ஐட்டம் டான்ஸுக்கு சன்னி லியோனை அழைக்கும் PUBG டைரக்டர்.; அடங்கமாட்டீரா விஜய் ஸ்ரீ.?

ஐட்டம் டான்ஸுக்கு சன்னி லியோனை அழைக்கும் PUBG டைரக்டர்.; அடங்கமாட்டீரா விஜய் ஸ்ரீ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sunny leone in pubg87 வயதில் சாருஹாசன் ஹீரோவாக நடித்த ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ.

இதில் தாதாயிசம் & திருநங்கையின் காதலை மையப்படுத்தியிருந்தார்.

தற்போது விஜய் ஸ்ரீ-யின் 2வது படமாக ‘பீட்ரூ’ என்ற படம் உருவாகி வருகிறது.

இதில் அம்சவர்தன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதே வேளையில் ஐஸ்வர்யா தத்தாவை நாயகியாக்கி ‘PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்கிறார்.

இவர்களுடன் பிக்பாஸ் ஜுலி, அனிதா, ரித்திகா சரண் என பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில், ஐஸ்வர்யா தத்தா நிர்வாண கோலத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவரும் யூகிக்க முடியாத அளவில் இந்த கதையினை உருவாக்கியிருக்கிறாராம் விஜய்ஸ்ரீ ஜி.

இப்பட டீசர்… ராம்கோபால் வர்மாவின் NAKED படத்திற்கு ஒரு சவாலாக இருக்கும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கவர்ச்சி பாம் சன்னி லியோனை தன் PUBG படத்தில் ஐட்டம் டான்ஸ் போட அழைக்கிறார்.

இன்னும் என்ன என்ன ஐட்டங்களை பப்ஜியில் கொண்டு வருவாரோ விஜய்ஸ்ரீ…?

ஆன்லைனில் மட்டுமே சந்தித்து 31 அழகிகள் இணைந்து ஆடிய ‘ஓணம்’ டான்ஸ்

ஆன்லைனில் மட்டுமே சந்தித்து 31 அழகிகள் இணைந்து ஆடிய ‘ஓணம்’ டான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

onamஉலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம் , இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாதமாக உலகெங்குமுள்ள கேரள மக்களால் நம்பப்படுகிறது .

ஆகவே ஆவணி மாதத்தில் அத்தம் நாளில் தொடங்கி பத்து நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓண நடனம் , புலிக்களி எனும் புலி விளையாட்டு , படகு போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளால் பண்டிகை களை கட்டும் . ஆனால் கொரோணா காலத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதால் கொண்டாட்டங்களுக்கு அது தடையாக உள்ளது . இந்நிலையில் கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியையையும் நடன ஆசிரியையுமான அம்பிகா பாலசுப்ரமணியமும் அவரது மகள் , கத்தரில் வசிக்கும் அமிர்தாவும் சேர்ந்து தங்களது நூபுரா நடன பள்ளி சார்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள 31 பெண்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஓண நடனம் செய்ய வைத்து அதை யூ டியூபில் வெளியிட்டனர் .

இந்த ஆன்லைன் ஓண நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பிற கலைஞ்சர்களும் இதை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர் என்பது இவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது .

இது குறித்து அம்பிகா பாலசுப்ரமணியம்…

” கோயம்பத்தூர் முதல் வெளிநாடுகளின் வசிக்கும் எங்கள் நட்பு வட்டங்களையும் என்னிடம் நடனம் கற்கும் மாணவிகளையும் ஆன்லைன் மூலமாக அழைத்து இந்த நடனத்தை செய்துள்ளோம் .

இதில் குழந்தைகள் ,குமரிகள்,குடும்ப தலைவிகள் , பாட்டிமார்கள் என 31 மகளீர் பங்கேற்றனர் . இவர்களில் பெரும்பான்மையானவர்கள் முறையாயாக நடனம் கற்காதவர்களே .

உலகெங்கும் பரவி இருக்கும் இவர்கள் ஜாதி மத சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அன்பாலும் பாசத்தாலும் நடனத்தோடு உள்ள பற்றினாலும் இணைந்தவர்கள் . தொழில் நுட்ப ரீதியாக குறைகள் இருக்கலாம் . ஆனால் புலம் பெயர்ந்து வாழும் எங்களது முயற்சி மற்ற கலைஞ்சர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம் .” இவ்வாறு கூறினார் .

*31 lovely ladies together !!!*

*DIGITAL ONAM DANCE*

By NOOPURA SQUAD!!

VIDEO LINK:

https://drive.google.com/file/d/

வெண்டிலேட்டர் & எக்மோ உதவியுடன் சிகிச்சை..; SPB உடல்நிலை குறித்து MGM அப்டேட்

வெண்டிலேட்டர் & எக்மோ உதவியுடன் சிகிச்சை..; SPB உடல்நிலை குறித்து MGM அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPBபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்….

