சமூக அக்கறையில் ‘அக்கரன்’..; வெண்பா-வின் தந்தையாக MS பாஸ்கர்

சமூக அக்கறையில் ‘அக்கரன்’..; வெண்பா-வின் தந்தையாக MS பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ். பாஸ்கர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அக்கரன்’.

அவரே கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் வெண்பா, ‘கபாலி’ விஸ்வநாத், நமோ நாராயணா, ஆகாஷ் பிரேம்குமார், கார்த்திக் சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

அறிமுக இயக்குநர் அருண் கே.பிரசாத் டைரக்டு செய்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் நாயகனாக நடிப்பது குறித்து அருண் கே.பிரசாத் கூறியதாவது..,

“எம்.எஸ்.பாஸ்கர் கதையை கேட்டதுமே உடனே ஒப்புக்கொண்டார். அக்கரன் படத்தில் அவர் விவசாயியாக நடித்துள்ளார். அவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் வெண்பா. மற்றொருவர் பிரியா.

ஒரு மகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட. தந்தை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.” என தெரிவித்துள்ளார்.

வில்லனுடன் எம்.எஸ்.பாஸ்கர் மோதும் சண்டைக் காட்சியும் படத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல்..

MS Baskar Venba Viswanth Starrer Akkaran updates

‘வாரிசு’க்கு பிறகு வரிசை கட்டும் படங்கள்.; பாவனாவுடன் இணையும் கணேஷ் வெங்கட் ராம்

‘வாரிசு’க்கு பிறகு வரிசை கட்டும் படங்கள்.; பாவனாவுடன் இணையும் கணேஷ் வெங்கட் ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் ‘வாரிசு’ திரைப்பட புகழ் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.

அபியும் நானும் படம் மூலம் அறிமுகமாகி, உலகநாயகன் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், பிக்பாஸ் நிகழ்ச்சி என மக்கள் மனங்களை வென்றவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.

தற்போது விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறார். தமிழில் முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் அவரது பாத்திரம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது நீண்ட இடைவேளைக்கு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார், நடிகர் கணேஷ் வெங்கட்ராம்

கணேஷ் வெங்கட்ராம்

இது குறித்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது…

“வாரிசு படத்தின் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. தெலுங்கு, இந்தி, மலையாளம் சினிமாவில் பலவிதமான கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளேன்.. தமிழில் நமக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் கிடைப்பதில்லையே என நினைத்திருக்கிறேன்.

ஆனால் அது வாரிசு மூலம் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி. அதிலும் இப்படத்தில் எனது கேரக்டரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அட்டகாசமாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். இது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்போது வாரிசை தொடர்ந்து, பல வித்தியாசமான கதபாத்திரங்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கிறது.

சில படங்களில் முழுக்க என் லுக்கை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன். வாரிசுக்கு பிறகு இப்போது இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில் ஒரு ஹாரர் திரில்லர் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் நடிகை பாவனா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிக்கிறார். கொடைக்கானல் சென்னை பகுதியில் நடக்கும் கதை.

அன்னபெல்லா சேதுபதி படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக இருக்கும். அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான படைப்புகள் எனது நடிப்பில் வரவுள்ளது. விரைவில் அது பற்றிய அறிவிப்புகளும் வரும் என்றார்.

கணேஷ் வெங்கட்ராம்

Varisu Actor Ganesh Venkatram pair with Bhavana

‘குக் வித் கோமாளி’ அஸ்வினை இயக்கும் ‘தேஜாவு’ இயக்குநர்

‘குக் வித் கோமாளி’ அஸ்வினை இயக்கும் ‘தேஜாவு’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்திரிகையாளரும் அறிமுக இயக்குனருமான அரவிந்த் சீனிவாசன் இயக்கிய படம் ‘தேஜாவு’. தெலுங்கில் ‘ரிப்பீட்டு’ என்ற பெயரில் வெளியானது.

