கோலிவுட்டை தாண்டி பாலிவுட் செல்லும் விக்ரமின் ’கோப்ரா’

கோலிவுட்டை தாண்டி பாலிவுட் செல்லும் விக்ரமின் ’கோப்ரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cobra vikramவிக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படம் ’கோப்ரா’.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரே இதன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இப்பட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்ற போது கொரோனா ஊரடங்கால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

உடனடியாக படக்குழுவினர் நாடு திரும்பினார். கொரோனா பிரச்சினைக்கு பிறகு இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ’கோப்ரா’ பட ஹிந்தி உரிமையை கோல்டு மைன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் ஹிந்தி டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐ, ’ராவண்’ மற்றும் ‘டேவிட்’ ஆகிய படங்களின் மூலம் ஹிந்தியில் விக்ரம் பிரபலமானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

ஆந்திர முதல்வரை சந்தித்த சிரஞ்சீவி – நாகார்ஜுனா – ராஜமவுலி

ஆந்திர முதல்வரை சந்தித்த சிரஞ்சீவி – நாகார்ஜுனா – ராஜமவுலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jagan mohan reddyகொரோனா தொற்று பரவலை தடுக்க நாடெங்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதே சமயத்தில் சில தளர்வுகளுடன் தொழில் நிறுவனங்கள் திறக்க அரசு அனுமதியளித்து வருகிறது.

நமது பக்கத்து மாநிலமான தெலங்கானாவில் சினிமா சூட்டிங் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி தலைமையில் தெலுங்கு திரைப்படநடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், தில்ராஜு உள்ளிட்டோர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துள்ளனர்.

அதன் பின்னர் சிரஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது:

தெலங்கானாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வரும் 15ம் தேதிக்கு பிறகு ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.

சினிமாவை காப்பாற்ற சில சலுகைகளை முதல்வரிடம் கேட்டிருக்கிறோம்.

பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும்போது நாங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்வது, தியேட்டர்களுக்கு மின் கட்டண சலுகை, வரி குறைப்பு, சிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

NAKED TRAILER.. ராம்கோபால் வர்மாவுக்கு சவால் விடும் ‘PUBG’ விஜய் ஸ்ரீ

NAKED TRAILER.. ராம்கோபால் வர்மாவுக்கு சவால் விடும் ‘PUBG’ விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sri gகமலின் அண்ணன் சாருஹாசன் 87 வயதில் ஹீரோவாக நடித்த ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ.

ஒரு திருநங்கையின் காதலை மையப்படுத்தியும் ஒரு வயதான தாதா கேரக்டரையும் மையப்படுத்தியும் இருந்தார்.

தற்போது இவரின் 2வது படமாக ‘பீட்ரூ’ என்ற படம் உருவாகி வருகிறது.

இதில் அம்சவர்தன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இத்துடன் தற்போது ஐஸ்வர்யா த்த்தாவை நாயகியாக வைத்து ‘PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா தத்தா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் பிக்பாஸ் ஜுலி, அனிதா, ரித்திகா சரண் என பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில், ஐஸ்வர்யா தத்தா நிர்வாண கோலத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவரும் யூகிக்க முடியாத அளவில் இந்த கதையினை உருவாக்கியிருக்கிறாராம் விஜய்ஸ்ரீ ஜி.

இந்த ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான ராம்கோபால் வர்மாவின் NAKED TRAILER படத்திற்கு ஒரு சவால் விட்டுள்ளார்.

உங்கள் படங்களை பார்த்திருக்கிறோம். நீங்கள் தைரியமான ஆள். எங்க ‘PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) டீசருக்கு காத்திருங்கள்.. நீங்களே பாராட்டுவீர்கள் என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே NAKED TRAILER பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இதில் அந்த ஆபாச படத்திற்கு விஜய்ஸ்ரீ சவால் விடுகிறார் என்றால்… இவரின் டீசர் எப்படி இருக்குமோ…?

டைரக்டர் பாலா மரணம்..; மூன்று படங்கள் ரிலீசுக்கு ரெடி

டைரக்டர் பாலா மரணம்..; மூன்று படங்கள் ரிலீசுக்கு ரெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bala aka Balamithran passed away“உடுக்கை” பட இயக்குனர் பாலா என்ற பால மித்திரன் நேற்று 09.06.2020 காலமானார். இவர் இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.

இவர் இயக்கி வந்த “உடுக்கை” படம் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரமே மீதி உள்ளது.

இந்த நிலையில் வாதம் நோயால் பாதிக்கப்பட்டு, சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல்நிலை மேலும் மோசமாக, பண வசதியில்லா காரணத்தால் இயக்குனர்கள் சங்கம் மூலமாக காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

தற்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இவரின் உடல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்”, “கள்வர்கள்” என் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் இவையிரண்டு வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

மறைந்த இயக்குனர் பாலா என்ற பால மித்திரன் வயது 39.

