ஈசன் இயக்கத்தில் ‘ஈடாட்டம்’.: போதை அடிமைகளின் உளவியலை சொல்லும் படம்

ஈசன் இயக்கத்தில் ‘ஈடாட்டம்’.: போதை அடிமைகளின் உளவியலை சொல்லும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஈடாட்டம்’ (EDATTAM)

சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகர் ஸ்ரீகுமார் (Shreekumar) கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஈடாட்டம்’ (EDATTAM ) எனும் திரைப்படம்.

இதில் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களின் உளவியலை புதுமையான கோணத்தில் அணுகி இருப்பதாக பட குழுவினர் பிரத்தியேகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதை களத்திற்கும், புதுமையான கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே உண்டு என்பதை நன்கறிந்து தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஈடாட்டம்’.

இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஈசன் (ESAN ). இப்படத்திற்கான திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை மற்றும் வசனத்தை கஜபதி (GAJABATHI )எழுதி இருக்கிறார்.

இதில் ஸ்ரீகுமார், நடிகர் ராஜ சூர்யா (RAJA SURYA) நடிகைகள் வெண்பா (VENBA), அனு கிருஷ்ணா (ANU KRISHNA), தீக்ஷிகா (DHIKSHIKA), விஜய் விசித்திரன் (VISITHIRAN ), ‘காதல்’ சுகுமார் (KADHAL SUKUMAR ), பவர் ஸ்டார் (POWER STAR ), ‘பூவிலங்கு’ மோகன்(POOVILANKU MOHAN ), புலிக்குட்டி, விஜய் சத்யா, சாந்தி ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜேசன் வில்லியம்ஸ் (JASON WILLIAMS ) ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜான் பீட்டர் (JOHN PETER )இசையமைத்திருக்கிறார். ஜென் முத்துராஜ் (ZEN MUTHURAJ )படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை செந்தில் (SENTHIL ) மேற்கொண்டிருக்கிறார்.

புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஈசன் மூவிஸ் (ESAN MOVIES )எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்தி அருண் கேசவன் (SAKTHI ARUN KESAVAN )தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” கதையின் நாயகனான சரவணன், யாஷிகா என்ற பணக்கார பெண்மணியின் வீட்டில் கார் டிரைவராக குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகிறார்.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், பணத் தேவைக்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார். பிறகு பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் தொடங்குகிறார்.

இந்த சூழலில் மூவர் கொலை செய்யப்படுகிறார்கள். அதிலிருந்து அவர் தப்பிக்கிறாரா என்பதே கதை.சுவராசியம் குறையாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது.

CAST : Sreekumar, Raja Surya, Dhikshika, Venba, Anu Krishna, power star, kadhal sukumar,Visithiran, Vijaisathya, Pulikutti, Poovilanku Mohan, Santhi Anandh

Story and direction -ESAN
Dialogue, Screenplay, and Direction supervisor : Gajabathi
Producer-Sakthi Arun Kesavan
Music : John Peter
Dop- Jason williams
Editing :Zen muthuraj
ART-Senthil
Lyricst- illaya kamban,John Peter
Stunt- Suresh harse Babu
Playback singer-Grace Karunas,Karthik,Swetha Mohan,VELS
Choreographer-Radhiga,Ramesh Kamal
PRO-SIVAKUMAR

ஈடாட்டம்

EDATTAM movie story line and updates

சிறையில் வாடிய 26 கைதிகளுக்கு தலா ரூ 25 லட்சம் வழங்கிய ‘லைகா’ சுபாஸ்கரன்

சிறையில் வாடிய 26 கைதிகளுக்கு தலா ரூ 25 லட்சம் வழங்கிய ‘லைகா’ சுபாஸ்கரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஒவொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய்கள் உதவித்தொகை வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார் லைக்கா குழும தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமாகிய சுபாஸ்கரன் .

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாய்களை விடுதலை செய்யப்பட்ட 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கடந்த செவ்வாய்கிழமை (06.06.23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார்.

சுபாஸ்கரன்

இந்த நிகழ்வில் லைக்கா குழும உப தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது .

இலங்கை ஜனாதிபதியுடன் விசேட சந்திப்புகளை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் அழுத்தங்களை பிரயோகித்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அயராது பாடுபட்டு லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விடுதலைக்கு வழிவகை செய்துள்ளார்.

சுபாஸ்கரன்

பல்லாண்டுகாலமாக சிறையில் வாடிய கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தலா 25 லட்சம் ரூபாய்களை தனது தாயார் திருமதி ஞானாம்பிகையின் பெயரில் இயங்கி வரும் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் மொத்தம் 6 1/2 கோடி ரூபாய்களை வழங்கியுள்ளார்.

சுபாஸ்கரன்

Lyca Subaskaran donated Rs 25 lakhs for 26 prisoner

இசையில் மூழ்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் குடும்பம்

இசையில் மூழ்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ‘ஆந்தாலஜி’ தொகுப்பின் ஒரு பகுதியான ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ‘லோனர்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம்.

