ஹீரோ யார்..? சிவகார்த்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்

sivakarhtikeyan and vijay devarakondaமிஸ்டர் லோக்கல் படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதன் பின்னர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவாகார்த்திகேயன்.

இப்பட பூஜை நேற்று போடப்பட்டது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“நான் காக்கா முட்டை படத்துக்கு வசனம், குற்றமே தண்டனை படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளேன்.

தற்போது என் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஹீரோ படத்தை இயக்க இருக்கிறேன்.

படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இப்பட தலைப்பை ஒரு வருடத்திற்கு முன்பே பதிவு செய்துள்ளேன்.

ஆனால் திடீரென்று சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹீரோ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஹீரோ தலைப்பு எங்களுக்கே சொந்தம். யாருக்கும் விட்டுத்தர முடியாது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுதவுள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Overall Rating : Not available

Related News

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவின்…
...Read More
மிஸ்டர் லோக்கல் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன்…
...Read More
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள…
...Read More

Latest Post