இதில் அருள்நிதி, வித்யா பிரதீப், மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்ற நிலையில் அரவிந்தின் அடுத்த படம் என்ன என்பது கேள்வியாக இருந்தது.

தற்போது அவரின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘செம்பி’ படப் புகழ் அஸ்வின் குமார் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார் அரவிந்த்.

ஷென் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக புகழ் என்பவர் தயாரிக்கிறார்.

CWC fame Ashwins next with Dejavu director

விஜய்க்கு மீண்டும் ஒரு வெற்றி கொடுக்க காத்திருக்கும் இயக்குனர்.; கண்டுக் கொள்வாரா தளபதி.?

விஜய்க்கு மீண்டும் ஒரு வெற்றி கொடுக்க காத்திருக்கும் இயக்குனர்.; கண்டுக் கொள்வாரா தளபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லால், விஜய், காஜல் அகர்வால் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படத்தை இயக்கியவர் நேசன்.

இந்த படம் 2014ல் அஜித்தின் ‘வீரம்’ படத்துடன் மோதினாலும் இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.

ஆனால் ‘ஜில்லா’ பட இயக்குனர் நேசனுக்கு அதன் பிறகு எந்த வாய்ப்புகளும் வரவில்லை.

இந்த நிலையில் இயக்குனர் பத்ரி வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,…

‘தனது நண்பர் நேசன் விஜய்க்காக ஒரு நல்ல ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருப்பதாகவும் இந்த கதையை கேட்டால் விஜய் இந்த கதையில் நடிக்க நிச்சயமாக ஒப்புக்கொள்வார்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

பத்ரி வெங்கடேசன்

Will Vijay listen script from Jilla Director

விஐபி பட டயலாக்கை பேசிய ‘வாத்தி’.; ஆந்திராவிலும் அசத்திய தனுஷ்

விஐபி பட டயலாக்கை பேசிய ‘வாத்தி’.; ஆந்திராவிலும் அசத்திய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘வாத்தி’.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இந்த படம் தமிழ் மட்டும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் வாத்தி / சார் பட டிரைலர் வெளியீட்டு விழா நேற்று ஆந்திராவில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற நடிகர் தனுஷ் தெலுங்கு ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கலந்து பேசினார்.

அவர் பேசியதாவது…

“இது என்னுடைய முதல் நேரடி தெலுங்கு படம். எனக்கு தெலுங்கு சரளமாக பேச வராது. எனவே தமிழில் பேசுகிறேன்.

வாத்தி பட கதை தமிழ்நாட்டிற்கும் ஆந்திராவுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் நடக்கும் கதைக்களம்.

அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது.

அதன் பின்னர் ரசிகர்கள் அவரை விஐபி பட டயலாக்கை பேச சொல்லி கூச்சலிட்டனர்.

நான் தமிழில் அந்த வசனத்தை பேசுகிறேன் என சொல்லி… “அமுல் பேபி.. நீ இந்த ரகுவரனை வில்லனாதானே பார்த்திருக்க.. இனிமே ஹீரோவா பார்ப்ப..” என்று பேசினார்.

Dhanush mass speech at Vaathi Sir Trailer Launch

‘LEO’ படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய நடிகை த்ரிஷா…!

‘LEO’ படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய நடிகை த்ரிஷா…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துவருகிறார்.

இதில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இளம் நடிகர் மேத்யூ தாமஸ், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் மீண்டும் இணைவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது ‘லியோ’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரின் வானிலையின் காரணமாக நடிகை டெல்லிக்கு சென்றுவிட்டார்.

லியோ

காஷ்மீரில் வானிலை -1°C முதல் -3°C வரை நிலவுகிறது மற்றும் த்ரிஷாவின் உடல்நிலைக்கு தட்பவெப்ப நிலை பொருந்தவில்லை. எனவே, த்ரிஷா காஷ்மீரில் இருந்து வெளியேறிவிட்டார்.

மேலும், விரைவில் அவர் மீண்டும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் இணைவார்.

Trisha has left the Kashmir schedule of ‘LEO’

More Articles
Follows