மனைவி மற்றும் பெண் குழந்தை ஒன்றும், ஆண் குழந்தை ஒன்றும் அவரது வாரிசுகளாக இருக்கிறார்கள்.

Director Bala aka Balamithran passed away

Director Bala aka Balamithran passed away

 

கோலிவுட் Vs பாலிவுட்; நட்டியிடம் மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்

கோலிவுட் Vs பாலிவுட்; நட்டியிடம் மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Anurag Kashyap says sorry to Actor Nattyநடிகர், ஒளிப்பதிவாளர் என தமிழக ரசிகர்களிடையே பிரபலமானவர் நட்டி என்ற நடராஜன்.

விஜய்யின் யூத், புலி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் பரமக்குடியில் பிறந்த நட்டி, பாலிவுட் சினிமாவில் தான் தன் திரைப்பயணத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஓரிரு தினங்களாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை Anurag kashyab கடுமையாக சாடினார்.

அவர் ஒரு முட்டாள் என்றும் முட்டாள் எப்போதும் முட்டாளாகத் தான் இருப்பான் என பேசியிருந்தார்.

அனுராக் கஷ்யப் இயக்கத்தில் வெளியான பிளாக் ஃப்ரைடே படத்தின் ஒளிப்பதிவாளர் நட்டி. அதன் பிறகு இருவரும் இணையவில்லை.

இவர்கள் இருவரும் பாலிவுட்டில் பணிபுரிந்த மிகவும் நெருக்கமானவர்கள் என்பது பலரும் அறிந்ததே.

தற்போது இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார் அனுராக்.

தவறு என்மீதே உள்ளது. நட்டி எனக்கு ஆசான் போன்றவர்.

என்னை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே நட்டி நட்ராஜ் தான்.

என்னை இயக்குநர் பாலாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் அவர் தான் என்னை ரஜினி சாரை சந்திக்க வைத்தார்.
அவருக்கு உதவ வேண்டிய நேரத்தில் நான் அவருடன் இல்லாமல் போய்விட்டேன்.

நட்டி என்னை மன்னித்துவிடு…. என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார் அனுராக்.

தமிழில் நயன்தாரா, அதர்வா, விஜய்சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார் அனுராக் காஷ்யப் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Anurag Kashyap says sorry to Actor Natty

ஆடியோ விவகாரம்.: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் குஷ்பூ

ஆடியோ விவகாரம்.: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushbooகொரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த டிவி சூட்டிங் கிட்டதட்ட 70 நாட்களுக்கு பிறகு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சூட்டிங் ஸ்பாட் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான நடிகை குஷ்புவின் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியது என்பதை பார்த்தோம்.

அதில்.. “ப்ரஸ்காரர்கள் எங்கிருந்தாவது வந்துவிடுவார்கள். போட்டோ, வீடியோ எடுத்துக் கிழிப்பதற்கு என்று எங்கியிருந்தாவது வருவான். உட்கார்ந்து கொண்டிருப்பான்.

கோவிட் (கொரோனா) தவிர்த்து ப்ரஸ்காரனுக்கு வேறு எந்தவொரு செய்தியுமே கிடையாது. நம்மைப் பற்றி ஏதாவது போடுவதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள்.” இவ்வாறு ஒருமையில் மீடியாக்களை பற்றி பேசியிருந்தார் குஷ்பு.

இந்த ஆடியோ பத்திரிகையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் குஷ்பூ கூறியிருப்பதாவது:

“நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து சென்றிருக்கிறது.

எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

ஊடகங்களை அவமதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அப்படி பேசவில்லை. அது நண்பர்களிடம் நாம் பேசும் முறைதான்.

ஊடகங்கள் மீதான என் மதிப்பு அனைவருக்கும் தெரியும்… பத்திரிகையாளர்கள் (சிலர்) அதற்கு சாட்சி.

திரைத்துறையில் இந்த 34 வருடங்களில் ஒரு முறை கூட நான் அவர்களிடமோ, அவர்களைப் பற்றியோ நான் மரியாதைக் குறைவாகப் பேசுவதை அவர்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டார்கள்.

அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக உள்ளது. ஆனால் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

என தெரிவித்துள்ளார் குஷ்பூ.

மேலும்…. துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் யாருக்காக பணிபுரிகிறீர்களோ அவர்கள்தான் உங்களை முதுகில் குத்த முயல்கிறார்கள்.

எந்தத் தயாரிப்பாளர் இதைச் செய்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால், யாரென்று நான் சொல்ல மாட்டேன். எனது அமைதியும், மன்னிப்புமே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன.

இவ்வாறு குஷ்பூ பதிவிட்டுள்ளார்.

Khushboo apologizes for her Audio voice about Journalists

More Articles
Follows