சூர்யாவுக்கு புஷ்பா நன்றி… வழக்கை வாபஸ் பெற்ற வாலிபர்..!

சூர்யாவுக்கு புஷ்பா நன்றி… வழக்கை வாபஸ் பெற்ற வாலிபர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Complaint against Suriya withdrawn after woman comes forwardதன் மீது தவறு இல்லாதபோதும், ஒரு பெண் முன்னிலையில் பொது இடத்தில் தன்னை நடிகர் சூர்யா அடித்துவிட்டதாக பிரேம்குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனால், சூர்யாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

இதனிடையில் அச்சம்பவத்தில் இடம் பெற்ற பெண்ணான புஷ்பா கிருஷ்ணசாமி தன் ட்விட்டர் பக்கத்தில்

”என்னிடம் தவறாக நடக்க முயன்ற அந்த இளைஞர்களிடம், தன்னை காப்பற்றியதற்கு நன்றி” எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நிறைய பின்னணி சம்பவங்கள் நடந்திருந்தாலும் தற்போது சூர்யாவும், பிரேம்குமாரும் சமரசம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே சூர்யாவிற்கு எதிராக கொடுத்த வழக்கை வாபஸ் பெற்று விட்டாராம் பிரேம்குமார்.

தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

Suriya Case

விஜய்சேதுபதியுடன் இணையும் சிபிராஜ்-ஜிவி பிரகாஷ்..!

விஜய்சேதுபதியுடன் இணையும் சிபிராஜ்-ஜிவி பிரகாஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Sibiraj Joins Hands with VIjay Sethupathiஇன்று ஜூன் 1ஆம் தேதி இரண்டு படங்களின் டீசர் மற்றும் இரண்டு பட ட்ரைலர் வெளியீடு நடக்கவிருக்கிறது.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி-தமன்னா இணைந்துள்ள தர்மதுரை பட டீசர் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிக்க, யுவன் இசையமைத்துள்ளார்.

இதனையடுத்து, அம்மன், அருந்ததி புகழ் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள சிவநாகம் படத்தின் டீசரும் இன்று வெளியாகிறது.

இந்த இரண்டு டீசர்களை தொடர்ந்து, சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்-ஆனந்தி இணைந்துள்ள எனக்கு இன்னொரு பேரு இருக்கு பட ட்ரைலர் வெளியாகிறது.

இதைப்போலவே, சத்யராஜ்-சிபி ராஜ் இணைந்து நடிக்கும் ஜாக்சன் துரை பட ட்ரைலரும் இன்று வெளியாகிறது.

தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

‘ஒரு நாள் கூத்து’க்காக காத்திருக்க வைத்த மியா-ரித்விகா..!

‘ஒரு நாள் கூத்து’க்காக காத்திருக்க வைத்த மியா-ரித்விகா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Nelson Venkatesan Speech at Oru Naal Koothu Press Meet!கெனன்யா பிலிம்ஸ் சார்பாக செல்வக்குமார் தயாரித்திருக்கும் படம் ஒரு நாள் கூத்து.

நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் தினேஷ் உடன் மியா ஜார்ஜ், ரித்விகா, நிவேதா பெத்துராஜ் ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர்.

மேலும் கருணாகரன், பாலசரவணன், ரமேஷ்திலக், சார்லி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் பெரும் ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் இயக்குனர் நெல்சன் பேசும்போது…

“நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரிந்தது இல்லை. எனது முதல் படமே இதுதான்.

இப்படத்தின் கதை ஆசிரியர் எனது தமிழ் ஆசிரியர்தான். நான் அவருடைய மாணவர். எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருந்தது.

திருமணம் பற்றி பலருக்கும் பல சிந்தனைகள் இருக்கும். ஒருவரது வாழ்க்கையே திருமணத்தால் மாறிவிடும்.

இப்படத்தில் நடிக்க மியா ஜார்ஜ் மற்றும் ரித்விகாவை சந்தித்து பேசினோம். இருவரும் ஓகே சொன்னாலும் கால்ஷீட் தரவில்லை. அவர்களுக்காக ஆறு மாதங்கள் காத்திருந்தோம்.” என்றார்.

பாகுபலியை நெருங்கும் ‘கபாலி..’ நெருப்புடா…!

பாகுபலியை நெருங்கும் ‘கபாலி..’ நெருப்புடா…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth's Kabali Huge Pre-Release Businessகபாலி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வர அப்படத்தின் மீதான ஆர்வமும் அதிகமாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலாய் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகவிருப்பதால் இந்தியா தாண்டியும் இதன் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதாம்.

மேலும் மற்ற நாடுகளிலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதால் மற்ற மொழிகளிலும் வெளியிடலாமா? என தயாரிப்பு தரப்பு யோசித்து வருகிறது.

மற்ற ரஜினி படங்களை காட்டிலும் கபாலி வேறு ஒரு பாதையில் பயணிப்பதால், நிச்சயம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்கின்றனர் கோலிவுட் வல்லுனர்கள்.

இதன் வியாபாரமும் விண்ணைத் தொடும் அளவில் இருப்பதால், இதன் வியாபாரம் மற்றும் வசூல் ‘பாகுபலி’ படத்தை நெருங்கும் என கூறப்படுகிறது.

கபாலி பயம்: அஜித்-சிம்பு நிலைமையை பார்த்து ஒதுங்கிய சிவகார்த்திகேயன்..!

கபாலி பயம்: அஜித்-சிம்பு நிலைமையை பார்த்து ஒதுங்கிய சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan's 'Remo' 1st Look Postponedசூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. இவரது படங்கள் வெளியாகும் நாளில் மற்ற படங்களை வெளியிடவே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.

இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை சொல்லலாம்.

மேலும் சமீபத்தில் கூட கபாலி டீசர் வெளியான நாள் அன்று அஜித்தின் பிறந்தாளும் சிம்பு படம் பற்றிய அறிவிப்பும் வெளியானது.

ஆனால் கபாலி செய்த ட்ரெண்டிங்கால் மற்றவை காணாமல் போனது.

இந்நிலையில், வருகிற ஜூன் 9ஆம் தேதி கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது.

அதே நாளில், சிவகார்த்திகேயன் தன் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடவிருப்பதாக அறிவித்து இருந்தார்.

ஆனால் கபாலி ஏற்படுத்திய பயத்தால், நாம் ஒதுங்கி கொள்வதே நல்லது என்று முடிவு எடுத்த, சிவகார்த்திகேயன் தனது பர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளி வைத்துவிட்டாராம்.

Simbu to do a ‘mature role’

Simbu to do a ‘mature role’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor SimbuEven as his Friday release ‘Idhu Namma Aalu‘ evoking mixed response from critics and audience, Simbu is busy with a bunch of movies, including Gautham Vasudev Menon’s ‘Achcham Yenbadhu Madamaiyada’ and Adhik Ravichandran ‘AAA’.

In the meantime, the actor, who was set to act in the remake of Telugu blockbuster ‘Temper’ to be directed by Vijay Chander of ‘Vaalu’ fame, has dropped the project after there were problems in obtaining its rights.

However, he has come forward to be part of a fresh script being penned by the same director. Confirming the development, Vijay Chander says, “Yes, I am writing a new script and Simbu will be seen in a mature role in it.”

Shooting for the movie, which is yet to be titled, will commence in August. “Simbu will simultaneously work in ‘AAA’ and in my movie,” the filmmaker says, adding that it would be totally different from their earlier venture ‘Vaalu’.

More Articles
Follows