இவர் இயக்கத்தில் தயாரான ‘மின்மினி’ திரைப்படம் 2015-ல் தொடங்கப்பட்டது.

இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது.

2014-ம் ஆண்டு குழந்தைப்பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015-ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு ‘மின்மினி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ‘மின்மினி’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை கதீஜா பாடியிருந்தார்.

சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலையும் கதீஜா பாடியுள்ளார்.

ஏற்கனவே, ‘ஒகே கண்மணி’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மகன் ஏ.ஆர்.அமீன் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இதன் மூலம், ஏ.ஆர்.ரகுமான் , ஏ.ஆர்.ரகுமானின் மகன், ஏ.ஆர்.ரகுமானின் மகள் என ஏ.ஆர்.ரகுமானின் குடும்பத்தில் இசையமைப்பாளராக இசையில் மூழ்கிய உள்ளனர்.

khadija rahman will debut as a music director in minmini movie

அதிதி ராவ் ஹைதாரி உடனான காதலை உறுதிப்படுத்திய நடிகர் சித்தார்த்

அதிதி ராவ் ஹைதாரி உடனான காதலை உறுதிப்படுத்திய நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவிவருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மகாசமுத்திரம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அந்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் டான்ஸ் ஆடுவது, பாட்டுப்பாடுவது, சினிமா நிகழ்ச்சி, முக்கிய நடிகர்களின் திருமணம், வரவேற்பு என பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகச் சென்று அது குறித்தான புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ‘டக்கர்’ பட புரமோட் செய்யும் விதமாக ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் சித்தார்த் கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் யாருடன் என்றென்றும் பாடிக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். கேட்டார்.

அதற்கு பதிலளித்த சித்தார்த் “என்னுடைய ஊரில் உள்ள அதிதி தேவ பவா” உடன் என்று கூறினார்.

இதன் மூலம் அதிதி ராவை காதலிப்பதை மறைமுகமாக சித்தார்த் உறுதிப்படுத்தி இருப்பதாக அவர் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Siddharth indirectly confirms his relationship with Aditi Rao Hydari

சூப்பர் ஸ்டார் பதவி : பயப்பட ஆரம்பித்த ரஜினி.; ‘ஜெயிலர் முதல் தலைவர் 170’ வரை ஒரு பார்வை

சூப்பர் ஸ்டார் பதவி : பயப்பட ஆரம்பித்த ரஜினி.; ‘ஜெயிலர் முதல் தலைவர் 170’ வரை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி படங்கள் என்றாலே அதில் ரஜினி ஒருவர் மட்டும்தான் முன்னிலைப்படுத்தப்படுவார். அவரது படங்களில் எத்தனை மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் ரஜினி தான் ஹைலைட்டாக இருப்பார்.

அவர் மட்டும்தான் மாஸாக போஸ்டர்களிலும் இடம் பெறுவார். இதுதான் இதுநாள் வரை நடந்து வந்துள்ளது.

ரஜினிகாந்த் இதுவரை 168+க்கு மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார்.

சமீபத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ?என்ற சர்ச்சை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் எழுந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் பயந்துவிட்டாரோ என்ற எண்ணமே தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதற்கு காரணம் ரஜினியின் படங்களில் பிரபல நட்சத்திரங்கள் இணைந்து வருவதை நாம் காண முடிகிறது.

முக்கியமாக ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் பாலிவுட் பிரபல நடிகர் ஜாக்கிசரஃப் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.

அதுபோல ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்தாலும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் ‘தலைவர் 170’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த தயாராகி வருகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இணைவதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

ரஜினிகாந்த் என்ற மிகப்பெரிய பிம்பம் உள்ள நிலையில் மற்ற மொழி நட்சத்திரங்களை தொடர்ந்து இணைத்து வருவதன் நோக்கம் என்ன? ரஜினிகாந்த் பயப்பட ஆரம்பித்து விட்டாரா?

சமீபகாலமாக ரஜினி நடித்த தர்பார் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் தன்னுடைய படங்களில் வேறு மொழி நடிகர்களை ரஜினி இணைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.!

Rajinikanth afraid of Superstar post?

‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான்

‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.

கடந்த மே மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய இப்படம் மக்களிடையே பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ஆனால், இப்படம் உலகம் முழுவதும் ரூ.238 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்டோ சென் தற்போது தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

பிரபல தொழில் அதிபரான சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்.

இந்த படத்திற்கு ‘சஹாரா ஸ்ரீ’ (SAHARASRI) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

‘சஹாரா ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் சுதிப்டா சென் இயக்கும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

அந்த போஸ்டரில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படும் வகையில் உள்ளது.

லெஜெண்ட் ஸ்டூடியோஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘the kerala story’ movie director next film project music compose to ar rahman

More Articles
Follows