தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் எழில் பேசுகையில்…
” சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதில்லை என காதல் சுகுமார் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் வெற்றி பெற்ற நான்கு திரைப்படங்களும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள்தான்.
சின்ன பட்ஜெட் படங்கள் தான் இந்தத் துறையை ஆரோக்கியமாக இயங்க வைக்கிறது. சின்ன பட்ஜெட் படங்கள் தான் புதிய இளம் திறமையாளர்களின் கனவுகளை நனவாக்குகிறது.
ஈசன் போன்ற ஏராளமான புது இயக்குநர்கள் அறிமுகமாவதற்கு உதவி செய்வது சின்ன பட்ஜெட் படங்கள் தான். ஈடாட்டம் திரைப்படத்தை படக்குழுவினர் அற்புதமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தின் முன்னோட்டம்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்குவது போல் அமைந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஈசன் ஈடாட்டத்தை உருவாக்குவதற்காக பட்ட கஷ்டத்தை கேட்கும் போது சினிமா மீது ஒரு பயம் வருகிறது. இவற்றையும் கடந்து இப்படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.
Low budget movies were very stronger says Ezhil