தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நந்தா பெரியசாமி இயக்கத்தில்
சேரன் கௌதம் சிவாத்மிகா வெண்பா சரவணன் மௌனிகா ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் நடித்துள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படம் டிசம்பர் 24ல் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் சேரன் – ஸ்ரீ பிரியங்கா இணைந்து மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளனர்.
இவர்களுடன் முக்கிய வேடத்தில் துருவா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த புதிய படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், அமீர் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இசக்கி கார்வண்ணன் என்பவர் இயக்க, லட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்கு ‘தமிழ்க்குடிமகன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‛‛உங்கள் அனைவரின் அன்போடு இன்று இனிய துவக்கம் என தெரிவித்துள்ளார் சேரன்.
Cheran and Sri Priyanka joins for a new film