13 வயதில் சினிமா ஆசை.. 43 வயதில் இயக்குநர்.; ஈசனின் ஈடற்ற உழைப்பை சொல்லும் ‘ஈடாட்டம்’

13 வயதில் சினிமா ஆசை.. 43 வயதில் இயக்குநர்.; ஈசனின் ஈடற்ற உழைப்பை சொல்லும் ‘ஈடாட்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையின் நட்சத்திர நடிகர் ஸ்ரீ குமார் (Shreekumar )கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஈடாட்டம்’ (EDATTAM ) எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இதனை மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் (K.Rajan ), இயக்குநர்கள் பேரரசு (Director Perarasu ), எழில் (Director Ezhil ), இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா (Music Director A.R.Reihana ) தயாரிப்பாளரும், தொழிலதிபருமான என்.ஆர். தனபாலன் (N.R.Dhanapalan )ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ஈசன் (Director ESAN ) இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ஈடாட்டம்’ (EDATTAM ). இதில் ஸ்ரீகுமார், நடிகர் ராஜ சூர்யா (RAJA SURYA) நடிகைகள் வெண்பா (VENBA), அனு கிருஷ்ணா (ANU KRISHNA), தீக்ஷிகா(DHIKSHIKA), விஜய் விசித்திரன் (VISITHIRAN ), ‘காதல்’ சுகுமார் (KADHAL SUKUMAR ), பவர் ஸ்டார் (POWER STAR ), ‘பூவிலங்கு’ மோகன்(POOVILANKU MOHAN ), புலிக்குட்டி, விஜய் சத்யா, சாந்தி ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க மேற்பார்வையை கஜபதி (GAJABATHI ) மேற்கொள்ள, ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம்ஸ் ( JASON WILLIAMS ) கையாள, ஜான் பீட்டர் (JOHN PETER ) இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை செந்தில் (SENTHIL ) கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜென் முத்துராஜ் (ZEN MUTHURAJ ) மேற் கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை சுரேஷ் ஹார்ஸ் பாபு (SURESH HARSE BABU )அமைத்திருக்கிறார்.

சைபர் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஈசன் மூவிஸ் (ESAN MOVIES ) எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்தி அருண் கேசவன் (SAKTHI ARUN KESAVAN )தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் கவனத்தை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் பேரரசு, எழில், தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான என். ஆர். தனபாலன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஈசன் பேசுகையில்,…

‘ கலை தாய்க்கு என்னுடைய முதல் வணக்கம். கலையை மதித்தவர்கள் யாரும் கெட்டுப் போனதில்லை. கலையை நிஜமாக நேசித்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

13 வயதில் எனக்கு சினிமாவின் மீது ஆசை ஏற்பட்டது. அப்போது முதல் கோடம்பாக்கத்தில் வாய்ப்புகளைத் தேடி நான் சைக்கிளில் அலைந்திருக்கிறேன்.

எனக்கு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தான் பூர்வீகம். அங்கிருந்து 90களில் சென்னைக்கு வந்தேன். நான் சைக்கிளில் அலைந்த போது சினிமா எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய மாமா ஏ. சி. சந்திரகுமார் திரைப்பட இயக்குநர். ‘செவத்த பொண்ணு’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார். என்னுடைய தாத்தா ஆறுமுக நாடார் நாடக மன்றம் என்று ஒரு கலைக்குழுவை வைத்து நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

ஈடாட்டம்

என்னுடைய மாமா, ’20 ஆண்டுகளாக போராடுகிறேன். எனக்கே சினிமா கை வரவில்லை. அதனால் பேசாமல் ஊர் பக்கம் சென்று விடு’ என எச்சரித்தார். ஆனால் நான் அவருக்குத் தெரியாமல் சென்னையில் வாய்ப்புக்காக சுற்றி இருக்கிறேன்.

