கும் ரசிகர்கள் ஏராளம். அதுபோல ரேடியோ / டிவிக்களிலும் இரவு நேரங்களில் இவரது பாடல்கள் தான் ஒலித்து வருகிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தன்னுடைய பாடல்கள் ஹிட் ஆனதற்கு முக்கிய காரணம் எஸ்பிபி என்பதால் அவரது இறுதிச் சடங்கில் கொரோனா காலத்திலும் கலந்து கொண்டார் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த மைக் மோகனை திரும்பவும் நாயகனாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

இவர் இயக்கி வரும் ‘ஹரா’ படத்தில் மோகன், குஷ்பூ, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ரயில் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மோகன் சினிமாவில் பயணித்து வரும் 45 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் மோகன் ரசிகர்கள் நாளை அக்டோபர் 7ல் விழா எடுக்கின்றனர்.

‘கோகிலா’ முதல் ‘ஹரா’ வரை என்ற பெயரில் 45 இயர்ஸ் ஆப் மோகனிசம் (45 Years of Mohanism) என்ற இந்த நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் லீயாண்டர் லீ மார்ட்டி இசையில் ‘ஹரா’ படத்தில் இடம்பெற்றுள்ள கயா முயா என்ற பாடலை நாளைய நிகழ்ச்சியில் ரிலீஸ் செய்யவிருக்கிறார் விஜய் ஸ்ரீ.

பல சங்கீத மேடைகளில் பாடி ரசிகர்களை மகிழ்வித்த மோகன் தற்போது ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதால் அவரது புதிய பாடல் எப்படி இருக்கும்? அந்த பாடலை எப்படி உருவாக்கி இருப்பார் விஜய் ஸ்ரீ? என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் .

இந்தப் பாடல் புரோமோவை தற்போது இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை விஜய்ஸ்ரீ எழுத சக்தி முரளிதரன் மற்றும் மகாலிங்கம் பாடியுள்ளனர்.

இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ உடன் இணைந்து கோவை மோகன்ராஜ் என்பவர் தயாரித்து வருகிறார்.

நாளை இந்த பாடல் வெளியாக உள்ளதால் காத்திருந்து பார்ப்போம்..

Make way for the first single #KayaMuya ? from #SilverJubileeStar #Mohan’s #Haraa releasing tomorrow ? Oct 7th

Here is the promo! ?
https://t.co/PmKbzh8Zbf

@khushsundar @iYogiBabu #filmistreet @manobalam @vijaysrig @onlynikil @leanderleemarty @SonyMusicSouth #SPMohanraja https://t.co/TKGkjL6Kvj

ஹரா

first single Kaya Muya from SilverJubileeStar Mohan’s Haraa releasing tomorrow

‘பொன்னியின் செல்வன்’ படம் பார்த்த கமல்ஹாசன் விமர்சனம் இதோ…

‘பொன்னியின் செல்வன்’ படம் பார்த்த கமல்ஹாசன் விமர்சனம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் சரித்திர நாவல், லைகா புரொடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியான நாள் முதல் உலக தமிழர்களின் பாராட்டைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் படத்தை படக்குழுவினருடன் சென்னையில் பார்வையிட்டார்.

படத்தைப் பார்த்தபின் அவர் பேசுகையில்….

” ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட மலைப்பு, கண்டிப்பாக அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன். இந்த படத்தின் தொடக்கத்தில் பொற்காலத்தைப் பற்றிய ஒரு வசனம் இடம் பெறும் அது என்னுடைய குரலில் இடம்பெறும். அதை மீண்டும் ஒரு முறை நினைவூட்ட விரும்புகிறேன்.

எனக்கு தெரியும் என்பதால் சொல்லவில்லை. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். படத்தை பார்த்த மகிழ்ச்சியில் சொல்கிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது போன்றது உணர்வு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் சினிமா கலைஞராக.. தயாரிப்பாளராக …எனக்கு இது பெருமிதம் கொள்ளும் நேரமாகவும் இருக்கிறது.

