சமூகத்துக்கு நல்லது நடக்குமென்றால் நான் செல்வேன்.. – ARR சிஸ்டர் ரைஹ்னா

சமூகத்துக்கு நல்லது நடக்குமென்றால் நான் செல்வேன்.. – ARR சிஸ்டர் ரைஹ்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரைஹ்னா பேசுகையில்….

” பொதுவாக பெரிய பட்ஜெட் படங்களின் விழாக்களுக்கு நான் செல்வதில்லை. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தான் செல்கிறேன். ஏனெனில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு என்னாலான ஒத்துழைப்பை வழங்குவேன்.

சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்தால் போதும். அழைப்பிதழில் என் பெயர் இடம்பெற வேண்டும் என்ற அவசியமில்லை. அதை நான் எதிர்பார்ப்பதுமில்லை. தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, எழில் போன்றவர்கள் இங்கு வருகை தந்து பட குழுவினரை வாழ்த்தி உற்சாகப்படுத்துகிறார்கள் என்றால் இது தான் ஆரோக்கியமான சூழல் என கருதுகிறேன்.

இசையப்பாளர் ஜான் பீட்டர் இசையமைத்த இரண்டு பாடல்கள் இங்கு திரையிடப்பட்டது. இரண்டும் அற்புதமாக இருந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

அவர் இதில் பணியாற்றி இருப்பதால் இந்த படம் நேர்த்தியாக உருவாகி இருக்கும். இரண்டு பாடல் காட்சிகளிலும் அவருடைய உழைப்பு தெரிந்தது. இந்தப் படம் அற்புதமான கதையை கொண்டிருக்கிறது.

ஒருவன் குடித்துவிட்டு எந்த அளவிற்கு பிரச்சனையை செய்ய முடியும். குடித்த பிறகு.. அவனுடைய மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது… இதனால் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகளை… இயக்குநர் படமாக்கி இருப்பதால், இதனை பாராட்டுவதற்காகவே இங்கு வருகை தந்திருக்கிறேன். இதற்காக பட குழுவினரை வாழ்த்துகிறேன்.

பொதுவாகவே சமூகத்துக்கு ஏதேனும் நல்லது நடக்கிறது என்றால்… உடனே நான் அங்கு சென்று விடுவேன். இசையமைப்பாளர் சங்கர் கணேசின் மகனான ஸ்ரீக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்”.என்றார்.

ஈடாட்டம்

If any good thing going to happen i will be there says Rahaina

2023ல் 4 ஹிட்டு.; சின்ன படங்கள்தான் சினிமாவை இயங்க வைக்கிறது – எழில்

2023ல் 4 ஹிட்டு.; சின்ன படங்கள்தான் சினிமாவை இயங்க வைக்கிறது – எழில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் எழில் பேசுகையில்…

” சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதில்லை என காதல் சுகுமார் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் வெற்றி பெற்ற நான்கு திரைப்படங்களும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள்தான்.

சின்ன பட்ஜெட் படங்கள் தான் இந்தத் துறையை ஆரோக்கியமாக இயங்க வைக்கிறது. சின்ன பட்ஜெட் படங்கள் தான் புதிய இளம் திறமையாளர்களின் கனவுகளை நனவாக்குகிறது.

ஈசன் போன்ற ஏராளமான புது இயக்குநர்கள் அறிமுகமாவதற்கு உதவி செய்வது சின்ன பட்ஜெட் படங்கள் தான். ஈடாட்டம் திரைப்படத்தை படக்குழுவினர் அற்புதமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தின் முன்னோட்டம்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்குவது போல் அமைந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஈசன் ஈடாட்டத்தை உருவாக்குவதற்காக பட்ட கஷ்டத்தை கேட்கும் போது சினிமா மீது ஒரு பயம் வருகிறது. இவற்றையும் கடந்து இப்படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.