சினிமாவிற்காக சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டேன். இன்று சிலம்பம் என்றால் அனைவருக்கும் தெரியும் வகையில் ஆண்டவன் அருளால் பிரபலமாகி இருக்கிறேன்.

இந்த நிலையில் இரண்டு பேர் தூண்டுதலின் பேரில் நானும் இணைந்து படத்தை தயாரிக்க தொடங்கினோம்.

ஒரு கோடியில் தயாரிக்கலாம் என்றும், ஒவ்வொருவரும் தலா முப்பது லட்சத்தை முதலீடு செய்யலாம் என்றும் திட்டம் போட்டு படத்தின் பணிகளைத் தொடங்கினோம். முதலில் என்னுடைய பணத்தை செலவழிக்க தொடங்கினேன். ஆர்வத்தில் செலவுகளை செய்யத் தொடங்கினேன். 20 லட்ச ரூபா செலவு செய்த பிறகு.. இரண்டு நண்பர்களும் வெளியேறி விட்டார்கள்.

படத்தை நிறைவு செய்ய தெரியாமல் தடுமாறி நின்ற போது, என்னை வளர்த்த தாய் ரங்கநாயகி…, அவருடைய வீட்டை விற்று கொடுத்த பணத்தில் படத்தை நிறைவு செய்திருக்கிறேன்.

இந்த செயலை என்னைப் பெற்ற தாய் கூட செய்ய மாட்டார்கள். என்னை வளர்த்த தாய் என் மீது வைத்த பேரன்பின் காரணமாகத்தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அவர்கள் இல்லையென்றால்… இந்த ஈசன் மூவிஸ் இல்லை. இந்த ‘ஈடாட்டம்’ திரைப்படமும் இல்லை.

இன்னொரு விசயத்தை குறிப்பிட வேண்டும். எனக்கு சினிமா ஆசை இருந்ததே தவிர… சினிமாவை முறையாக கற்றுக் கொள்ளவில்லை.

என்னுடைய ஆசையை படமாக உருவாக்கியதற்கு.., இப்படத்தில் பணியாற்றிய கஜபதி தான் காரணம். நான் இந்த படத்தில் இயக்குநர் என்று பெயரை மட்டும் தான் போட்டிருக்கிறேன். ஆனால் அனைத்து பணிகளையும் செய்தது கஜபதி தான்.

இந்த திரைப்படத்தில் பணியாற்றிய ஜேசன் வில்லியம்ஸ், ஜென் முத்துராஜ் என ஒவ்வொருவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இசைத்துறையில் ஒருவரால் லட்சக்கணக்கில் ஏமாற்றப்பட்டேன். அதன் பிறகு தான் ஜான் பீட்டரைச் சந்தித்தேன். அவர் எனக்கு பேருதவி செய்தார்.

சினிமாவை நிஜமாக நேசிப்பவர்கள்.. சினிமாவிற்கு உதவி செய்கிறார்கள் என்பதை ஜான் பீட்டர் மூலமாக உணர்ந்தேன்.

என்னிடம் சிலம்பம் கற்ற மாணவி பிரியா என்பவர் ஐந்து லட்ச ரூபாய் உதவி செய்ததால் இந்த படம் சரியான நேரத்தில் நிறைவடைந்தது. அதற்கும் இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

13 வயதில் சினிமா ஆசையுடன் சென்னைக்கு வந்த நான் 43 வயதில் இயக்குநராகியிருக்கிறேன். 30 வருஷ தவம் நிறைவேறி இருக்கிறது. இதில் நான் மட்டும் வெற்றி பெறவில்லை. அனைவரும் ஒன்றிணைந்துதான் வெற்றி பெற்றிருக்கிறோம்.