இந்த தருணத்தில் பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் இணைந்து கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்டிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களை பார்த்துக் கொண்டே இருந்தேன். அதில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதை மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன்.

இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், மணிரத்னம், லைகா புரொடக்ஷன்ஸை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு திரைப்படங்களை உருவாக்க முடியும். தற்போது நூற்றுக்கணக்கானவர்கள் இடம்பெற்றிருக்கும் பட்டியலை பார்த்து வியக்கிறோம். மலைப்பாகவும் இருந்தது.

இப்படி தயாரிப்புக்கு துணையாக நின்ற லைகா சுபாஸ்கரன் அவர்களை, தமிழ் சினிமா சார்பாகவும், இதுபோன்றதொரு பிரம்மாண்ட முயற்சியை எடுத்ததற்காகவும் பிரத்யேகமாக நன்றி தெரிவிக்கிறேன்.

பொன்னியின் செல்வனில் நான் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தம்பி கார்த்தி நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பல வேடங்களில் நானே நடிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.

போர்க்கள காட்சிகளை படமாக்குவது எத்தனை கடினம் என்பது எமக்குத் தெரியும். கத்தி, கேடயம், கவசம், கிரீடம், குதிரை, புழுதி இதனுடன் நடிப்பு என எல்லாவற்றையும் நன்றாக செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் சீயான் விக்ரம் மிக நன்றாக செய்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கும் போது நான் தயாரித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

அதுவும் உண்மை. ஏனென்றால் தமிழ் சினிமா தயாரித்திருக்கிறது. இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். இந்த உணர்வும், கூட்டுறவும் நீடிக்க வேண்டும். நாளை என்னுடைய படத்திற்கும் நீங்கள் இதுபோல் கொண்டாட வேண்டும்.” என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில்,…

‘ எங்களுடைய கனவு நனவாகிவிட்ட நிஜமான சந்தோஷம் இது. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு மிகவும் நன்றி. மூன்று தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்கள் இதனை பார்த்துக் கொண்டாடுகிறார்கள்.

இந்த படைப்பில் நாங்கள் இருக்கிறோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. படத்தின் தொடக்கத்தில் கமல்ஹாசன் அவர்களின் குரலில் தான் தொடங்கும். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது எல்லாம் கடந்து இது அவருடைய படமாக நினைத்து, இங்கு வருகை தந்து, பார்த்து ரசித்ததுடன் மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பற்றி தன்னுடைய எண்ணத்தை மக்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய இந்த நேர்மையான அணுகுமுறையை மனதாரப் பாராட்டுகிறோம்.” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில்…

” அனைவருக்கும் முதலில் நன்றியைத் தான் தெரிவிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொருவரும் ‘இது நம்ம படம்’ என்று கொண்டாடுகின்றனர். அதிகாலை ஐந்தரை மணி காட்சிக்கு அம்மாவையும், பாட்டியையும் அழைத்து வந்து காண்பது என்பது இதுவரை நாம், நம் தமிழ் சினிமாவில் காணாத ஒரு விசயம்.

திருநெல்வேலியில் ஒருவர், ‘என்னங்க தியேட்டரெல்லாம் எப்படி மாறிவிட்டது. நான் தியேட்டருக்கு வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு’ என்று சொல்கிறார். இதுவரை தியேட்டருக்கே வராதவர்கள் கூட இந்த படத்திற்காக தியேட்டருக்கு வருகை தருகிறார்கள்.

உலக நாயகன் கமல்ஹாசனுடன் படத்தை பார்ப்பது எப்போதும் உற்சாகமான அனுபவம். நாங்கள் எத்தனை வெற்றிகளை பெற்றாலும் அது அவருக்கேச் சமர்ப்பணம்.

‘பருத்திவீரன்’ படத்தின் தொடக்க விழாவின்போது உலகநாயகன் கமலஹாசன், மருதநாயகம் படத்தின் முன்னோட்டத்தை காண்பித்தார். அதில் அவருடைய நடிப்பும், குதிரை ஏற்றமும்.. இன்றும் பிரமிப்பு நீங்காமல் என் கண்களுக்குள் இருக்கிறது. ” என்றார்.

