தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்…
”ஈடாட்டம் என்றால் என்ன? பொருள் என படக் குழுவினரிடம் கேட்டேன். நமக்கு போராட்டம் தெரியும். அதன் பிறகு சூதாட்டம் தெரியும். அதற்கு நான் செல்வதில்லை. சிலம்பாட்டம் தெரியும். இந்த ஆட்டங்களை எல்லாம் தெரிந்து கொண்ட எனக்கு,’ ஈடாட்டம்’ என்றால் என்ன? என்று தெரியவில்லை.
அப்போது அவர்கள், ”பொறாமை.. வஞ்சகம்.. வஞ்சனை.. பொல்லாப்பு..” என அர்த்தம் சொன்னார்கள்.
மனதில் வஞ்சனை வைத்திருப்பவர்கள் மனிதர்களே இல்லை. மனிதருக்குரிய பண்பும் அல்ல. மனிதநேயம்.. மனித தர்மம்… மனிதாபிமானம்.. இந்த மூன்றும் யாருக்கு இருக்கிறதோ… அவர்கள் தான் மாமனிதன்.
தான் மட்டும் வாழ வேண்டும் என நினைப்பது தவறில்லை. நாம் நன்றாக இருக்க வேண்டும். நமது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுவதும் தவறல்ல. இது ஆத்மா. இதை கடந்து.. நானும் வாழ வேண்டும். என்னை சுற்றி இருப்பவர்களும், என்னை நம்பி இருப்பவர்களும் வாழ வேண்டும் என எண்ணுபவர்கள் புண்ணிய ஆத்மாக்கள்.
ஆனால் என்னைப் பற்றி கவலை இல்லை. நாட்டை வாழ வைக்க வேண்டும்.. மக்களை வாழவைப்பதற்காக என்ன தியாகம் வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருப்பது.. மக்கள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள்.. பெருந்தலைவர் காமராஜரை போன்ற மகாத்மாக்கள். நாம் மகாத்மாவாக வேண்டும். இந்த காலத்தில் மகாத்மாவாக முடியாது. ஆனால் புண்ணியத்மா ஆகலாம்.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஒரு நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார். குடியால் கெட்டுப்போன ..அதனால் தடுமாறுகிற ஒரு இளைஞனின் கதையை அற்புதமாக சொல்லி இருக்கிறார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மகனான ஸ்ரீ ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இந்த விழாவிற்கு வருகை தந்து, என்னை சந்தித்து ‘வாங்க முதலாளி’ என அன்புடன் அழைத்தார். ஆனால் தற்போது தயாரிப்பாளராகிய நாங்கள் யாருக்கெல்லாம் பணம் கொடுக்கிறோமோ… அவர்கள் முதலாளிகளாகிவிடுகிறார்கள்.
நாம் தொழிலாளிகளாகி விடுகிறோம். ஆனால் ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களையும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இணைந்து தான் உருவாக்குகிறார்கள்.
அந்த வகையில் இப்படத்தின் இயக்குநர் ஈசன் நன்றி கடன்பட்டிருக்கிறார். தன்னுடைய பேச்சில் வளர்ப்புத் தாயை மட்டும் குறிப்பிடாமல்…, இப்படத்தை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்த கஜபதியையும் அவர் குறிப்பிட்டார்.
சிறிய பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்கள் அனைத்தும் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசும், மாநில அரசும் திட்டம் தீட்டி அவர்களை காக்க வேண்டும்.
இதனை ஒரு வேண்டுகோளாக முன் வைக்கிறேன். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த தயாரிப்பாளரின் வீட்டிற்கு வருமான வரி துறையினரின் சோதனையை அனுமதிக்கிற மத்திய அரசு.. தோல்வி அடைந்து காணாமல் போன தயாரிப்பாளரை பற்றியும் விசாரிக்க வேண்டும். மத்திய அரசு காட்டில் உள்ள வனவிலங்குகளை கண்டறிவதற்காக திட்டம் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது நல்ல திட்டம் தான். விலங்குகளை காப்பாற்றுகிற இந்த திட்டத்தை போல்…, 15 ஆண்டு காலமாக திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர் நிலை என்ன? அவர்களின் குடும்பம் என்னானது? அது தொடர்பாகவும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும் திரைப்படத்துறை சார்பாக வரி வருவாயை ஈட்டுகிறது. ஆனால் இதனை மத்திய அரசு ஒரு தொழிலாக அங்கீகரிக்கவில்லை.
‘ஈடாட்டம்’ வெறியாட்டமாக மாறாமல்.. வெற்றியாட்டமாக மாறி.. மக்களின் பேராதரவை பெற்று, வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.
Producers life status worst but Actors were happy says K Rajan