ஈடாட்டம்

Low budget movies were very stronger says Ezhil

13 வயதில் சினிமா ஆசை.. 43 வயதில் இயக்குநர்.; ஈசனின் ஈடற்ற உழைப்பை சொல்லும் ‘ஈடாட்டம்’

13 வயதில் சினிமா ஆசை.. 43 வயதில் இயக்குநர்.; ஈசனின் ஈடற்ற உழைப்பை சொல்லும் ‘ஈடாட்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையின் நட்சத்திர நடிகர் ஸ்ரீ குமார் (Shreekumar )கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஈடாட்டம்’ (EDATTAM ) எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இதனை மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் (K.Rajan ), இயக்குநர்கள் பேரரசு (Director Perarasu ), எழில் (Director Ezhil ), இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா (Music Director A.R.Reihana ) தயாரிப்பாளரும், தொழிலதிபருமான என்.ஆர். தனபாலன் (N.R.Dhanapalan )ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ஈசன் (Director ESAN ) இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ஈடாட்டம்’ (EDATTAM ). இதில் ஸ்ரீகுமார், நடிகர் ராஜ சூர்யா (RAJA SURYA) நடிகைகள் வெண்பா (VENBA), அனு கிருஷ்ணா (ANU KRISHNA), தீக்ஷிகா(DHIKSHIKA), விஜய் விசித்திரன் (VISITHIRAN ), ‘காதல்’ சுகுமார் (KADHAL SUKUMAR ), பவர் ஸ்டார் (POWER STAR ), ‘பூவிலங்கு’ மோகன்(POOVILANKU MOHAN ), புலிக்குட்டி, விஜய் சத்யா, சாந்தி ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க மேற்பார்வையை கஜபதி (GAJABATHI ) மேற்கொள்ள, ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம்ஸ் ( JASON WILLIAMS ) கையாள, ஜான் பீட்டர் (JOHN PETER ) இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை செந்தில் (SENTHIL ) கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜென் முத்துராஜ் (ZEN MUTHURAJ ) மேற் கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை சுரேஷ் ஹார்ஸ் பாபு (SURESH HARSE BABU )அமைத்திருக்கிறார்.

சைபர் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஈசன் மூவிஸ் (ESAN MOVIES ) எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்தி அருண் கேசவன் (SAKTHI ARUN KESAVAN )தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் கவனத்தை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் பேரரசு, எழில், தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான என். ஆர். தனபாலன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஈசன் பேசுகையில்,…

‘ கலை தாய்க்கு என்னுடைய முதல் வணக்கம். கலையை மதித்தவர்கள் யாரும் கெட்டுப் போனதில்லை. கலையை நிஜமாக நேசித்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

13 வயதில் எனக்கு சினிமாவின் மீது ஆசை ஏற்பட்டது. அப்போது முதல் கோடம்பாக்கத்தில் வாய்ப்புகளைத் தேடி நான் சைக்கிளில் அலைந்திருக்கிறேன்.

எனக்கு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தான் பூர்வீகம். அங்கிருந்து 90களில் சென்னைக்கு வந்தேன். நான் சைக்கிளில் அலைந்த போது சினிமா எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய மாமா ஏ. சி. சந்திரகுமார் திரைப்பட இயக்குநர். ‘செவத்த பொண்ணு’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார். என்னுடைய தாத்தா ஆறுமுக நாடார் நாடக மன்றம் என்று ஒரு கலைக்குழுவை வைத்து நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

ஈடாட்டம்

என்னுடைய மாமா, ’20 ஆண்டுகளாக போராடுகிறேன். எனக்கே சினிமா கை வரவில்லை. அதனால் பேசாமல் ஊர் பக்கம் சென்று விடு’ என எச்சரித்தார். ஆனால் நான் அவருக்குத் தெரியாமல் சென்னையில் வாய்ப்புக்காக சுற்றி இருக்கிறேன்.

சினிமாவிற்காக சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டேன். இன்று சிலம்பம் என்றால் அனைவருக்கும் தெரியும் வகையில் ஆண்டவன் அருளால் பிரபலமாகி இருக்கிறேன்.

இந்த நிலையில் இரண்டு பேர் தூண்டுதலின் பேரில் நானும் இணைந்து படத்தை தயாரிக்க தொடங்கினோம்.