சினிமாவில் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவேன். ஏனெனில் என்னுடைய குடும்பம் கலை குடும்பம். இந்த சின்ன படத்திற்காக நான் 20 லட்சம் ரூபாய் வரை ஏமாந்திருக்கிறேன். சினிமாவில் ஏமாற்றுபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த திரைப்படத்தை வாழ்த்த வேண்டும் என அழைப்பு விடுத்தவுடன் வருகை தந்து வாழ்த்திய கே ராஜன், பேரரசு, எழில், ஏ ஆர் ரஹைனா தனபாலன் சிலம்பாட்ட கலைஞர் சண்முகம் சிலம்பாட்ட கழகத் தலைவர் ஆகியோர்களுக்கு நன்றி. ” என்றார்.

ஈடாட்டம்

Director Easan emotional speech at Edattam trailer launch

இதுதெரியாம போச்சே.. வெளியானது உண்மை.; இதுபோல நடந்துக்காதீங்க.: ஷாமை எச்சரித்த மீனா

இதுதெரியாம போச்சே.. வெளியானது உண்மை.; இதுபோல நடந்துக்காதீங்க.: ஷாமை எச்சரித்த மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவான ‘நீ போதும்’ ஆல்பத்தில் நிரஞ்சனி அசோகன் நாயகியாக நடித்துள்ளார்.

வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார்.

இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகர் ஷாம் பேசும்போது…

“நல்ல படைப்பு வரணும்னா ஒரு நல்ல டீம் அமையனும். அந்தவகையில் ‘நீ போதும்’ ஆல்பத்திற்கு நல்ல டீம் அமைந்துவிட்டது. ஒவ்வொருத்தரின் வேலையும் தனித்தனியாக தெரிகிறது..

ஒரு ஆல்பம் பாடலுக்காக இவ்வளவு பெரிய டீமை அமெரிக்கா அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள் என்றால் பிரமிப்பாக இருக்கிறது. சுரேந்தர் ஜோ எனக்கு நல்ல நண்பர்.. என்னிடம் பல கதைகள் கூறியுள்ளார். ஆனால் அவருக்குள் இப்படி ஒரு பாடலாசிரியர் இருக்கிறார் என்பதை அவர் அப்போது வெளிப்படுத்தவே இல்லை.

‘நீ போதும்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த பாடலை பார்க்கும்போது, என் வீட்டினர், குறிப்பாக என் மனைவி அடிக்கடி சொல்லும் நீ தேவையில்லை என்கிற வார்த்தை தான் ஞாபகத்துக்கு வருகிறது.

அந்த அளவுக்கு பெண்கள் இன்று தனியே நின்று சாதிப்பவர்களாக மாறிவிட்டார்கள். இந்த ஆல்பத்திற்கு இரண்டம் பக்கம் உருவாக்கினால் நீ தேவையில்லை என்கிற வார்த்தையையே டைட்டிலாக வையுங்கள்

இந்த ஆல்பத்தில் நடித்துள்ள நிரஞ்சனி அசோகன் தைரியமான பெண்ணாக இருக்கிறார். நடிப்பில் உடல்மொழி, ஸ்டைல், எமோஷன் என அனைத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த விழாவுக்கு மீனா வருகிறார் என்றதுமே நானும் கலந்துகொள்ள வேண்டும் என முடிவுசெய்து விட்டேன். அவருடன் படங்களில் இணைந்து நக்டிகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் டான்ஸ் ஷோ ஒன்றுக்காக அவருடன் ஆறு மாதம் இணைந்து பயணித்திருக்கிறேன்.

அப்போது விளையாட்டாக நான் ஒரு விஷயம் சொல்ல, அதற்காக கோபப்பட்ட மீனா இதுபோல நடந்துகொள்ள கூடாது, புரபொஷனலாக நடந்து கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்தார். இந்த ஆல்பத்தை ரிலீஸ் செய்வதற்கு சரியான நபர் அவர் தான்” என்றார்.

Be like Professional Meena advice to Shaam

நானும் விக்ரமும் நடிச்சது ரிலீஸாகல..; ஆல்பம் வெளியீட்டில் மீனா ஆதங்கம்

நானும் விக்ரமும் நடிச்சது ரிலீஸாகல..; ஆல்பம் வெளியீட்டில் மீனா ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவான ‘நீ போதும்’ ஆல்பத்தில் நிரஞ்சனி அசோகன் நாயகியாக நடித்துள்ளார்.

வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார்.

இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பேசும்போது…

“இந்த பாடலை வெளியிடும் அளவுக்கு நான் சரியான ஆளா என்று தெரியாது. ஆனால் இதை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி.

புதியவர்களின் வருகையை எப்போதும் ஊக்குவிக்க நான் தயங்கியதே இல்லை. அதில் சொல்ல முடியாத ஒரு சந்தோசம், திருப்தி கிடைக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னால் நானும் சியான் விக்ரமும் ‘காதலிசம்’ என்கிற ஆல்பத்தில் இணைந்து நடித்தோம். அந்த சூழலில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆல்பங்கள் வரவேற்பை பெற்று வந்தாலும் தமிழில் எங்கள் ஆல்பத்தை எப்படி வெளியிடுவது, மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது என்கிற வழிவகை தெரியாததால் அது ரிலீசாகமலேயே போய்விட்டது.

ஆனால் இந்த ஜெனரேஷனில் ஆல்பம் பாடல் குறித்து எல்லோர்க்குமே தெரிந்துள்ளது. என்னால் செய்ய முடியாததை இன்னொருத்தர் செய்யும்போது அதை வெளியே தெரியப்படுத்த தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்” என்று கூறினார்.

Myself and Vikram acted in Kadhalism says Meena

துணிச்சலான பெண் நிரஞ்சனி.. அவருக்கு பொருத்தமானது ‘நீ போதும்’.; பரத் பாராட்டு

துணிச்சலான பெண் நிரஞ்சனி.. அவருக்கு பொருத்தமானது ‘நீ போதும்’.; பரத் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லஹரி இசை நிறுவனம் சார்பில் ‘நீ போதும்’ என்கிற இசை ஆல்பம் உருவாகியுள்ளது.

பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் நிரஞ்சனி அசோகன் நாயகியாக நடித்துள்ளார்.

வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார். சுரேந்திரன் ஜோ எழுதியுள்ள இந்த பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். ரஷாந்த் அர்வின் இந்த ஆல்பத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘நீ போதும்’ ஆல்பத்தை நேற்று நடிகை குஷ்பு, நடிகர் ஆர்யா ஆகியோர் ஆன்லைனில் வெளியிட்டனர்.

இந்த ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நடிகை மீனா, நடிகர்கள், ஷாம், பரத், இயக்குனர்கள் பரத், அரவிந்த் ஸ்ரீதர் ஆகியோர் இந்த ஆல்பத்தை வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் இந்த ஆல்பத்தின் இயக்குனர் வம்சி குருகுரி பேசும்போது….

“எனக்கு தமிழ் மொழி அவ்வளவாக தெரியாததால் தடுமாற்றம் ஏற்பட்டபோது நிரஞ்சனி அசோகன் தான் ஒவ்வொரு வார்த்தைக்கு அர்த்தம் சொல்லித்தந்து உதவினார். இந்த பாடல் படப்பிடிப்பின் போது அழும் காட்சிகளுக்காக கிளிசரின் கொன்னு வர சொன்னார் நிரஞ்சனி. ஆனால் நான் கொண்டுபோக மறந்து விட்டேன்.. இருந்தாலும் கிளிசரின் இல்லாமலேயே நிஜமாகவே அழுது நடிக்கவேண்டும் என்று சொன்னேன். அவரும் அதை அருமையாக செய்து விட்டார்’ என்று கூறினார்..

பாடலாசிரியர் சுரேந்திரன் ஜோ பேசும்போது,…

“பெண்களுக்கென ஒரு பவர் இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.. அதை மையக்கருத்தாக வைத்தே இந்த பாடலை எழுதினேன்” என்று கூறினார்.

நாயகி நிரஞ்சனி அசோகன் பேசும்போது..