” SPB தற்போதைய நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் இருக்கிறார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி உடல்நிலை, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை ஏற்கும் அளவிற்கு நன்றாக உள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

‘அண்டாவ காணோம்’… அது கிடைக்கும் வரை ‘மம்மி சேவ் மீ’ பாருங்க..; JSK தரும் Rs 60 FAMILY OFFER

‘அண்டாவ காணோம்’… அது கிடைக்கும் வரை ‘மம்மி சேவ் மீ’ பாருங்க..; JSK தரும் Rs 60 FAMILY OFFER

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mummy Save Me family offer at Rs 60 on JSK Prime Media Appஅனைவருக்கும், வணக்கம்!

இன்று 28 ஆகஸ்ட் 2020 ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் JSK Prime Media App–ல் திரையிட திட்டமிட்டிருந்தோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளோம். ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த
வாடிக்கையாளர்களுக்கு நன்றி. கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

JSK Prime Media App – IOS, Android, Fire Stick, Smart Tv, Web Browser போன்ற‌ அனைத்து தளங்களிலும் பதிவிறக்கம் (Download) செய்ய தயார் நிலையில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் தளத்தினை பதிவிறக்கம் (Download) செய்து Sign in செய்த உடன் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

‘அண்டாவ காணோம்’ திரைப்படம் ரிலீஸ் தள்ளிபோன காரணத்தினால் உடனடியாக பார்வையாளர்களுக்கு இந்த வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை 30.08.2020 அன்று ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me) திகில் திரைப்படத்தை திரையிட முடிவுசெய்துள்ளோம்.

வரும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கில் உங்களை மிரட்ட வருகிறாள் ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me). அனைவரும் கண்டுகளியுங்கள். அதற்கான கட்டணம் ரூ.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஊரடங்கில் வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள்.

நன்றி வணக்கம்.
அன்புடன்
JSK சதீஷ்குமார்

Mummy Save Me family offer at Rs 60 on JSK Prime Media App

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’.

இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்

இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜய்யின் பட்டர்பிளை, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா.

இவர்களுடன் கிறிஸ்துவ பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார்.

‘ரிச்சி’ ‘நிமிர்’ படங்களுக்கு இசையமைத்துள்ள அஜனீஸ் லோகநாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் H.C.வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப்படத்தின் கதை.

 

 

‘ஜதுரா’ படத்தால் அடுத்த லெவலுக்கு ஜம்ப் ஆகும் இந்திய சினிமா

‘ஜதுரா’ படத்தால் அடுத்த லெவலுக்கு ஜம்ப் ஆகும் இந்திய சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First time in Indian Cinema Zathura tamil movie with Virtual Productionதமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களை அதிக பேர் ரசிக்க காரணம் விஷுவல் எபெக்ட்ஸ். சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய படங்கள் உலக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்த தரத்தில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய ‘ஜதுரா’ என்னும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஜதுரா என்கிற தமிழ் மொழி திரைப்படம், இந்தியாவில் முதல் முறையாக ரியல் டைம் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் விர்சுவல் புரொடக்‌ஷன் முறையில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

தொழில் நுட்பத்திலும், தரத்திலும், திரைத்துறையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான விஷயமாகும். இது வருங்கால இந்திய சினிமாவின் முதல் முயற்சி.

‘ஜதுரா’ படத்தை சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் தயாரித்து வருகிறார். ஆர்.ஜே.பார்த்திபன் இப்படத்தை இயக்குகிறார். வி.எப்.எக்ஸ் இயக்குனராக பெமில் ரோஜர் பணியாற்றுகிறார்.

ரட்சகன் ஸ்ரீதர் இசையமைக்கும் இப்படத்திற்கு மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஜெனிபர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மைக்கேல் ராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருப்பவர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இவர்களின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தி இருக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

First time in Indian Cinema Zathura tamil movie with Virtual Production

தொழிலதிபர் வசந்தகுமார் MP மறைவு; கமல்-ரஜினி இரங்கல்

தொழிலதிபர் வசந்தகுமார் MP மறைவு; கமல்-ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal and Rajinis condolence message for Vasanthakumar demise கொரோனா தொற்று காரணமாக தொழிலதிபரும் அரசியல் பிரமுகருமான வசந்தகுமார் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

அவருடைய மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்.

பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

கமல் மற்றும் ரஜினி தங்கள் இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

கமலின் பதிவில்…

நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு.

ரஜினியின் பதிவில்…

அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Kamal and Rajinis condolence message for Vasanthakumar demise

More Articles
Follows