ஒரு கோடியில் தயாரிக்கலாம் என்றும், ஒவ்வொருவரும் தலா முப்பது லட்சத்தை முதலீடு செய்யலாம் என்றும் திட்டம் போட்டு படத்தின் பணிகளைத் தொடங்கினோம். முதலில் என்னுடைய பணத்தை செலவழிக்க தொடங்கினேன். ஆர்வத்தில் செலவுகளை செய்யத் தொடங்கினேன். 20 லட்ச ரூபா செலவு செய்த பிறகு.. இரண்டு நண்பர்களும் வெளியேறி விட்டார்கள்.

படத்தை நிறைவு செய்ய தெரியாமல் தடுமாறி நின்ற போது, என்னை வளர்த்த தாய் ரங்கநாயகி…, அவருடைய வீட்டை விற்று கொடுத்த பணத்தில் படத்தை நிறைவு செய்திருக்கிறேன்.

இந்த செயலை என்னைப் பெற்ற தாய் கூட செய்ய மாட்டார்கள். என்னை வளர்த்த தாய் என் மீது வைத்த பேரன்பின் காரணமாகத்தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அவர்கள் இல்லையென்றால்… இந்த ஈசன் மூவிஸ் இல்லை. இந்த ‘ஈடாட்டம்’ திரைப்படமும் இல்லை.

இன்னொரு விசயத்தை குறிப்பிட வேண்டும். எனக்கு சினிமா ஆசை இருந்ததே தவிர… சினிமாவை முறையாக கற்றுக் கொள்ளவில்லை.

என்னுடைய ஆசையை படமாக உருவாக்கியதற்கு.., இப்படத்தில் பணியாற்றிய கஜபதி தான் காரணம். நான் இந்த படத்தில் இயக்குநர் என்று பெயரை மட்டும் தான் போட்டிருக்கிறேன். ஆனால் அனைத்து பணிகளையும் செய்தது கஜபதி தான்.

இந்த திரைப்படத்தில் பணியாற்றிய ஜேசன் வில்லியம்ஸ், ஜென் முத்துராஜ் என ஒவ்வொருவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இசைத்துறையில் ஒருவரால் லட்சக்கணக்கில் ஏமாற்றப்பட்டேன். அதன் பிறகு தான் ஜான் பீட்டரைச் சந்தித்தேன். அவர் எனக்கு பேருதவி செய்தார்.

சினிமாவை நிஜமாக நேசிப்பவர்கள்.. சினிமாவிற்கு உதவி செய்கிறார்கள் என்பதை ஜான் பீட்டர் மூலமாக உணர்ந்தேன்.

என்னிடம் சிலம்பம் கற்ற மாணவி பிரியா என்பவர் ஐந்து லட்ச ரூபாய் உதவி செய்ததால் இந்த படம் சரியான நேரத்தில் நிறைவடைந்தது. அதற்கும் இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

13 வயதில் சினிமா ஆசையுடன் சென்னைக்கு வந்த நான் 43 வயதில் இயக்குநராகியிருக்கிறேன். 30 வருஷ தவம் நிறைவேறி இருக்கிறது. இதில் நான் மட்டும் வெற்றி பெறவில்லை. அனைவரும் ஒன்றிணைந்துதான் வெற்றி பெற்றிருக்கிறோம்.

சினிமாவில் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவேன். ஏனெனில் என்னுடைய குடும்பம் கலை குடும்பம். இந்த சின்ன படத்திற்காக நான் 20 லட்சம் ரூபாய் வரை ஏமாந்திருக்கிறேன். சினிமாவில் ஏமாற்றுபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த திரைப்படத்தை வாழ்த்த வேண்டும் என அழைப்பு விடுத்தவுடன் வருகை தந்து வாழ்த்திய கே ராஜன், பேரரசு, எழில், ஏ ஆர் ரஹைனா தனபாலன் சிலம்பாட்ட கலைஞர் சண்முகம் சிலம்பாட்ட கழகத் தலைவர் ஆகியோர்களுக்கு நன்றி. ” என்றார்.

ஈடாட்டம்

Director Easan emotional speech at Edattam trailer launch

இதுதெரியாம போச்சே.. வெளியானது உண்மை.; இதுபோல நடந்துக்காதீங்க.: ஷாமை எச்சரித்த மீனா

இதுதெரியாம போச்சே.. வெளியானது உண்மை.; இதுபோல நடந்துக்காதீங்க.: ஷாமை எச்சரித்த மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவான ‘நீ போதும்’ ஆல்பத்தில் நிரஞ்சனி அசோகன் நாயகியாக நடித்துள்ளார்.

வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார்.

இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகர் ஷாம் பேசும்போது…

“நல்ல படைப்பு வரணும்னா ஒரு நல்ல டீம் அமையனும். அந்தவகையில் ‘நீ போதும்’ ஆல்பத்திற்கு நல்ல டீம் அமைந்துவிட்டது. ஒவ்வொருத்தரின் வேலையும் தனித்தனியாக தெரிகிறது..

ஒரு ஆல்பம் பாடலுக்காக இவ்வளவு பெரிய டீமை அமெரிக்கா அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள் என்றால் பிரமிப்பாக இருக்கிறது. சுரேந்தர் ஜோ எனக்கு நல்ல நண்பர்.. என்னிடம் பல கதைகள் கூறியுள்ளார். ஆனால் அவருக்குள் இப்படி ஒரு பாடலாசிரியர் இருக்கிறார் என்பதை அவர் அப்போது வெளிப்படுத்தவே இல்லை.

‘நீ போதும்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த பாடலை பார்க்கும்போது, என் வீட்டினர், குறிப்பாக என் மனைவி அடிக்கடி சொல்லும் நீ தேவையில்லை என்கிற வார்த்தை தான் ஞாபகத்துக்கு வருகிறது.

அந்த அளவுக்கு பெண்கள் இன்று தனியே நின்று சாதிப்பவர்களாக மாறிவிட்டார்கள். இந்த ஆல்பத்திற்கு இரண்டம் பக்கம் உருவாக்கினால் நீ தேவையில்லை என்கிற வார்த்தையையே டைட்டிலாக வையுங்கள்

இந்த ஆல்பத்தில் நடித்துள்ள நிரஞ்சனி அசோகன் தைரியமான பெண்ணாக இருக்கிறார். நடிப்பில் உடல்மொழி, ஸ்டைல், எமோஷன் என அனைத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த விழாவுக்கு மீனா வருகிறார் என்றதுமே நானும் கலந்துகொள்ள வேண்டும் என முடிவுசெய்து விட்டேன். அவருடன் படங்களில் இணைந்து நக்டிகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் டான்ஸ் ஷோ ஒன்றுக்காக அவருடன் ஆறு மாதம் இணைந்து பயணித்திருக்கிறேன்.

அப்போது விளையாட்டாக நான் ஒரு விஷயம் சொல்ல, அதற்காக கோபப்பட்ட மீனா இதுபோல நடந்துகொள்ள கூடாது, புரபொஷனலாக நடந்து கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்தார். இந்த ஆல்பத்தை ரிலீஸ் செய்வதற்கு சரியான நபர் அவர் தான்” என்றார்.

Be like Professional Meena advice to Shaam

நானும் விக்ரமும் நடிச்சது ரிலீஸாகல..; ஆல்பம் வெளியீட்டில் மீனா ஆதங்கம்

நானும் விக்ரமும் நடிச்சது ரிலீஸாகல..; ஆல்பம் வெளியீட்டில் மீனா ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவான ‘நீ போதும்’ ஆல்பத்தில் நிரஞ்சனி அசோகன் நாயகியாக நடித்துள்ளார்.

வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார்.

இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பேசும்போது…

“இந்த பாடலை வெளியிடும் அளவுக்கு நான் சரியான ஆளா என்று தெரியாது. ஆனால் இதை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி.

புதியவர்களின் வருகையை எப்போதும் ஊக்குவிக்க நான் தயங்கியதே இல்லை. அதில் சொல்ல முடியாத ஒரு சந்தோசம், திருப்தி கிடைக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னால் நானும் சியான் விக்ரமும் ‘காதலிசம்’ என்கிற ஆல்பத்தில் இணைந்து நடித்தோம். அந்த சூழலில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆல்பங்கள் வரவேற்பை பெற்று வந்தாலும் தமிழில் எங்கள் ஆல்பத்தை எப்படி வெளியிடுவது, மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது என்கிற வழிவகை தெரியாததால் அது ரிலீசாகமலேயே போய்விட்டது.

