கௌதம் ஷிவத்மிகா வெண்பா இணையும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’..; நெகிழ்ந்து பாராட்டும் ஒளிப்பதிவாளர்

கௌதம் ஷிவத்மிகா வெண்பா இணையும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’..; நெகிழ்ந்து பாராட்டும் ஒளிப்பதிவாளர்

Bala Baraniநடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.

40 க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திர கூட்டத்துடன், குடும்ப சித்திரமாக உருவாகி வரும் இப்படத்தை ‘மிக மிக அவசரம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ படங்களின் ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

குடும்ப படங்களை தனித்துவமான ஒளியமைப்புடன், வடிவமைப்பதில் புகழ்பெற்ற அவர் இப்படம் அனைவர் நெஞ்சங்களையும் ஈர்க்கும் படைப்பாக இருக்குமன்று பாராட்டியுள்ளார்.

படம் குறித்து ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி கூறியதாவது…

மிக மிக சந்தோஷமான தருணம் என்னெவெனில் நான் வளர்ந்த இடத்தில் நான் புழங்கிய தெருக்களில் படப்பிடிப்பு நடத்துவதுதான்.

திண்டுக்கல் எனது சொந்த ஊர் இப்போது “ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு முழுதும் அங்கே தான் திட்டமிட்டு நடத்திவருகிறோம்.

நான் வளர்ந்த இடத்தில் எனக்கு தெரிந்த வாழ்க்கையை படமாக்குவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இதற்கு முன் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கு நடத்தினோம்.

ஆனால் இப்போது முழுப்படமும் இங்கே படப்பிடிப்பு நடத்துகிறோம்.

இயக்குநர் நந்தா பெரியசாமி பல வருடங்களாக எனது நெருங்கிய நண்பர். இந்தக்கதை குறித்து பல முறை என்னிடம் விவாதித்துள்ளார். மிக அழகான குடும்பக்கதை.

படமாக்கும்போதே கண்களில் கண்ணீர் தேங்கும், பல ஆழமான, நெகிழ்வான தருணங்கள் படத்தில் இருந்தது. கண்டிப்பாக குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் வெற்றிப்படமாக இப்படம் இருக்கும்.

40 க்கும் மேற்பட்ட நட்டத்திர நடிகர்களுடன் 50 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை முடிக்க, படக்குழுவுடன் இணைந்து திட்ட்டமிட்டோம்.

இந்த கடினமான சூழலில் படப்பிடிப்பு மிக சவாலானாதா இருந்தது. இதற்கு முன் பெரும் நட்சத்திர கூட்டத்துடன் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் படங்கள் செய்த அனுபவம் உதவியாக இருந்தது.

மேலும் நான் ஒளிப்பதிவாளர் MS பிரபு அவர்களிடம் உதவியாளராக மகாநதி முதல் ரமணா வரை பெரிய படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தது மிக சிறந்த அனுபவ பாடங்களை கற்றுதந்திருந்தது.

இப்படத்தை தயாரிப்பாளரை மகிழ்விக்கும் வகையில், திட்டமிட்ட பொருட்செலவில், இயக்குநரின் விருப்பப்படி மிக அழகாக படமாக்கியிருக்கிறேன்.

இது வரையிலும் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் பணியாற்றியுள்ளேன். “ஆனந்தம் விளையாடும் வீடு” அதில் தனித்துவமான படமாக இருக்கும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, பொர்ரா பால பரணி ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது.

Cinematographer Bala Barani about his current work in Anandham Vilayadum Veedu

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *