BAD COP AS SUPER COP… தாறுமாறு ‘தர்பார்’ டிரைலர் வெளியானது

BAD COP AS SUPER COP… தாறுமாறு ‘தர்பார்’ டிரைலர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar trailer out with Rajinis super punch dialoguesமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள தர்பார் பட டிரைலர் இன்று வெளியானது.

இதன் ட்ரைலரை படக்குழுவினர் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.

ரஜினி ரசிகர்கள் அவரது படத்தில் என்னென்ன எதிர்பார்ப்பார்களோ அத்தனையும் கலந்து மாஸ் எண்டர்டெயினாக தர்பார் ட்ரைலரை கொடுத்துள்ளனர்.

மேலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஆக்சன், ரொமான்ஸ், பன்ச் டயலாக் என தாறுமாறாக உள்ளது.

மும்பை சிட்டி போலீஸ் கமிஷ்னராக ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி.

அதில் போலீஸ் என்பது ஒரு ஜாப் அல்ல. அது ஒரு சேவை என பன்ச் டயலாக் பேசுகிறார்.

அவன் போலீஸ் ஆபிசரா சார் கொலைகாரன் சார்’ என ஒரு வசனம் வருகிறது.

அதிலிருந்தே தெரிகிறது ரஜினி சட்டப்படி செயல்படாத ஒரு கமிஷ்னர் என்பது தெரிகிறது.

இவர் அண்டர்வேர்ல்டு தாதாவாக இருக்கும் சுனில் ஷெட்டியுடன் மோதுவது ரஜினியின் மெயின் வேலையாக இருக்கும் போல.

நயன்தாராவை சந்திக்கும் காட்சியிலேயே ரஜினிக்கு லவ் உண்டாகுகிறது போல. அப்படியொரு காந்த பார்வையில் இருவரும் நெருக்கமாவது போல உள்ளது.

‘அவன்கிட்ட சொல்லுங்க.. போலீஸ் கிட்ட லெஃப்ட்ல வச்சுக்கோ, ரயிட்ல வச்சுக்கோ.. ஸ்ட்ரெய்ட்டா வெச்சுக்காதன்னு…’ என பன்ச் பேசும்போது ரஜினி செம ஸ்டைலாக இருக்கிறார்.

இறுதியாக க்ளைமாக்ஸ் பைட் போல ரஜினி அண்ட் சுனில் ஷெட்டி மோதும் காட்சிகள் உள்ளது.

பின்னர் ஒரு சிங் போலீஸை பார்த்து ‘ஒரிஜினலாவே நான் வில்லன்ம்மா.. ஹவ் இஸ் இட்?’ என கேட்கிறார் ரஜினி.

இதனையடுத்து ஐ யம் பேட் போலீஸ் என ஸ்டைலாக கூலாக நடந்தபடி செல்கிறார். அதாவது நான் கெட்ட போலீஸ் என கூறுகிறார்.

ஆட்டம் போடும் ஆட்களுக்கு தான் இவன் கெட்டவன். பாம்பே மக்களுக்கு இவர் ஒரு பாட்ஷா எனத் தெரிகிறது.

Darbar trailer out with Rajinis super punch dialogues

தனுஷ் நடிக்கும் “பட்டாசு” ஜனவரி 16ஆம் தேதி வெளி ஆகும் – தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அதிகார பூர்வ அறிவிப்பு.

தனுஷ் நடிக்கும் “பட்டாசு” ஜனவரி 16ஆம் தேதி வெளி ஆகும் – தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அதிகார பூர்வ அறிவிப்பு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pattas dhanushபாரம்பரியம் மிக்க திரைப்பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிக மிக ராசியான மாதம் ஜனவரி என்று கூறலாம். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , அஜித் குமார் நடிப்பில் வந்த “விசுவாசம்” படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இதை நிரூபித்த சத்யஜோதி நிறுவனத்தினர் 2020 ஜனவரி 16 ஆம் தேதி அன்று தங்களது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான “பட்டாசு” திரைப்படத்தை திரையிட உள்ளனர். அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் தனுஷ் நடிப்பில் , ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான “பட்டாசு” motion போஸ்டர் மிக குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளத்தில் கோலோச்சியது.
“எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கோட்பாடே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏற்ற படங்களை வழங்குவதுதான். பல வருடங்களாக இந்த கோட்பாடை தான் கடைப்பிடிக்கிறோம். உற்றார், உறவினர் என்று கூடி மகிழும் ஒரு பண்டிகை மாதம் ஜனவரி. எங்கள் நிறுவனத்தை பொறுத்த வரை கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளி வந்த “விஸ்வாசம்” மாபெரும் வெற்றியை தந்தது என்றால் , வரும் ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவரும் “பட்டாசு” மீண்டும் ஒரு பெரும் வெற்றியை தரும் என நம்புகிறோம்.தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி , எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் உள்ளது இப்படம். மிக ஜனரஞ்சகமான , கதை கனமான ஒரு படத்தை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு இயக்குனர் துரை செந்தில் குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திட்டமிடப்படியே படப்பிடிப்பு நடத்தி , குறிப்பிட்ட நாளில் படம் வெளிவர உழைத்த இயக்குனரும், அவரது குழுவினரும் படத்தின் வெற்றிக்கு வித்திட்டு உள்ளனர்.
தனுஷ் உடனான எங்கள் உறவு மிக மிக ஆரோக்கியமானது. “பட்டாசு’ எங்கள் உறவை மேலும் பலப்படுத்தும். இதுவரை நாங்கள் வெளியிட்டு உள்ள இரண்டு போஸ்டர்கலும் அவரது வெவ்வேறு தோற்றங்களை வெளிக்காட்டி உள்ளது. நடிப்பில் அவர் ஒரு அசுரன் என்ற பாராட்டுக்கு அவர் உரியவர் என்பதை “பட்டாசு”மீண்டும் நிரூபிக்கும்.

நவீன் சந்திரா, சினேகா, நாயகி மெஹரீன் பிர்சாடா, மற்றும் படத்தில் நடித்து இருக்கும் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களே. விரைவில் ஆடியோ மற்றும் ட்ரைலர் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் வெளிவரும்.
விவேக் -மெரிவின் இரட்டை இசை அமைப்பாளர்கள் இசையில் , நாங்கள் வெளியிட்ட முதல் சிங்கிள் ” சில் ப்ரோ” மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது” என்று பெருமிதத்தோடு கூறினார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரகாஷ் மப்பு பட தொகுப்பு செய்ய, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில், ஜனனி நடனம் அமைக்க, விவேக் மெரிவின் இசை அமைப்பில் , சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி, ஜி. தியாகராஜன் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

விஜய் & வெற்றிமாறன் கூட்டணியை இணைக்கும் சன் பிக்சர்ஸ்

விஜய் & வெற்றிமாறன் கூட்டணியை இணைக்கும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 65அசுரன் படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இதனை அடுத்து வட சென்னை 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்த தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது தலைவர் 168 & தனுஷ் 44 படங்களை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் வெற்றியை வெங்காயத்துடன் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்

பிகில் வெற்றியை வெங்காயத்துடன் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigil posterஅட்லி இயக்கத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்த பிகில் படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது.

இப்படம் உலகளவில் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிகில் பட வெற்றியைக் கொண்டாடிய நாகை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கி கொண்டாடியுள்ளனர்.

மேலும் 30-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக கிலோ கணக்கில் வெங்காயம் வழங்கி கொண்டாடியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 44வது படம்; டைரக்டர் யார்..?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 44வது படம்; டைரக்டர் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush 44ரஜினியின் எந்திரன், பேட்ட, விஜய்யின் சர்கார், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

தற்போது ரஜினி நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தை தயாரிக்கிறது.

இதனையடுத்து தனுஷ் நடிப்பில் அவரது 44வது படத்தை தயாரிக்கவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகரை திட்டிவிட்டு ரசிகைக்கு வளைகாப்பு நடத்திய ரஜினி

ரசிகரை திட்டிவிட்டு ரசிகைக்கு வளைகாப்பு நடத்திய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthதன் ரசிகரின் மனைவிக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்தியுள்ளார் ரஜினிகாந்த். அந்த சுவாரஸ்ய தகவல் இதோ…

சென்னையை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ். இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இவர்களின் குடும்பமே ரஜினி ரசிகர்கள் தானாம்.

இந்த தம்பதிக்கு கடந்த பிப்ரவரியில் திருமணம் நடைபெற்றுள்ளது.

அதன்பின்னர் கர்ப்பமான அவரது மனைவியிடம் ஏதாவது ஆசையிருக்கிறதா? என கேட்டுள்ளாராம்.

ரஜினியை சந்திக்க வேண்டும் என மனைவி கூற அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் ரசிகர். ரஜினி ஆசி வேண்டும் என்பதற்காக தன் மனைவி கர்ப்பமானதை உறவினர்களிடம் கூட தெரிவிக்கவில்லையாம்.

பல கட்டங்களை தாண்டி இவரின் ஆசை ரஜினிக்கு தெரிய வந்துள்ளது.

அதற்குள் ஜெகதீஸ்வரிக்கு 9வது மாதம் ஆகிவிட்டதாம். இதனையறிந்த ரஜினி, அந்த ரசிகரை திட்டிவிட்டு உடனே வாங்க என அழைத்திருக்கிறார்.

அதன்பின்னர் அவர்களை ஆசிர்வதித்து அவர்கள் கொண்டு சென்ற வளையல்களை அணிவித்துள்ளார் ரஜினி.

தற்போது இந்த போட்டோக்களை ரசிகர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

More Articles
Follows