ஆனால் இந்த ஜெனரேஷனில் ஆல்பம் பாடல் குறித்து எல்லோர்க்குமே தெரிந்துள்ளது. என்னால் செய்ய முடியாததை இன்னொருத்தர் செய்யும்போது அதை வெளியே தெரியப்படுத்த தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்” என்று கூறினார்.

Myself and Vikram acted in Kadhalism says Meena

துணிச்சலான பெண் நிரஞ்சனி.. அவருக்கு பொருத்தமானது ‘நீ போதும்’.; பரத் பாராட்டு

துணிச்சலான பெண் நிரஞ்சனி.. அவருக்கு பொருத்தமானது ‘நீ போதும்’.; பரத் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லஹரி இசை நிறுவனம் சார்பில் ‘நீ போதும்’ என்கிற இசை ஆல்பம் உருவாகியுள்ளது.

பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் நிரஞ்சனி அசோகன் நாயகியாக நடித்துள்ளார்.

வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார். சுரேந்திரன் ஜோ எழுதியுள்ள இந்த பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். ரஷாந்த் அர்வின் இந்த ஆல்பத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘நீ போதும்’ ஆல்பத்தை நேற்று நடிகை குஷ்பு, நடிகர் ஆர்யா ஆகியோர் ஆன்லைனில் வெளியிட்டனர்.

இந்த ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நடிகை மீனா, நடிகர்கள், ஷாம், பரத், இயக்குனர்கள் பரத், அரவிந்த் ஸ்ரீதர் ஆகியோர் இந்த ஆல்பத்தை வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் இந்த ஆல்பத்தின் இயக்குனர் வம்சி குருகுரி பேசும்போது….

“எனக்கு தமிழ் மொழி அவ்வளவாக தெரியாததால் தடுமாற்றம் ஏற்பட்டபோது நிரஞ்சனி அசோகன் தான் ஒவ்வொரு வார்த்தைக்கு அர்த்தம் சொல்லித்தந்து உதவினார். இந்த பாடல் படப்பிடிப்பின் போது அழும் காட்சிகளுக்காக கிளிசரின் கொன்னு வர சொன்னார் நிரஞ்சனி. ஆனால் நான் கொண்டுபோக மறந்து விட்டேன்.. இருந்தாலும் கிளிசரின் இல்லாமலேயே நிஜமாகவே அழுது நடிக்கவேண்டும் என்று சொன்னேன். அவரும் அதை அருமையாக செய்து விட்டார்’ என்று கூறினார்..

பாடலாசிரியர் சுரேந்திரன் ஜோ பேசும்போது,…

“பெண்களுக்கென ஒரு பவர் இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.. அதை மையக்கருத்தாக வைத்தே இந்த பாடலை எழுதினேன்” என்று கூறினார்.

நாயகி நிரஞ்சனி அசோகன் பேசும்போது..

“இந்த கான்செப்ட் சொல்லும்போதே இதயத்தை தொட்டது. இந்த மொத்த புராஜெக்ட்டும் எனக்கு ஒரு மேஜிக் போல இருந்தது. பல பிரச்சனைகளை சந்தித்து அதையெல்லாம் கடந்து இன்று இந்த ஆல்பம் ரிலீசாகியுள்ளது.

தன்னம்பிக்கை பெண்ணின் கதையாக உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை நடிகை மீனா வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரிடம் கேட்டோம். அவரும் உடனே ஒப்புக்கொண்டு இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

நடிகர் பரத் பேசும்போது…

“யாக்கை திரி படத்தில் நடித்ததன் மூலம் நிரஞ்சனி அசோகன் எனக்கு அறிமுகமானார். ரொம்பவே துணிச்சலான பெண்.. இயற்கையான நடிப்பை வெளிபடுத்துபவர்.. தன்னம்பிக்கை கொண்ட பாடல் வரிகளுடன் கூடிய இந்த ஆல்பத்திற்கு நிரஞ்சனி பொருத்தமானவர் தான் “ என்று வாழ்த்தினார்.

Bharath appreciated Nee Podhum team and Niranjani

More Articles
Follows