விஜய் சேதுபதியின் நீண்டகால நிலுவையில் இருந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் நீண்டகால நிலுவையில் இருந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் செல்வனின் திரைப்படங்களில் ஒன்றான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அதன் வெளியீடு தடைபட்டது.

விஜய தசமி தினமான நேற்று இந்த ஆண்டு டிசம்பரில் உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை வெங்கடகிருஷ்ண ரோஹந்த் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘மார்க் ஆண்டனி’ படத்தின் எஸ்.ஜே.சூர்யாவின் பயங்கர கேங்ஸ்டர் லுக்கை வெளியிட்ட விஷால்!

‘மார்க் ஆண்டனி’ படத்தின் எஸ்.ஜே.சூர்யாவின் பயங்கர கேங்ஸ்டர் லுக்கை வெளியிட்ட விஷால்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில், விஷால் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷாலின் மார்க் ஆண்டனி கதாபாத்திரம் வெளியாகியிருந்த நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் அடங்கிய செகண்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பயங்கர கேங்ஸ்டர் ‘ஜாக்கி பாண்டியன்’ ஆக தோற்றமளிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

அக்டோபர் 1 ஆம் தேதி, படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியது மார்க் ஆண்டனி படக்குழு. கிட்டத்தட்ட 100 நாட்களில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

ரியலாவே ரஜினி கெத்து தான்.; விலைமதிப்பற்ற போட்டோவை பகிர்ந்த ஐஸ்வர்யா

ரியலாவே ரஜினி கெத்து தான்.; விலைமதிப்பற்ற போட்டோவை பகிர்ந்த ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை தாண்டியும் நிஜ வாழ்க்கையிலும் ரஜினியை உயிருக்கு நிகராக நேசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

இவர்களில் பலர் ரஜினியை ஒரு தெய்வமாகவே நினைத்து வழிபடுபவர்களும் உண்டு.

அந்த அளவிற்கு ரஜினிகாந்த் ரசிகர்களை தன் காந்த சக்தியால் ஈர்த்து வைத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையல்ல.

எனவே தான் ரஜினியின் ரீல் புகைப்படங்களும் ரியல் புகைப்படங்களும் எப்போதுமே வைரலாகும்.

இந்த நிலையில் ரஜினியின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ஒரு ரஜினி படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில்.. ‛‛இந்த போட்டோவிற்கு பில்டர் எடிட் தேவையில்லை. விலைமதிப்பற்ற நேர்மறையான ஒரு போட்டோ. அப்பாவின் அன்பு. உங்கள் எல்லா நாட்களும் மேற்கண்ட வரியில் கூறப்பட்டுள்ளபடியே இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்த நடிகர்

குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்த நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

இந்த படம் தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்தது. இதனையடுத்து பல படங்களை பிரம்மாண்டமாக தயாரித்தார் குஞ்சுமோன்.

கிட்டத்தட்ட 15 – 18 வருடங்களாக தயாரிப்பை வீட்டு விலகியிருந்த குஞ்சுமோன் தற்போது மீண்டும் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் முப்பது வருடங்களுக்குப் பிறகு ‘ஜென்டில்மேன் 2’ படத்தை எடுக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்

ஆனால் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர் இப்படத்தை இயக்கவில்லை. அவருக்கு பதில் ஏ.கோகுல் கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளார்.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்த மரகதமணி என்கிற கீரவாணி தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இதில் நாயகியாக ஜூனியர் நயன்தாரா என்றழைக்கப்படும் நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்க உள்ளதாக அறிவித்தனர்.

மேலும் முக்கிய வேடத்தில் ‘ஜீனியஸ்’ பட நாயகி ப்ரியாலால் நடிக்கிறார்.

ஆனால் நாயகன் யார்? என்பதை படக்குழு அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு ஹீரோவாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக சேத்தன் சீனு எண்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows