நச்சுன்னு நாலு பாட்டு..; டிசம்பர் 7ல் தர்பார் பாடல்கள் ரிலீஸ்

நச்சுன்னு நாலு பாட்டு..; டிசம்பர் 7ல் தர்பார் பாடல்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar rajiniசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

அண்மையில் சும்மா கிழி… நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு என்ற பாடல் வெளியாது. இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் வரும் 7ல், சென்னை, நேரு ஸ்டேடியத்தில், மாலை 5:00 மணிக்கு, பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் 4 பாடல்கள் + ஒரு தீம் மியூசிக் இடம்பெற்றுள்ளது.

சும்மா கிழி, கண்ணம்மா, ஷோ தி தர்பார், நீதி என 4 பாடல்கள் உள்ளது. இதில் 2 பாடல்கள் 3 நிமிடத்திற்கு குறைவாகவும் மற்ற இரு பாடல்கள் 4 நிமிடத்திற்கு குறைவாக உள்ளன.

‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து டிகன்கனா சூர்யவன்ஷி!

‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து டிகன்கனா சூர்யவன்ஷி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹிப்பி’ என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலாக நடித்த டிகன்கனா சூர்யவன்ஷியின் அழகு தோற்றமும், எல்லைகளைக் கடந்த தன்னிச்சையான நடிப்பும் ரசிகர்களை அச்சரியத்தில் மூழ்கடித்தன. தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் டிகன்கனா சூர்யவன்ஷியின் தமிழ்ப்பட அறிமுகம் குறித்து சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக ஆவலோடு காத்திருக்க, இப்போது ஹரீஷ் கல்யாணுடன் அவர் இணைந்து நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ படம் வெளியாவது குறித்து அகமகிழ்ந்திருக்கின்றனர். பகட்டான அழகுப் பதுமையான டிகன்கனா ஹரீஷ் கல்யாணுடன் வெண்திரையைப் பகிர்ந்துகொண் டிரைலர் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து மழையில் அவரை நனையச் செய்யத் தொடங்கினர். எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடனும் பரபரப்புடனும் காணப்படும் டிகன்கனா சூர்யவன்ஷி படம் குறித்து என்ன சொல்கிறார்…?

“‘தனுசு ராசி நேயர்களே’ டிரைலர் வெளியான பிறகு தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் தொடர்ந்து என் மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். விலை மதிக்க முடியாத இந்தப் பரிசு எனக்கு மிகுந்த வலிமையைத் தருகிறது. இதற்காக நான் தயாரிப்பாளர் கோபாலன் சார் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக தமிழில் அவர்கள் தயாரித்த முதல் படத்திலேயே என்னையும் பங்கு பெறச் செய்தது, எனக்கு உண்மையில் மிகப் பெரிய விஷயம்.
‘தனுசு ராசி நேயர்களே’ தனக்கு முதல் படமாக இருந்தாலும் இயக்குநர் சஞ்சய் பாரதி, பரந்த மனதுடன் என்னைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். தனது பணி குறி்தது மகத்தான தெளிவுடன் அவர் பணியாற்றிய விதம், முதிர்ந்த காட்சிகளாக படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றியது ஒரு சுவையான அனுபவம். அற்புதமான குணங்களைக் கொண்ட அவர் ஓர்அருமையான சக நடிகர். மிக அமைதியாக, தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது பணியில் மட்டுமே மிகவும் கவனம் செலுத்துபவர். படப்பிடிப்புக்கிடையே எனக்கும் அவருக்கும் எந்தவொரு சிறு பிணக்கும் ஏற்படவில்லை. படப்பிடிப்பு மொத்தமும் மிக இனிமையாகக் கழிந்தது. ரெபா மோனிகா ஜானுடன் எனக்கு படத்தில் மிகச் சில காட்சிகள் மட்டுமே உண்டு. இனிமையான பெண்மணியான இவருடன் படப்பிடப்பின் இடையே கிடைக்கும் நேரத்தில் அரட்டை அடிப்பதுண்டு. மொத்தத்தல் இப்படத்தில் நடத்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து, நன்கு கவனித்துக் கொண்டார்கள். 5 ஸ்டார் செந்தில் சார் தனுசு ராசி நேயர்களே படத்தை தேர்வு செய்து வாங்கி, மிகப் பெரிய அளவில் வெளியிடுவது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜிப்ரான் சாரின் இசை படத்துக்கு மேலும் மெருகூட்டுவதுடன், படத்தை மேலும் வண்ணமயமாக்கி இளைஞர்களை ஈர்க்கும் என்பது உறுதி” என்றார் டிகன்கனா சூர்யவன்ஷி.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்துக்காக கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் ஹரீன் கல்யாண், டிகன்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான், ரேணுகா, முனீஷ்காந்த், டேனியல் ஆன் போப், பாண்டியராஜன் மற்றும் மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

கமல் ஓகே.; ரஜினி என்ன ஆளுமையா.? சீண்டும் சீமான்

கமல் ஓகே.; ரஜினி என்ன ஆளுமையா.? சீண்டும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naam Tamilar Katchi Seeman slams Rajinikanth againநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் பேட்டியில் தமிழகத்தின் விவாதப் பொருளான ஆளுமை குறித்து பேசியுள்ளார்.

அதில் கடுமையாக ரஜினியை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளுமை இல்லை என்கிறார் ரஜினி. சினிமாவில் என்ன ஆளுமை செய்துள்ளார் ரஜினி.

படத்தில் நடிக்கிறார் அவ்வளவுதான். ஒரு பாடல் எழுதிருப்பாரா? இயக்கியிருப்பாரா? அவரே எல்லாம் செய்து ஒரு படத்தை ஓட வைக்க முடியுமா?

தற்போது முன்னணியில் உள்ள நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்களுடன் படம் செய்கிறார் அவ்வளவுதான்.

கமல் கூட சொல்லலாம். அவர் படம் தயாரித்துள்ளார். இயக்கியுள்ளார். பாடல் எழுதி பாடியுள்ளார்.

என ரஜினியின் ஆளுமை குறித்து விமர்சித்துள்ளார் சீமான்.

Naam Tamilar Katchi Seeman slams Rajinikanth again

ச்சே.. மீனாவா இப்படி.? 18+ என்ற பெயரில் கரோலின் காமாட்சி அட்டகாசம்

ச்சே.. மீனாவா இப்படி.? 18+ என்ற பெயரில் கரோலின் காமாட்சி அட்டகாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meenas bad words in Karoline Kamakshi web seriesதிரைப்படங்கள், குறும்படங்களை போல தற்போது வெப் சீரிஸ்களும் பிரபலமாகி வருகின்றன.

இதில் ஜீ-5 என்ற நிறுவனம் தொடர்ந்து தமிழில் வெப்சீரிஸ்களை தயாரித்து வருகிறது.

ஆட்டோ சங்கர், திரவம் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரிக்க அந்த படங்கள் ஆபாசமாக உள்ளதாக சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மீனா நடிப்பில் கரோலின் காமாட்சி என்ற வெப் சீரியஸை தயாரித்துள்ளது.

இந்த டிரைலர் சமீபத்தில் வெளியானது.

சினிமாவுக்கு சென்சார் இருப்பது போல வெப் சீரிஸ்களுக்கு இல்லை என்பதால் 18+ வயதுள்ளவர்களே முகம் சுழிக்கும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளை வைத்துள்ளனர்.

அதற்கு படக்குழுவினரும் இந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது. இதனையே இந்த படத்தில் நடித்துள்ள ஒய்.ஜி. மகேந்திரனும் மேடையில் கூறிவருகிறார்.

நடிகை மீனா ஒரு குடும்ப பாங்கான நடிகை. அவருக்கென்று ஒரு நல்ல இமேஜ் உள்ளது. ஆனால் இந்த வெப் சீரிஸ் அவரின் இமேஜ்ஜை டேமேஜ் ஆக்கும் எனத் தெரிகிறது.

Meenas bad words in Karoline Kamakshi web series

https://www.youtube.com/watch?v=8T4EFOLGy5A&feature=emb_logo

ரஜினியை சந்தித்த தளபதி 64 பட டைரக்டர்.; இதான் காரணமா?

ரஜினியை சந்தித்த தளபதி 64 பட டைரக்டர்.; இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 64 director Lokesh Kanagaraj met Rajini in Poes Gardenமாநகரம், கைதி உள்ளிட்ட படங்ஙகளை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இந்த இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது விஜய் & விஜய்சேதுதி இணைந்து நடித்து வரும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார்.

இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கர்நாடாகாவில் துவங்கவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அப்போது கைதி படத்தை ரஜினி பாராட்டினாராம்.

இருந்த போதிலும் ரஜினி படத்தை லோகேஷ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகிறது.

Thalapathy 64 director Lokesh Kanagaraj met Rajini in Poes Garden

அனுதாபத்துல செய்யாதீங்க.. பிடிச்சா செய்யுங்க..; திருமூர்த்தி பற்றி இமான்

அனுதாபத்துல செய்யாதீங்க.. பிடிச்சா செய்யுங்க..; திருமூர்த்தி பற்றி இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dont spread Seeru movie Sevandhiyae song by sympathy says Imman‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை முன்பு பார்வையற்ற இளைஞரான திருமூர்த்தி அருமையாக பாடியிருந்தார்.

இது இணையத்தில் வைரலாக அந்த பாடலுக்கு இசையமைத்த இமானும் பார்த்துள்ளார்.

எனவே தனது இசையில் பாட திருமூர்த்தியை தேர்ந்தெடுத்து ஜீவா நடித்து வரும் ‘சீறு’ படத்தில் ஒரு பாடலை பாட வைத்துவிட்டார்.

‘செவ்வந்தியே…’ என தொடங்கும் அந்த பாடல் வெளியாக அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்த பாடல் குறித்து இமான் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

உண்மையிலேயே இந்த பாடல் பிடிச்சிருந்தால், இவரின் குரல் பிடிச்சிருந்தால் ஷேர் பண்ணுங்க. அனுதாபத்தால் ஷேர் செய்ய வேண்டாம்.

இந்தப் பாடல் வெற்றி மூலம்தான் அவருக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வரும். அப்போதுதான் மற்ற இசையமைப்பாளர்களும் இவரைப் பாட வைப்பார்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dont spread Seeru movie Sevandhiyae song by sympathy says Imman

https://twitter.com/immancomposer/status/1201486294783647744

More Articles
Follows