“இந்த கான்செப்ட் சொல்லும்போதே இதயத்தை தொட்டது. இந்த மொத்த புராஜெக்ட்டும் எனக்கு ஒரு மேஜிக் போல இருந்தது. பல பிரச்சனைகளை சந்தித்து அதையெல்லாம் கடந்து இன்று இந்த ஆல்பம் ரிலீசாகியுள்ளது.

தன்னம்பிக்கை பெண்ணின் கதையாக உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை நடிகை மீனா வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரிடம் கேட்டோம். அவரும் உடனே ஒப்புக்கொண்டு இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

நடிகர் பரத் பேசும்போது…

“யாக்கை திரி படத்தில் நடித்ததன் மூலம் நிரஞ்சனி அசோகன் எனக்கு அறிமுகமானார். ரொம்பவே துணிச்சலான பெண்.. இயற்கையான நடிப்பை வெளிபடுத்துபவர்.. தன்னம்பிக்கை கொண்ட பாடல் வரிகளுடன் கூடிய இந்த ஆல்பத்திற்கு நிரஞ்சனி பொருத்தமானவர் தான் “ என்று வாழ்த்தினார்.

Bharath appreciated Nee Podhum team and Niranjani

டிஜிட்டல் உலகிலும் ‘மும்முடிச் சோழன்’ நாடகத்தை ந(டி)டத்தி காட்டிய ஆதேஷ் பாலா

டிஜிட்டல் உலகிலும் ‘மும்முடிச் சோழன்’ நாடகத்தை ந(டி)டத்தி காட்டிய ஆதேஷ் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் நாடகத்தையே மறந்து சினிமாவில் மக்கள் மூழ்கியுள்ள காலம் இது.

அதனையும் கடந்து டிவி சீரியல்கள் ஓடிடி தளங்கள் என உலகம் விரிவடைந்துள்ளது.

ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் சினிமாவிலும் சீரியலிலும் பல டேக்குகள் எடுத்து விடலாம்.

ஆனால் நாடகம் அப்படி அல்ல.. நாடகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தன்னுடைய வசனத்தையும் தன்னுடைய உடல் மொழியையும் அரங்கேற்றிட வேண்டும்.

அப்படி ஒரு சவாலான விஷயத்தை இன்றைய நவீன உலகத்தில் அரங்கேற்றியுள்ளனர் நடிகர் ஆதேஷ் பாலா குழு. நாடகத்தின் பெயர் : மும்முடி சோழன்.

ஒரு திரைப்படத்தை மேடையில் கண்டது போல் அரங்கேற்றமானது மன்னர் இராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு.

மும்முடிச் சோழன்

இராஜராஜ சோழன் வாழ்க்கையை சொல்லும் ‘மும்முடி சோழன்’ நாடகம் இது.

இதில் இராஜேந்திர சோழனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ஆதேஷ் பாலா.

அவர் வரும் காட்சிகளில் அரங்கமே கை தட்டி ஆராவாரம் செய்தது.

மேலும் அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு பொருத்தமாகவும் இருந்தது.

இத்துடன் ஒவ்வொரு வசனத்திற்கும் கைதட்டல் ஆராவாரம் கிடைத்தது.

இந்த நாடகத்தில் கிட்டத்தட்ட 38 காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்முடிச் சோழன்

இந்த நாடகம் ஜூன் 14 நேற்று மாலை சென்னை இராஜா அண்னாமலை மன்றத்தில் மிக பிரம்மாண்டமாய் அரங்கேற்றம் செய்யப்பட்டது,

தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக நடை பெற்ற இந்த நாடகத்திற்கு தொழில் அதிபர் விஜிபி சந்தோசம் அவர்கள், தலைவர் வாகை சந்திரசேகர் அவர்கள், அமைச்ச்சர் சேகர் பாபு அவர்கள்
தமிழச்சி தங்கபாண்டியன், செயலாளர் விஜயா தாயன்பன், நடிகர் எஸ்.வி. சேகர், இசையமைப்பாளர் தாஜ்நூர், கவிஞர் நெல்லை ஜெயந்தா, உலக தமிழ் வளச்சி கழக தலைவர் அவ்வை அருள், கே பி கே செல்வாராஜ், மருத்துவர் க மணிவாசகன் ஆகியோர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நாடகத்தை தயாரித்து வழங்கியது யோகஷாரம் அறக்கட்டளை நிறுவனர் தயாரிப்பாளர் A P வைத்தீஸ்வரன், இயக்கம் AS மணி, நாடக ஆக்கம், வசனம் தஞ்சை RK.

மும்முடிச் சோழன்

Actor Aadesh bala acted in Mumudi Cholan stage drama

காதலும் கபடியும்.; கோலிவுட்டின் வெற்றி சென்டிமென்ட்டில் உருவான ‘கபடி ப்ரோ’

காதலும் கபடியும்.; கோலிவுட்டின் வெற்றி சென்டிமென்ட்டில் உருவான ‘கபடி ப்ரோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எழுதப்படாத சில சென்டிமென்ட் விதிகள் எப்போதுமே உண்டு. அதில் முக்கியமானது காதலும் கபடியும்.

பெரும்பாலும் இந்த கபடியும் காதலும் இணைந்தால் அந்தப் படங்கள் வெற்றிப்பட வரிசையில் இணைந்து வருவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

தற்போது அந்த வரிசையில் காதல் மற்றும் கபடியை மையப்படுத்தி இணைந்துள்ள படம்தான் ‘கபடி ப்ரோ’. அதன் விவரம் வருமாறு….

சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஓட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் (சுஜன்) கதை.

கபடி ப்ரோ

அவனுக்கு பக்க பலமாக அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும் (சிங்கம் புலி ), சக்தியும் (சஞ்சய் வெள்ளங்கி) உள்ளனர் .

இவர்கள் மூவரும் பாயும் புலி எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர் .

இந்நிலையில் வீரபாகுவும் அந்த ஊரின் காவல்துறை அதிகாரி இசக்கி பாண்டியனின் (மதுசூதன ராவ் ) மகள் அபிராமியும் (பிரியா லால் ) காதல் கொள்கின்றனர்.

தன்னுடைய மாமா மகளை மணம் முடிப்பான் என்று வீட்டில் எதிர் பார்த்த நிலையில் நண்பனின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அபிராமியை மணக்க முற்படுகிறான்.

அவனது பித்தலாட்டங்கள் வெளியே தெரிய வர இசக்கி பாண்டியனின் கோபத்துக்கு ஆளாகிறான். அபிராமியும் அவனை நம்ப மறுக்கிறாள்.

இசக்கி பாண்டியன் வீரபாகுவை தண்டிக்க கபடி போட்டியை தேர்ந்தெடுக்க அதில் நேர்மையை வெல்ல உறுதி கொள்கிறான்.

கபடி ப்ரோ

பின்பு நடந்தது என்ன.? போட்டியிலும் காதலிலும் வீரபாகு வென்றானா என்பதே கதை.

நடிகர்கள் – சுஜன், பிரியா லால், சிங்கம்புலி, சஞ்சய் வெள்ளங்கி, மதுசூதன ராவ், ஹானா, மனோபாலா, சண்முக சுந்தரம், ரஜினி M, மீரா கிருஷ்ணன் , அஞ்சலி, சிசர் மனோகர், சங்கர் & மற்றும் பலர்

Story, screenplay, dialogue, direction – Sathish Jayaraman
Producer- ANJHANA CINEMAS -USHA SHATHISH
Camera -E .Krishnasamy
PRO –SIVAKUMAR
Music-A J Daniel
Lyrics-gnanakaravel ,Thamarai
Choreography –Nobel,Rathika
Art –K A Raghava Kumar
Editing –S P Ahamad

கபடி ப்ரோ

KABADI BRO movie release date is here

More Articles
Follows